திக்குத்தெரியாத தொலைவில் பணியிடங்கள்.

பட்டதாரி ஆசிரியர் நியமன கலந்தாய்வில் நீதிமன்ற தடை யால் பணி நியமனஉத்தரவு வழங்கப்படவில்லை. தொலைதூர இடங்களே காட்டப்பட்ட தால் கைக்குழந்தைகளுடன் வந்திருந்த ஆசிரியைகள் இடங்களை தேர்வு செய்ய முடியாமல் திணறினர்.

தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க கடந்த ஒருவாரமாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதுநிலை, இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு முடிந்து விட்டது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு இடம் கூட இல்லை என அறிவித்து கலந்தாய்வு நடந்தது.இது போல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் காலி இடங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் உள்மாவட்ட கலந்தாய்வு நடைபெறவில்லை.இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று வெளி மாவட்ட காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட் டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 400 முதல் 600 ஆசிரியர்கள் வரை பாடவாரியாக பங்கேற்றனர். 

இவர்களில் பெரும்பாலானோர்பெண்கள் ஆவர். பலர் கைக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இவர்களில் சிலர் கலந்தாய்வு நடந்த வளாகத்தில் பிள்ளைகளை தொட்டில்கட்டி தூங்க வைத்தனர்.
நெல்லை சாப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்தாய்வில் 448 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.பாட வாரியாக சீனியாரிட்டிபடி தனித்தனியாக காலியிடங்கள் காட்டப்பட்டன. இது தொடர்பான பட்டி யல் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. இதை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம்,விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற தொலைவில் உள்ள வடமாவட்டங்களிலேயே அதிக காலியிடங்கள் இருந் தன. அந்த மாவட்டங்களில் சிறிய நகரம் அல்லது கிராமங்களில் பள்ளிகள் இருந்தன.அந்தப்பகுதியை கண்டுபிடிக்க தமிழ்நாடு வரைபடத்தின் உதவியுடன் ஆசிரியர்கள் முயற்சி செய்தனர். திக்குத்தெரியாத தொலைவிலேயே பணி யிடம் இருப்பதை அறிந்து எந்த இடத்தை தேர்வு செய்வது என தெரியாமல் ஆசிரிய ஆசிரியைகள் திகைப்படைந்தனர். இதனால் ஒவ்வொருவருக் கும் கலந்தாய்வு முடிய அதிக நேரம் பிடித்தது.நேற்று முடியாத பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வையொட்டி சாப்டர் பள்ளி வளாகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பணி நிய மனம் வழங்க மதுரை உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளதால் இடங்களை தேர்வு செய்தவர்களிடம் அவர்களது பணியிடத்தை உறுதி செய்து கையொப்பம் பெற்றுஅனுப்பினர். பணி நியமன உத்தரவு பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதனால் உடனே பணியில் சேரலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த ஆசிரியர்கள்ஏமாற்றத்துடன் சென்றனர்.

Post a Comment

16 Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. we are 20 selected candidates waiting for your response

      plscontact 9788855419

      Delete
    2. வலைதல நிர்வாகிக்கு சிறு வேண்டுகோள்: இனிதே நிறைவு பெற்ற பணி நியமன கலந்தாய்வில் பல்வேறு மாவட்டத்‌தினர் தங்களுக்கு தெரியாத இடத்தை தெரிவு செய்துள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு கட்டுரை வெளியீட்டு அந்தந்த பள்ளியின் விபரம் தெரிந்த நபர்களுடன் கருத்து பரிமாறிக்கொண்டால் பெரும் உதவியாக இருக்கும்.

      Delete
  2. இது நாம் உடனடியாக ஏதெனும் செய்தாக வேண்டிய நேரம்...இனியும் காத்துக்கொண்டிருந்தால் நமக்கு தான் ஆபத்து..நண்பர்களே உங்கள் கருத்தை கூறுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. prathap AN sir,

      நீங்கள் சொல்வது 100% உண்மை.தயவு சேது உங்களது மின்னஞ்சல் முகவரியை எழுதுங்கள்.அல்லது selectedcandiadtestet2013 @gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது அலைபேசி எண்ணை அனுப்புங்கள்.

      Delete
    2. ANY NEWS PLS INFORM ME veldocuments@gmail.com

      Delete
  3. NOW THE INBORN TEACHERS IS BRAND NEW AND SMART....the official address theinbornteachers.wordpress.com

    ReplyDelete
  4. உறுதியாக நமக்காக நாம் தான் போராட வேண்டும் நண்பரே... நாமும் படித்து கடினப்பட்டு தான் மதிப்பெண்கள் எடுத்தோம்.. ஏன் அவர்கள் சொல்லியது போல 11 ஆண்டுகளுக்கு முன் மதிப்பெண்கள் எடுப்பது சிரமமென்றால் அந்த 11 முந்தைய கால கட்டத்திலே நாம் ஓரளவு நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளோம். இன்னும் நாம் என்னதான் செய்ய.

    முந்தைய கால கட்டங்களில் நல்ல மதிப்பெண்களிருந்தால் தான் மதிப்பெண்கள் அதிகமாகுமென்றார்கள் அதிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்..

    தகுதிதேர்வில் அதிகம் பெற்றால் தான் மதிப்பெண்களிருந்தால் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை அதிலும் போட்டியிட்டோம் ஆனால் இப்படியே எத்தனை காலம் தான் போட்டியிட்டுகொண்டே இருப்பது...

    ஒரு முறையில் எல்லோரும் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது ஆனால் இப்படியே புதிய முறைகள் வந்துகொண்டிருந்தால் எப்போது தான் வேலைக்கு செல்வது.. இல்லை அந்த முறையால் நமக்கு பாதிப்பென்றால் நாம்தான் என்ன செய்வது...

    ReplyDelete
  5. Sir my mail id prathapan117@gmail.com

    ReplyDelete
  6. பணி நியமன கலந்தாய்வும் முடிவடைந்த நிலையில் பணியில் சேரமுடியாமல் இருக்கும் இந்த நிலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் தீர்வு கிடைக்குமா.? தெரிவு செய்யப்பட்ட நபர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்க.

    ReplyDelete
    Replies
    1. உறுதியாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்க்கான வழியை தேடுவோம்...

      Delete
  7. மதுரை, திண்டுகல், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய தென் மாவட்ட தெரிவு செய்யப்பட்டவர்கள் சார்பாக தங்களின் இந்த சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  8. AMAM NANBARGALE... PORATHIL EEDUPATTAVARGALAI VIDA NAMATHU NILAI THAN VEDHANAIKKU URIYADHU. NAN EVVALAVU ETHIRPARPODU COUNSILG IL KALANTHU KOLLA SENDROM. STAY ORDER ENDRU NAM VAYITRIL ADITHARGAL... ETHARKU KADAVUL THAN KOODIYA SEEKIRAM VAZHI KATANUM

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..