எஸ்.எஸ்.எல்.ஸி.,-
ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கு எத்தனை
நாள் இருக்கிறது என்பதை, மாணவர்களுக்கு நினைவூட்டி,
தேர்வுக்கு தயார் செய்யும் வகையில்,
பள்ளி நிர்வாகத்தினர் அறிவிப்பு பலகையில் எழுதி வருகின்றனர். இதை,
பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழகம்
முழுவதும் ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு,
மார்ச், 5ம் தேதியும், அதை
தொடர்ந்து, மார்ச், 19ம் தேதி, எஸ்.எஸ்.எல்.ஸி.,
பொதுத்தேர்வும் துவங்குகிறது. அதற்காக பள்ளிக் கல்வித்துறை
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசு பள்ளியில் படிக்கும்
மாணவர்கள், மாநில அளவில் சாதனை
படைப்பதுடன், அனைவரும் வெற்றி பெற்று, 100 சதவீதம்
தேர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக
யூனிட் தேர்வு, திருப்புத்தேர்வு என
பல கட்டமாக மாணவ, மாணவியரை
தயார்படுத்தப்படுகிறது.
இந்நிலையில்,
தேர்வு துவங்க உள்ள நாட்களை
மாணவர்களுக்கு நினைவூட்டி, தங்களை தயார்படுத்தும் வகையில்,
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில், தகவல் பலகை மூலம்
எழுதப்பட்டு வருகிறது. இது எந்த பள்ளியிலும்
இல்லாத வகையில், புதிய முயற்சியாக, கடந்த,
2012ம் ஆண்டு துவங்கியது.தற்போது,
மூன்றாம் ஆண்டாகவும், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது, மாணவர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. தினமும் காலையில்
பள்ளிக்கு வரும், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ்
2 மாணவர்கள், இந்த தகவல் பலகையை
கடந்தே செல்வதால், தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தை
நிர்ணயம் செய்யப்போகும் அரசு பொதுத்தேர்வு துவங்க
உள்ள நாட்களை எண்ணி, முழுமூச்சில்
தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.பள்ளி நிர்வாகத்தின் இந்த
முயற்சியை, பெற்றோர் மற்றும் கல்வியாளர் வரவேற்றுள்ளனர்.
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..