சுருளிவேலப்பர்

தேனி மாவட்டம் கம்பம் அருகில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது சுருளி அருவி. பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சுருளிவேலப்பராகக் கோயில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.

போகரின் குரு காலாங்கி சித்தர் பன்னெடுங்காலம் தவம் செய்த பூமி இதுசுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகளில் ரிஷிகள், தேவர்கள், சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்தனராம்
முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிகளும், பதினெண் சித்தர்களும் தவம் புரிந்த அற்புதமான தலம் இது. இவர்கள் அனைவரும் திருக்கயிலாயத்தில் சிவபார்வதிக்குத் திருமணம் நடைபெறும் வேளையில் ஒன்றுகூட, வடக்குப் பகுதி உயர்ந்தும் தெற்குப் பகுதி தாழ்ந்தும் போனதாம். அதை நேர்செய்ய அகத்திய முனிவரிடம் பணித்தருளினார் சிவனார்.
அதன்பேரில், அகத்தியர் முதலானோர் இங்கு வந்தார்கள். இந்த மலைப் பகுதியில் குகை ஒன்றில் சிவனாரை நோக்கிக் கடும் தவம் மேற்கொண்டனர். அதில் மகிழ்ந்த சிவனார், அவர்களுக்குத் திருமணக் கோலத்தில் காட்சி தந்தருளினார். அவர்கள் தவம் செய்த குகை, ‘கயிலாய குகைஎன்று போற்றப்படுகிறது.
கயிலாய குகையின் மேல் உள்ள குன்றில், அழகுறக் கோயில் கொண்டு, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் கந்தபிரான். இங்கே இவரின் திருநாமம் ஸ்ரீசுருளி வேலப்பர்
இங்கே உள்ள உதக நீரான சுருளி தீர்த்தம், நோய் தீர்க்கும் மாமருந்தெனப் போற்றப்படுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள எந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் என்றாலும், இங்கு வந்து சுருளி தீர்த்தத்தை எடுத்துச் சென்று கும்பாபிஷேகத்தில் பயன்படுத்துவது வழக்கம்.
போகரின் குரு காலாங்கி சித்தர் பன்னெடுங் காலம் தவம் செய்த பூமி இது. பின்னர் போகரும் இங்கு வந்து, குரு உண்டு பண்ணிய நவபாஷாணங் களைக் கொண்டு, பழநி தண்டாயுதபாணியின் மூல விக்கிரகத்தைத் தயாரித்ததாகவாத காவியம்எனும் நூலில் கருவூரார் தெரிவித்துள்ளார்.
சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளதாம். இவற்றில் ரிஷிகள், தேவர்கள், சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்தனராம். விபூதி குகை, சர்ப்ப குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என முக்கியமான குகைகளைக் காண மக்கள் வந்து செல்கின்றனர்.
ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என விழாக்கள் அதிகம் இருந்தாலும், தைப்பூசத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் காவடி எடுத்து, பால் குடம் ஏந்தி வழிபட்டால், நினைத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் சுருளி வேலப்பர் என்கின்றனர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை ஆகிய நாட்களின்போது, இங்கு வந்து அன்னதானம் வழங்கினால், முன்னோரின் ஆசீர்வாதமும் முருகக் கடவுளின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!
மேலும் இங்கு உள்ள  கயிலாச குகைக்கு பெளர்ணமி நாளில்  பாதயாத்திரையாக வந்து தரிசித்தால், சிவனாரின் அருளும் கிட்டும் என்பது ஐதீகம். வனம் மற்றும் மலைப் பகுதியில் உள்ள ஆலயம் என்பதால், காலை 7 மணிக்குத் துவங்கி மதியம் 2 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. முக்கியமான நாட்களில், இரவு 8 மணி வரை நடை திறந்திருக்குமாம்.
அகத்தியர், கன்னிமார்கள், நாகதேவதைகள், ஸ்ரீராம லட்சுமணர் ஆகியோருக்கு இங்கே சந்நிதிகள் உண்டு.


Post a Comment

3 Comments

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..