தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

செப்டம்பர் - பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா என தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் கொண்டாட்டமான மாதம் எப்போதும். இப்போது, கோர்ட் மாதமாக மாறிவிட்டது!


2ஜி ஸ்பெக்ட்ரம், ஏர்செல் - மேக்சிஸ் வழக்குகளில் டெல்லியில் தி.மு.க-வும், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் அ.தி.மு.க-வும் மாட்டிக்கொண்டு முழிக்கின்றன. தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளின் விசாரணைப் படலம் தொடர்ந்துகொண்டிருக்க, ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் 27-ம் நாள் பெங்களூரு நீதிமன்றத்தில் வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசியல் செப்டம்பர் 27-க்கு முன் - பின் எனப் பிரித்துச் சொல்லும் அளவுக்கு திடீர் முக்கியத்துவம் கிளம்பி இருக்கிறது.

 undefined

தி.மு.க தலைவர் கருணாநிதி, காலையும் மாலையும் பெங்களூரு வழக்கின் தீர்ப்பைப் பற்றி விசாரிப்பதையே வேலையாகக் கொண்டிருக்கிறார். சட்டம் தெரிந்தவர்களிடம் மட்டும் அல்ல, தன்னைப் பரிசோதிக்கும் மருத்துவர்களிடமும்கூட, 'பெங்களூரு வழக்கு பத்தி என்னய்யா சொல்றாங்க... தீர்ப்பு எப்படி வருமாம்?’ என அதைப் பற்றியே விசாரிக்கிறார்.

கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் கருணாநிதி, திருவாரூரில் இருந்திருக்க வேண்டும். தொகுதிப் பணிகள், தி.மு.க பொதுக்கூட்டம் எனப் பயணத் திட்டம் வைத்திருந்தார். முதலில் தீர்ப்பு தேதி செப்டம்பர்-20 என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் தனது திருவாரூர் பயணத்தைத் தள்ளிவைத்தார் கருணாநிதி. அதாவது தீர்ப்புக்குப் பிறகு எல்லா நிகழ்ச்சிகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி, நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு... இனி, இன்னொரு முறை தனக்கான அரசியல் அதிகார வாய்ப்பு இல்லை எனச் சோர்ந்துபோயிருந்த கருணாநிதியை, மலர்ச்சியுடன் தெளிச்சிபெற வைத்துள்ளது பெங்களூரில் ஜெ.வுக்கு எதிராக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு முஸ்தீபுகள்!
அப்படித்தான் மு.க.ஸ்டாலினுக்கும்!

தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக தி.மு.க-வுக்கு தலைவர் ஆகிவிடுவோம் எனத் தனி ஆவர்த்தன குதிரையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தட்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின். தேர்தல் தோல்வி, 'இந்தக் குதிரையை நம்பி பணம் கட்டலாமா?’ என்ற பயத்தை தி.மு.க நிர்வாகிகள் மத்தியிலேயே விதைத்தது. ஆனால், சில 'விடலை’களுக்கு இது விளங்கவில்லை. ஸ்டாலினுக்கு நல்லது செய்வதாக நினைத்து அவரைத் தூக்கியும் கருணாநிதியைப் பலவீனப்படுத்தியும் இணையதளங்களில் கருத்துக்களைப் பரப்பினர். இவையெல்லாம் தனது கையெழுத்துப் பத்திரிகைக் காலத்திலேயே கருணாநிதி பயன்படுத்திய அஸ்திரங்கள்தான் என்பது, அந்தப் புதியவர்களுக்குப் புரிவதற்கு முன், 'தலைவரை வீழ்த்த நினைக்கிறாரா தளபதி?’ என்ற கெட்ட பெயர் ஸ்டாலின் மீது ஏற்பட்டது. 'கருணாநிதியா... ஸ்டாலினா?’ என்ற நேருக்கு நேர் கோதா தொடங்கியது!

ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு நெருக்கடி நெருங்கும் நேரத்தில், இப்படி ஓர் உள்குத்து கோபாலபுரத்தில் நடப்பது ஆரோக்கியமானது அல்ல என்பதை உணர்ந்த ஸ்டாலின், தி.மு.க முப்பெரும் விழாவில் தன்னிலை விளக்க முரசு கொட்டினார்... 'தலைவருக்கும் எனக்கும் தகராறு என பத்திரிகைகள் எழுதுகின்றன. தலைவரைவிட்டால் இந்த நாடு இல்லை; நான் இல்லை; நீங்கள் இல்லை. அவருக்காக இன்னும் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் உழைக்கவே விரும்புகிறேன். வேறு பதவியை விரும்பவில்லை. அண்ணன் துரைமுருகன் சொன்னதுபோல 2016-ல் தலைவர் கலைஞர் தலைமையில் கழக ஆட்சி அமையும்’ என்று ஸ்டாலின் சொன்னது கடந்த இரண்டு மாத மனக் கசப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்குமே நிம்மதியைக் கொடுத்துவிட்டது.

இணைந்தும் பிணைந்தும் ஸ்டாலின் செயல்பட முடிவெடுத்தது கட்சியினர் மத்தியில், பெங்களூரு தீர்ப்பைவிட மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இது தி.மு.க நிலவரம் என்றால்... இதுவரை தனது உடல்நலன் பற்றியும் மகனது நடிப்புத் திறன் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியல் தூக்கத்தில் இருந்து கொஞ்சம் எழுப்பியிருக்கிறது இந்தத் தீர்ப்பு தேதி. 'ஜெயலலிதாவின் சட்டவிரோத ஆட்சிக்கு எதிராக சட்டமன்ற மாண்பைக் காப்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என கருணாநிதி பலதடவை வலைவிரித்தபோது எல்லாம் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த விஜயகாந்த், 'உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என அறிக்கைவிடும் அளவுக்கு யதார்த்த நிலைக்கு இறங்கிவந்துவிட்டார். எதிர் அணியினரது வாக்குகளை மொத்தமாக வாங்க, ஐக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்துவிட்டார் அவர். பா.ஜ.க-வுடன் சேர்ந்து இருந்தால் மட்டுமே இந்த நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்; தனித்துச் செயல்படுவதால் லாபம் இல்லை என்பதுதான் விஜயகாந்தின் இப்போதைய புரிதல்!

இந்தச் சூழ்நிலையில் அதிரடியாக வைகோவும் ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலைத் தீவிரமாகக் கையில் எடுத்துவிட்டார். கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, பூவிருந்தவல்லியில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் பேசிய வைகோ, சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் ஜெயலலிதாவை மட்டுமே விமர்சித்தார். 'முல்லைப் பெரியாறுக்காக எதையுமே செய்யாதவர் தனக்குத்தானே பாராட்டு விழாவை நடத்திக்கொள்கிறார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. எதிர்க்கட்சிகளே இல்லை எனச் சொல்லும் ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தலில் தெருத்தெருவாகப் போய் எதற்காகப் பிரசாரம் செய்யவேண்டும்?’ என்று கேட்டு, 'ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்துவதற்கு கட்சிகள் ஒன்றுபட்டு கைகோக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வும் பா.ஜ.க-வை வலியப் போய் ஆதரித்து தனது இருப்பை கூட்டிக் கொண்டது.

பா.ஜ.க-வைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்போதைக்கு அ.தி.மு.க.வு-க்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இருந்த ஒரே கட்சி அதுதான். பா.ஜ.க வேட்பாளர்களை வாபஸ் வாங்கவைத்து, அவர்களது கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்யவைத்து, தேவைக்கு அதிகமான முக்கியத்துவத்தை பா.ஜ.க-வுக்குக் கொடுத்துவிட்டது அ.தி.மு.க.. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க உருவாக்கிய கூட்டணியை அப்படியே தக்கவைத்திருக்கிறார்கள். ஒரே மேடையில் தோன்றாவிட்டாலும், ஒரே கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகியோரைக் கட்டிவைத்துள்ளது பா.ஜ.க. மேலும், பேசிப் பேசி ரஜினி மனதைக் கரைத்தும் வருகிறார்கள். '2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 'ரஜினி’  எனும் அஸ்திரத்தைக் கைப்பற்றவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மோடியே ரஜினியின் வீட்டுக்கு வந்து சென்றார்.

அப்போது முதல் ரஜினியை எங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. சீக்கிரமே அவரது வருகை அல்லது ஆதரவு தாமரைக்குக் கிட்டும்!’ என்ற அபார நம்பிக்கையில் இருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். 'பா.ஜ.க பக்கம் பார்வையைத் திருப்பலாமா... வேண்டாமா?’ என்பதைத் தீர்மானிக்க ரஜினி காத்திருப்பதும்... செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்புக்குப்பிறகுதான்!

பொதுவாக, சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு எத்தகைய அனல், கனல், கொந்தளிப்பு இருக்குமோ... அந்த வெப்பம் இப்போதே தகிக்கிறது, தமிழக அரசியல் வட்டாரத்தில்!
அதில், பெங்களூரு தீர்ப்பு ஊற்றப்போவது எண்ணெயையா... தண்ணீரையா?

Post a Comment

20 Comments

  1. பணியில் சேர்ந்த அணைத்து நண்பர்களும் வாருங்கள் ராஜலிங்கத்தின் மீது மன உளைச்சல் கேஸ் போடலாம்

    ReplyDelete
    Replies
    1. Sir na today evlo dreams voda first day scl ku ponen.... name 1yr enlife la tet kaka mattum dedicate panni 108 mark and 70.99weightage vachi pona job. Same scl la ethum entha hard work um Panama just 3.75l la vankitanga...... at hum just 15 min travel la.... evlo kastama eruku theriuma.... money eruntha ellathaiumvankitalam Poland....

      Delete
  2. நமக்கு வேலை தந்த அம்மா நாளை ஜெயிக்க பிராத்தனை செய்வோம்

    ReplyDelete
    Replies
    1. Anonymous DVD பையா நீ இன்னும் சாகல

      Delete
  3. இன்னும் எங்கள் பள்ளியில் நால்வரில் ஒருவர் கூட வந்து சேர வில்லை. எப்போது எப்போது என்றவர்கள் இப்போது வரை வரவில்லை.

    ReplyDelete
  4. i cordially grateful to those who contributed their valuable time to support us and who cheated us for them thanks is bcz they united us and make us to stand in a team, and special thanks to mani, sri only, elajeran, prathaban, vijaikumar chennai sir,suruli, madurai tet sir,and sooooo many hearts dying to provide valuable information to make us to stand so high,,,now wat a movement. my deep hearted wishes to all fresh teachers work for poooooor children ,,plssssss,,,

    ReplyDelete
  5. They have alloted X std B sec for me. I am going to handle X English and science social English for VI std English medium. They asked me to develop communication skills among them. I am very excited. As i have studied and worked only in English medium this environment is totally different for me... Of course i felt that i am working meaningfully satisfying my soul. Job satisfaction is very much important for a staff...
    I am satisfied with school environment...
    Thank GOD

    ReplyDelete
    Replies
    1. unakellam vela koduthathe perusu idhula sadis.. baction ham...

      Delete
    2. O...GOD
      This anonymous is in frustration. Please wish him or her to be in the selection list of next tet. I beg you to grant him success and peace....

      Delete
  6. hai friends nan indru duty join panni 9.30 ku sign panni achu afternoon exam duty pathachu i am so happy about to share this. Thank so much for every goodluck good nite friends.

    ReplyDelete
  7. Dear 82-89 candidates, when u r correcting exam paper if a person scores 34 out of 100 will u put pass for him or fail him, what u will do because u r failed persons right so I am asking u this question

    ReplyDelete
    Replies
    1. even though u failed u got gov job, we passed persons are in home. Valga Tamilnadu government valarga tamilnadu government.

      Delete
  8. First poai unga ammava kapathupa!!!

    ReplyDelete
    Replies
    1. பஞ்சு எங்ககிட்டிய
      தம்பி
      மரியாதயா ஒடிப்போயிரு நாய் வன்டி வருது

      Delete
  9. Good morning friends..hav a nice day.

    ReplyDelete
  10. அடங்கப்பா
    இந்த அனானிமஸ் பன்ற வேல
    தாங்களடா சாமி
    சரியான கரப்பான் பூச்சி பயடோவ்

    ReplyDelete
  11. Goundar sir
    I am correcting paper

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..