அண்ணா பல்கலையில் ஆசிரியர் நியமனம்

அண்ணா பல்கலை யின் கீழ் இயங்கும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், 450 ஆசிரியர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகிறது. பல்கலையின் கீழ், பல மாவட்டங்களில், உறுப்பு பொறியியல் கல்லூரி (பல்கலை நடத்துவது) இயங்கி வருகிறது. இந்த கல்லூரி களில், பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியில், 450 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஓரிரு நாளில், அண்ணா பல்கலை வெளியிட உள்ளது. எவ்வித போட்டித்தேர்வும் இல்லாமல், நேர்முகத்தேர்வு அடிப்படையில், 450 இடங்களும் நிரப்பப்படும் என, பல்கலை வட்டாரம் தெரிவித்தது.

Post a Comment

2 Comments

  1. காலையில் விழித்ததும் பெரும் எதிர்பார்ப்பு., மதியம் பதற்றம், மாலை ஏமாற்றம், இரவு விரக்தி, இறைவா காப்பாற்றுவா

    ReplyDelete
  2. காலைவணக்கம்
    இன்றையபொழுது ஏமாற்றாமல் பணிநியதடை உடைய இறைவனிடம் கையேந்துவோம்

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..