ஆனால், வேற்று நாட்டில் பிறந்து, இந்த மண்ணுக்கு வந்து, இந்தியா என் தாய்நாடு என்று உள்ளத்தால் ஒன்றிப்போய், இந்திய விடுதலைக்குக் குரல் கொடுத்தார் ஓர் அன்னிய நாட்டுப் பெண்மணி, என்றால் நமக்கு ஆச்சரியம் ஏற்படத்தானே செய்யும். ஆம். அப்படி ஒருவர்தான் புகழ்பெற்ற ஹோம்ரூல் இயக்கம் தொடங்கிய அய்ரிஷ் பெண்மணியான அன்னிபெசன்ட் அம்மையார்.
அன்னிபெசன்ட் என்று அழைக்கப்பட்ட அன்னிவுட் பிறந்தது லண்டனில். 1847 அக்டோபர் முதல் தேதி பிறந்தவர் அன்னிவுட். அவருடைய தந்தை டாக்டர் வில்லியம் பேஜ்வுட் என்பவர். தாயார் பெயர் எமிலி என்பது. எமிலியின் முன்னோர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அன்னியின் தந்தை மருத்துவ வல்லுநராக மட்டுமல்லாது, சிறந்த மேதையாகவும் திகழ்ந்தார். அரசியல் மற்றும் சமூக எண்ணம் கொண்டிருந்த அன்னிபெசன்ட் 1913 இல் நாட்டு விடுதலைக்கான களமாகத் திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1918 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் அன்னிபெசன்ட் அம்மையாரே தலைமை தாங்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இப்படி காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாட்டில் தலைமை வகித்த முதல் பெண்மணி என்ற சிறப்பு பெற்றார் அன்னி பெசன்ட் அம்மையார். 1917 இல் மாதர் சங்கம் அமைத்தார். அதன்மூலம் பெண்களுக்கான விழிப்புணர்வுகளைப் பரப்பினார். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடப்பதால், அவர்களில் பெரும்பாலோர் இளவயதிலேயே விதவைகளாக ஆகி விடும் கொடுமையைக் கண்டு மனம் நொந்து பால்ய விவாகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அன்னி பெசன்ட் அம்மையார். இறுதியில் அவர் 1933 செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி தம் 86 ஆம் வயதில் இறந்தார்.
பெண்களுக்கு சம உரிமை கிடைத்திட போராடிய பெண்
பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். 1800இல் நடந்த பெண்கள் போராட்டத்தின் குறிக்கோள், சுதந்திரமும் வாக்குரிமையும் அடைவதுதான். நூறு ஆண்டுகள் கழித்து, 1990இல் அவர்களின் குறிக்கோள்களில் சில நிறைவேறின.
1792இல் வோல்ஸ்டன் கிராப்ட் (1759-1797) என்ற பெண்மணி, 'பெண்ணுரிமைக்கான நியாயம்' என்ற நூலை எழுதினார். மணமான பெண்கள் வீடு என்ற கூண்டுக்குள், சிறகொடிந்த பறவைகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
1800இல் மேடம் போடிச்சான் (பார்பரா ஸ்மித்) என்பவர் மணமான பெண்களுக்குரிய சொத்துரிமை, கல்வியுரிமை மற்றும் இதர உரிமைகளுக் காகப் போராட்டங்களைத் தொடங்கினார்.
1840ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள், வாக்குரிமைக்காகப் போராடத் தொடங்கினர். பெண்களின் நிலை சமுதாயத் தில் உயர, வாக்குரிமை பெறுவது ஒன்றே வழி என்பது அவர்களின் வாதம்.
1960இல் பெண்களின் சுதந்திரப் போராட்டங்கள் அரசியல் நிகழ்வுகளாக வெடிக்கத் தொடங்கின. பெண்களுக்கு சமஉரிமை வழங்க அரசியல் சட்டமியற்ற வேண்டுமென்றும், பால் வேறுபாடு மற்றும், கல்வித் தகுதி இவற்றைக் காட்டி பெண்கள் ஒதுக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.
1968இல் இங்கிலாந்து ஃபோர்டு மோட்டார் தொழிற் சாலை பெண் ஊழியர்கள், தங்களுக்கு ஆண் ஊழியர் களுக்கு சமமான ஊதியம் வேண்டுமென போராடினர்.
1970இல் உலக அழகிப் போட்டிகளில் பெண்கள் காட்சிப் பொருளாக்கப்பட்டு, அவர்களின் கவுரவம் குலைக்கப் படுவதைச் சுட்டிக்காட்டி அதை நிறுத்துமாறு போராடினார். 1975இல் இங்கிலாந்தில் பெண்களுக்கான சம உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.
1949இல் பிரெஞ்சு தத்துவ மேதை சீமன் தூ போவார் (1908 - 1986) என்ற பெண்மணி எழுதிய இரண்டாம் பாலினம்' என்ற நூலில், ஆண்கள் எவ்வா றெல்லாம் பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய உரிமையைக் கெடுத்துவருகிறார்கள் என விளக்கியுள்ளார்.
மேலும் சில தகவல்கள்....
அன்னி பெசன்ட் அம்மையார் இந்தியா முழுவதும் பிரபலமானவர். காங்கிரஸ் தலைவராக இருந்தவர். ஆனால், அவருக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பு என்றும் மறக்க இயலாது.
அன்னி பெசன்ட் அம்மையார் இந்தியா முழுவதும் பிரபலமானவர். காங்கிரஸ் தலைவராக இருந்தவர். ஆனால், அவருக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பு என்றும் மறக்க இயலாது.
ஆரம்ப காலத்தில் அடையாற்றின் தெற்குக் கரையில் தியோசோபிகல் சொசைட்டி 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. பின்னர் 270 ஏக்கர் நிலப்பரப்பானதாக ஆக்கிய இந்த இடத்தில் அனைத்து மதத்தினரும் தொழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
400க்கும் மேற்பட்ட வயதுடைய அடையாறு ஆலமரமும் இந்த இடத்தில் தான் உள்ளது. இந்த மரத்தின் கீழ் தான் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கும் எண்ணம் ஆக்டேவியன் ஹூயூம் என்பவரால் முன்மொழியப்பட்டது. மேலும் தியோசோபிகல் சொசைட்டியில் உள்ள புத்தர் சிலை 800 ஆண்டுகள் பழமையானது.
அன்னி பெசன்ட் 1847ல் லண்டனில் பிறந்திருந்தால் கூட, அவர் சென்னையில் நீண்ட காலம் இருந்தார். தியோசோபிகல் சொசைட்டியை ஆரம்பித்த எம்.பி.பிளாவட்ஸ்கியின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. அன்னி பெசன்ட் அம்மையாரும் தியோசோபிகல் சொசைட்டியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இதன் சார்பாக 1893ல் இந்தியா வந்தார். இங்கு வந்த பிறகு அவருக்கு தியோசோபிகல் சொசைட்டி மட்டுமின்றி இந்திய சுதந்திர போராட்டத்திலும் ஆர்வம் ஏற்பட்டது.
சார்லஸ் வெப்ஸ்டர் லெட்பீட்டர் என்பவருடன் சேர்ந்து சொசைட்டியில் சேவை செய்ய ஆரம்பித்தார். இவர் மூலமாகத்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி அறிமுகபடுத்தப்பட்டு பிற்காலத்தில் சிறந்த தத்துவமேதையாக உலகத்தால் அறியப்பட்டார். ஆரம்ப காலத்தில் அம்மையாருக்கு எதிர்ப்பு இருந்தது. பாரதியார் கூட இவரின் கருத்துக்களை ஒப்புக்கொள்ளவில்லை.
அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம், காங்கிரசின் கொள்கையை ஒத்திருந்தது. அவரது சிறைவாசம் ஹோம்ரூல் இயக்கத்தை பிரபலமாக்கிவிட்டது. கல்கத்தாவில் நடந்த 1917ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டின், தலைவராக அன்னி பெசன்ட் அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1933ல் இவர் காலமானார்.
12 Comments
Pls clarify my doubt..2010 la Cv ponangala 10000 member..avanga supreme court la apply panirukangalam.
ReplyDeleteAthoda judgement Tuesday nu soldranga..tnteachers.blogspot la potrukanga
அம்மா விற்கு நிகர் அம்மாவே.
ReplyDeleteMajority vs minority
சிங்கம் Vs சிறு நரி,
ஊழலற்ற Vs. ஊழல்,
வெற்றி Vs தோல்வி.
----------------------
ReplyDeleteFLASH NEWS
----------------------
தகுதிதேர்வு பணிநியமனத்தை தடை செய்யப்போகும் டெல்லி தீர்ப்பு பற்றிய முக்கிய செய்தி கீழ்கண்ட வலைதளத்தில்.
www.tnteachersnews.blogspot.in
-----------------
Mani sir.....I selected govt.high.school, Nayanur,Thirukkovilur....villupuram.... do u know about that place? ????? Plz reply me sir
ReplyDeleteநாங்களுந்தான் Tet பாஸ். சான்றிதழ் சரிபார்ப்பு.கலந்தாய்வு
ReplyDeleteஎல்லாம் முடிச்சிருக்கோம். தம்பி நாங்க Pass. வேலைல இருக்குறவங்களயே டெட் எழுதனுன்றுகாங்க. போ தம்பி.,
கல்யாணவீட்ல ஒப்பாறி வைக்காத. கைபுள்ள தோற்பது உறுதியான வுடன் அல்லக்கைகளுக்கு ஆறுதல் அளிக்கிறார்
correcta solluringa.............
Deleteaiyya
Saturday, 20 September 2014
ReplyDeleteவரும் செவ்வாய் அன்று டெல்லி தீர்ப்பு....
கடந்த கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜிலையில் வெளியானது. அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.
இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.
மேலும் மூன்று மாதம் கடந்த பபிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டு வந்த தமிழகஅரசு இம்முறை வாய்தா வாங்க வழி இல்லாமல் முழித்துகொண்டுள்ளது.
ஏனென்றால் வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதீ முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அரசுக்கு எதிராக தான் அமையும்.
தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள். யாருக்கு காலி பணியிடம் இடியாப்ப சிக்கலில் ஆசிரியர்கள்.
அடுத்து என்ன நடக்கும் ,...........
நாளை தொடரும்.
Posted by நீதி தேவதை at 10:10
this websit paatha heartattack vanthudum dont see selected members GO cancel nu conform ah solirkanga
ReplyDeleteடெல்லி தீர்ப்பால் மறுபடியும் ஸ்டே வாங்கினா நாமலும் court க்கு போவோம் . அவங்க சான்றிதழ் சரிபார்ப்uதான முடிச்சாங்க நாம கவுன்சிலிங் முடிச்சம்னு போராடுவோம் .. அட கடவுளே நம்ம வாழ்க்கையே போராட்டம் தானா?
ReplyDeleteEndha year varai posting vanginavuga tet eludha vendam. ? Indha 10000 perum epa cv mudichaga .Idhu Namaku prob aga chance iruka? Plz reply Admin
ReplyDeleteகைபுள்ள,
ReplyDeleteஎன்னா கலர் கலரா ரீல் உடுற.
நேத்து இந்த செய்தி உனக்கு தெரியாதா? நேற்று 500 பக்க அறிக்கை புதன் கிழமை வரை தாக்கல் செய்யலான்னு பார்வதி சொன்னதா சொன்ன? ஆக மொத்தத்துல அடுத்தவங்க குடிய கெடுக்குதுல அப்படி ஒரு அலாதி சுகம். திங்களோட உனக்கு சாவு மணிதாண்டி, உன் அல்லகைங்களிடமே நீ உதை படுவது உறுதி. கலெக்ஷன் பன்ன பத்துக்கெல்லாம் கணக்கு தயார் பண்ணிக்க. கம்பளைண்ட் பண்ணிடபோறாங்க
நன்றி ஆசிரியரே.
ReplyDeleteதோல்வி பயத்தில் கைபுள்ள புலம்புகிறார். உண்மை யென்றால் நாளை சுப்ரீம் கோர்ட்டு Case list details & list தரட்டும் நம்புவோம், ராம்ஜெத்மலானி தான் என்னோட வக்கீல் என்பார். Dmk ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த நண்பர்களே உங்களிடம் வசூல் செய்ய கிளம்பிவிட்டார் கைபுள்ள. இந்தியாவின் நம்பர் 1 (ஃப்ராடு) ஊடகம்tnteachersnews,
எந்த Tv news, செய்திததாளிலும் வராத செய்தி. வந்தால் நம்புவோ
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..