ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மீது புகார்


தமிழக அரசு சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்கு நடத்திய பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நெறிமுறைகள் மற்றும் கல்விக்கான உரிமை சட்டத்தின் பிரிவுகள் மீறப்பட்டுள்ளன என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.ராஜாராமன் எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வகுத்துள்ள ஆசிரியர் கல்வித் தேர்வில் ஆசிரியர் நியமனத்துக்கு குறைந்தது 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மீறி தமிழக அரசு 55 சதவீதமாகக் குறைத்ததுடன்வெய்ட்டேஜ்என்ற புதிய நிபந்தனையை அறிமுகப்படுத்தி 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, ஆசிரியர் பட்டப் படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப் பெண்களுக்கு முறையே 10 சதவீதம், 15 சதவீதம், 15 சதவீதம் மதிப்பெண் வழங்கி யுள்ளது.
இவை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நெறிமுறைகள் மற்றும் கல்விக் கான உரிமை சட்டத்தின் பிரிவுகளை மீறிய நடவடிக்கையாகும். எனவே, தேசிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும்படி தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.


Post a Comment

4 Comments

  1. central government Ctet also 5% relaxtion THIS IS ALSO WRONG

    ReplyDelete
  2. PG TRB NEWS

    CONFUSING

    "மதிப்பெண் முறை"

    பின்பற்றப்படவுள்ளது.
    ======================
    WHY SC 45% WHY ST 40%
    ======================
    அதன்படி,

    General, BC, MBC, வகுப்பினர்

    குறைந்த பட்சம் 50% மதிப்பெண்,

    SC வகுப்பினர் 45% மதிப்பெண், ST

    வகுப்பினர் 40% மதிப்பெண்

    எடுத்தாக வேண்டும்.

    இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’

    செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப்

    பரிசீலிக்கப்படுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ssc, ibps poonRa thervukalil kuRaintha patcha mathippen ullathe. athuvum potti thervuthane.

      Delete
  3. Pls anybody explain If anything going to be wrong for selected teachers who were appointed as per GO 71 and 5% relaxation.Because one of my sister appointed in 5% relaxation.If yes, she is going to resign this job and re-join the previous one. Because she got a good salary in private sector also.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..