தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்


தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்... தினமும் 16மணிநேரங்கள் பணியாற்றும் அவலநிலை

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் விடுதியில் தங்கி வேலைப்பார்க்கும் இளங்கலை ,முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலை 4 மணிமுதலே தங்களுக்கான வகுப்புகளை கவனிக்க பாடம் நடத்த தேர்வை கண்காணிக்க சிறப்பு வகுப்பு என இரவு 10மணிவரை மற்றும் அதற்கு மேலும் தொடர்ந்து பணியாற்றிவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்காக அவர்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகங்களால் குறைவான ஊதியமே அளிக்கப்படுவதாகவும் ஆனால் அடிமைகளை நடத்துவது போல் பணிச்சுமை கொடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட மதியம் 1 மணிவரையிலும் பின்னர் இரவு 8 மணிமுதல் 10.30வரை வகுப்புகளை எடுக்க வற்புறுத்துவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.. இதனை தடுக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.. 8 மணிநேரத்திற்கு மேல் வேலைபார்க்க கட்டாயப்படுத்துவது சட்டப்படி பெருங்குற்றம் என்கிற நிலையில் இதுபோல் தங்களின்சுய லாபத்திற்காக பட்டதாரிகளை பாடாய் படுத்தும் தனியார்பள்ளிகளுக்கு அரசு உடனடியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்.. இல்லாவிடில் பல பட்டதாரிகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகி நோயாளிகளாக மாறிவிடுவர்...... கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க மட்டுமே நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு...இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார்பள்ளி நிர்வாகங்களை கண்டிக்க தனிகவனம் செலுத்தாதது வருத்தமளிக்கிறது.. விரைந்து இதற்கென .நடவடிக்கை எடுக்குமா.. ??என்ற எதிர்பார்ப்பில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் உள்ளனர்.


Post a Comment

9 Comments

  1. Creative postku GO epa varumnu therinja solunga suruli sir..

    ReplyDelete
    Replies
    1. தகவல் கிடைத்த உடன் பதிவிடப்படும்........

      Delete
  2. s sir, creative posting GO Pathi solunga pls

    ReplyDelete
  3. jaanu mam suruli sir ena sonanganu solungalen, tamil font padika mudila pls pa, i am manju

    ReplyDelete
  4. sir english fontla ena msg creative posting pathinu anupungalen pls

    ReplyDelete
  5. k thank u so much sir

    ReplyDelete
  6. நாமக்கல்லில் தான் இந்த கொத்தடிமை முறை.ஆசிரியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி முதலாளிகள்.இவர்கள் விட்டின் சுவற்றினை அல்லது காரினை தொட்டுப்பார்த்தால் சிகப்பாக இருக்கும் அது ஏல்லாம் ஆசிரியர்களின் ரத்தம்.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..