2 பெண் குழந்தைகள் இருக்கும் வீடு

2 பெண் குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு என்கிறது புதிய ஆய்வு.


`ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்என்று நம்மூரில் பழமொழி சொல்வார்கள். முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் `மகாலட்சுமியே வந்துவிட்டாள்என்று மகிழும் பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால் அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால், `ஏழு லோகத்திலும் இல்லாத சங்கடம் எனக்கு வந்துவிட்டதுஎன்று வருந்த தொடங்குவார்கள். இனி அப்படி சங்கடப்பட வேண்டியதில்லை. இரண்டும் பெண் குழந்தைகள் உள்ள வீடுதான் மிகமிக சந்தோஷமான குடும்பம் என்று புதிய ஆய்வில் கண்டுபிடித்திருக் கிறார்கள்.
ஆயிரக்கணக்கான குடும்பங்களை ஆய்வு செய்ததில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே
ஒரு வீட்டில் இரண்டுமே பெண் குழந்தைகளாக இருந்தால் அந்தக் குழந்தைகள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளாதாம். ஒருவருடன் ஒருவர் இணைந்து விளையாடுவார் களாம். அரிதாகத்தான் அம்மா, அப்பாவுக்கு தொல்லை தருவார்கள். நீங்கள் போகக்கூடாது என்று தடுக்கும் மண்மேடு, புழுதியில் எல்லாம் சென்று விளையாடாமல் சமர்த்து என்று பெயர் வாங்குவார்களாம்.
அதேபோல பெண் குழந்தைகள் அதிகமாக கூச்சல் போடுவதில்லை. அவர்கள் ஒருவரை யொருவர் கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொள்வது ரொம்ப அபூர்வம். அவசர நேரத்தில் அம்மாவிடம் செல்லமாக இருக்கும் குழந்தையை அப்பாவிடம் விட்டுச் சென்றாலும் அடம்பிடித்து அழ மாட்டார்களாம். அந்த சூழலுக்கேற்ப பெற்றோருடன் அடம்பிடிக்காமல் பிரியமாக இருந்து ஒத்துழைப்பார்களாம்.
அக்கம் பக்கத்தவர்கூட இந்த சகோதரிகளை விரும்ப தொடங்கிவிடுவார்கள் என்கிறது ஆய்வு முடிவு. இந்த குழந்தைகளின் கலகலப்பான பழக்கவழக்கங்களும், சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் குணம், ஒத்துழைக்கும் குணம் போன்றவை மற்றவர்களையும் கவர்ந்துவிடுகிறது. அதனால் சுற்றியுள்ளவர்களும் இவர்களின் `விசிறிஆகிவிட, வீட்டிலும், வீட்டுக்கு வெளியிலும் ஒரு சந்தோஷமான சூழல் உருவாகிவிட வாழ்வே வசந்தமாகிவிடுவதாக தெரிய வந்துள்ளது.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்தபடியாக ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள வீடு ஓரளவு சந்தோஷமாக இருக்கிறதாம். இந்தக் குழந்தைகள் 86 சதவீத அளவில் ஒருவருக்கொருவர் பாசத்துடன், இணக்கமான நட்பு காட்டுவதாக தெரிய வந்துள்ளது.
சந்தோஷம் அனுபவிப்பதில் மூன்றாவது நிலையில் இருக்கிறார்கள் 2 ஆண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினர். மற்றவருக்காக பல விஷயங்களை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்பதில் ஆண் குழந்தைகள் கெட்டிக்காரர்களாம். ஆனால் இவர்கள் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் அரவணைப்பைத்தான் விரும்புவதாக தெரிகிறது. மற்றவர் பொறுப்பில் விட்டுவிடும் சூழல் வந்தால் அடம்பிடிப்பார்கள் என்கிறது, ஆய்வு.


Post a Comment

13 Comments

  1. Yarkathu theriuma kooduthal paniyidathuku epa salary go nu

    ReplyDelete
  2. Sir ippothaikku vara mari therila. So namakku salary next month than.. I asked my school and they said like this

    ReplyDelete
  3. Nice artical Suruli Vel Sir . even my parents have 2 girl child. Me and my sister. The above words are really true sir. We are living like that and feel very proud of it. Thanks sir

    ReplyDelete
  4. Hi sudha next month kandipa varuma

    ReplyDelete
  5. எனக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள் சார். நான் படுற பாடு சொல்லி மாளாது சுருளி சார். பயபுள்ளைங்க இரத்தம் பாக்காத நாளே இல்ல சார் இரண்டு பேரும் வானவராயன் வல்லவரான் சார்.
    ஸ்...,ப்பா....

    ReplyDelete
  6. Salary Next month varalam nu sonnanga.engalukku bank pass book number kuda innum vangala sir. G.o varama ethum panna mudiyathu nu sollitanga. C.p.f from kuda tomorrow than fill panna poren.. Eppadiyum next month vanthudum nu than sollaranga sir.

    ReplyDelete
  7. In my scl nanum oru sir um creative posting sir. Enga 2 per kitta irunthu mattun pass book number vangala. INI Mel than thara porom.appadi thanthalum g.o vantha appuam than salary allot agum nu sollutanga

    ReplyDelete
  8. Sir Paper 1 kuduthal paniyedatthirku GO vanthu vittadhu endru sollukerarkel .paper 2ku eppa varum endru ......
    yaravathu vesaritthu sollungal sir
    Mani sir .suruli sir .vijay sir pls help me sir

    ReplyDelete
  9. Sir enga sch LA cps matum apply panom...ena frnd kooduthal paniyidatha thogupoothiyathula poduvanganu soldra.unmaya sir.kastama iruku

    ReplyDelete
  10. Department test new teachers eluthalama? Enna Use?

    ReplyDelete
  11. கேள்வி திருவிழா குரூப் 4 8ம் வகுப்பு உரைநடை கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் www.gurugulam.com தற்போது

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..