குரூப் 4 தேர்வு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சியை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்துகிறது.


இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெளியிட்ட செய்தி: தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இதர பணியிடங்களுக்கான சுமார் 4963 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்த அறிவித்துள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடக்கிறது.

 பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி, வயது உச்ச வரம்பு, இதர தகுதிகளுக்குள்பட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் (பொது) தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதத்தில் திங்கள் முதல் சனிóக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 பணி வரை தொடர்ந்து நடத்தப்படும். இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் சேர பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகல், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த அத்தாட்சி ஆகியவற்றுடன் சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக். 28-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

1 Comments

  1. வேறு மாவட்டத்துற்கு பணியிட மாற்றம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்

    rajarajacholanveera@gmail.com

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..