டிப்ளமோ நர்சிங் படிப்பில் காலி இடம் இல்லைஇன்று மருத்துவம் சார் படிப்பு கலந்தாய்வு

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முடிந்தது. எல்லா இடங்களும் நிரம்பி விட்டதாக, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்று, மருத்துவம் சார் பட்டப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது.

தமிழகத்தில், 23 அரசு நர்சிங் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, 8,101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 15ம் தேதி துவங்கியது.நேற்று, நான்காவது நாளாகவும் கலந்தாய்வு நீடித்தது. நேற்று மட்டும், 514 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். நேற்று மாலை, கலந்தாய்வு முடிந்த நிலையில், மொத்தம் இருந்த 2,000 இடங்களும் நிரம்பி விட்டன; காலி இடங்கள் ஏதும் இல்லை என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் இன்று துவங்குகிறது. இந்த கலந்தாய்வு, 26ம் தேதி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1 Comments

  1. Nee Magan Ney Illa, Nee Eppadi Maagan Aga Mudiyum

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..