தாகத்துக்கு
நாம் வாங்கும் தண்ணீர் பாட்டில்கள் பி.ஐ.எஸ். (ஐஎஸ்ஐ)
தரத்தோடு இருக்க வேண்டும் என்று
லைசன்ஸ் கொடுக்கும்போது அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர், உற்பத்தியாளர் பெயர்,
முகவரி, பேக்கிங் தேதி, காலாவதி தேதி,
சுத்திகரிக்கப்பட்ட முறை போன்ற தகவல்கள்
தண்ணீர் பாட்டில், பாக்கெட், கேன் மீது குறிப்பிட
வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள்
இதை பின்பற்றுவது இல்லை. மேலும் தண்ணீரை
4 முறை காய்ச்சி வடிகட்டி, கிருமி நாசினி சேர்த்து
விற்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு அருகிலுள்ள
போர்வெல்களில் இருந்து 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை
ரூ.100க்கு வாங்கி, சுத்திகரித்து
பாட்டில்களில் அடைத்து சில நிறுவனங்கள்
விற்று வருகின்றன. வாங்கும் தண்ணீர் பாட்டில் ஜில்லென்று
கூலிங் நிலையில் இருப்பதால் அதில் அடைக்கப்பட்டது சுத்தகரிக்கப்பட்ட
தண்ணீரா, போர்வெல் தண்ணீரா என்பதும் பலருக்கு
தெரிவதில்லை. இந்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மலிவு விலையில்
வழங்கும் வகையில் பெங்களூர் நகரில்
வாட்டர் ஏடிஎம் அமைக்கப்படுகிறது.முதல் கட்டமாக மகாதேவபுரா தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 10 இடங்களில் குடிநீர் இயந்திரம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 5 ரூபாய்க்கு 20 லிட்டர் வரை தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். தனியார் பங்களிப்புடன் எம்எல்ஏ தொகுதி நிதியில் இவை அமைக்கப்படுகின்றன. இதுகுறித்து மகாதேவபுரா தொகுதி எம்எல்ஏ அரவிந்த் லிம்பவள்ளி கூறுகையில், ‘‘தொகுதியில் உள்ள 34 வார்டுகளில் மொத்தம் 200 இடங்களில் வாட்டர் ஏடிஎம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது‘‘ என்றார். பெங்களூர் புறநகர் பகுதியில் வாட்டர் ஏடிஎம் மூலம் ஏற்கெனவே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..