ஹீரோ வழங்கும் புதிய எலெக்ட்ரிக் சைக்கிள்!

உலகில் அதிக அளவில் சைக்கிள்களைத் தயாரிக்கும் ஹீரோ நிறுவனம் சிறுவர்களுக்காக டிஸ்னி மற்றும் மார்வல் பிராண்ட் சைக்கிள்களை
அறிமுகம் செய்து இந்த சைக்கிள்களில் மிக்கி மௌஸ், ஸ்பைடர்மேன் உள்ளிட்ட சிறுவர்களைக் கவரும் பொம்மைகள் இடம்பெற்றுள்ளாதால் மூன்று வயது முதல் 12 வயது பிரிவினரை பெரிதும் கவர்ந்து விட்ட ஹீரோ நிறுவனம் அவதார் என்னும் பெயரில் எலெக்ட்ரிக் சைக்கிளை நேற்று அறிமுகம் செய்துள்ளது. இதனுடைய விலை 18,990 முதல் 19,290 ரூபாயாகும். பெரு நகரங்களில் இருக்கும் கார்ப்பரேட் இளைஞர்களை குறிவைத்து இந்த சைக்கிளை வெளியிட்டிருக்கிறது ஹீரோ. சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புணே, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கும்.

மெட்ரோ நகரங்களில் அலுவலகத்துக்குச் செல்லும் இளைஞர்களுக்கு இந்த சைக்கிள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஹீரோ இகோகுரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவீன் முன்ஜால் தெரிவித்தார். இந்த சைக்கிளில் 6 கியர்கள் இருக்கின்றன. 5 முதல் 6 மணி நேரம் லித்தியம் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும். அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகம் செல்லக்கூடும்.
இந்த சைக்கிளை இணையதளம் மூலமாகவும் வாங்கலாம். இது போன்ற சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத எலெட்ரிக் சைக்கிள்களுக்கு புதிய கொள்கைகளை மத்திய அரசு அறிவிக்கும் போது மேலும் விரிவாக்கம் செய்வோம் என்றார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சோகிந்தர் கில்.



Post a Comment

2 Comments

  1. TET 2013-----------Selected candidates....................
    1 st Month salary credited today...........................
    enjoy sweet edunga kondadunga...........................
    ALL THE BEST ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,GOD BLESS U ALL

    ReplyDelete
  2. creative postingsku epo salary varum frnds???

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..