நன்றி மறந்த சிங்கம் . . .

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை
கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.
“”மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.
அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “”மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.
“”நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன்.



“”மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “”சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே… அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,” என்றான்.

“”என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?” என்றது சிங்கம்.

“”கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றான் மனிதன்.
அவ்வழியாக ஒரு நரி வந்தது.

“”இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

“”எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே…” என்றது.
அனைத்தையும் கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

“”நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,” என்றது நரி.
உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

“”நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்…”
“”எந்தக் கூண்டிற்குள்?” என்றது நரி.
“”அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.
“”எப்படி அடைந்து கிடந்தீர்கள்?” என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

“”நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!” என்று கத்தியது சிங்கம்.
“”நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல.

உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,” என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

குறள்நீதி:  
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு.”

ஒருவர் செய்த நன்றியை மறப்பவர்க்கு என்றுமே உயர்வில்லை. ஆகவே, பெற்றவுதவி சிறியதோ/ பெரியதோ என்றுமே நன்றி மறவாது வாழ்வோம்

Post a Comment

19 Comments

  1. nallave irukku..............
    school poi vantahcha

    ReplyDelete
  2. Nantri.... Ithu pontra nanneri kathaigalai thinamum pathivu seithal nantraga irukum

    ReplyDelete
  3. இது யாருக்கு சொல்றீங்கப்பா?????????

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை உங்களுக்காக கூட இருக்கலாம்.

      Delete
  4. Hai ge pls clarify any any one mr .mani sir
    i have join school but Antha schoola maths vacunt ella but cll our school HM to CEO office
    He s told schoolla join panna sollunga.

    So vacunt ella analum join panniten ehil ethavathu problem varuma sir pls tell me sir

    ReplyDelete
  5. amaa ninga evvalu nala enkee. ponai???? ippo vanthu. vilakkam. kodukkuraaa... unku velai kitaitha vudan. engalai. marathittayaa??

    ippo vanthathin nokkam???

    ReplyDelete
  6. Super bro very nice

    ReplyDelete
  7. sir appadiyel ondrum ellai nan daily per day 10times namathu valaithalaththirku varuven but comment pannuvathillai en wife kuda thettuvanga ungalukku paithiyamtham pudikkapoguthu endru

    ReplyDelete
  8. Enjoying life peacefully. Thanks to selected candidates.com. sir why don't we change our site's name please Consider

    ReplyDelete
  9. mani Sir enkeee poneeeelllll?!?!!


    amaa ninga evvalu nala enkee. ponai???? ippo
    vanthu. vilakkam. kodukkuraaa... unku velai
    kitaitha vudan. engalai. marathittayaa??
    ippo vanthathin nokkam???

    ReplyDelete
  10. mani Sir enkeee poneeeelllll?!?!!


    amaa ninga evvalu nala enkee. ponai???? ippo
    vanthu. vilakkam. kodukkuraaa... unku velai
    kitaitha vudan. engalai. marathittayaa??
    ippo vanthathin nokkam???

    ReplyDelete
  11. நன்றி மறந்த சிங்கம் yaruu???

    Bombay la. enna pannitttu irunthiga?!

    sollunga sollunga. ..,
    .. evvvaluuuu. naall..,,

    enkee ??! yaru????





    ReplyDelete
  12. Please anybody have msc maths (2nd year) ,study material please publish in website.

    ReplyDelete
  13. சிறந்த கதை சிறந்த கருத்து

    ReplyDelete
  14. Adtw list varuma brothers?

    Pls unga school-a hm or teachers kitta kettu sollunga

    PLoS
    Pls
    Pls
    Pls
    Pls
    Pls
    Pls
    Pls

    ReplyDelete
  15. mani sir very gud story very niv\ce moral

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..