ஆசிரியர்
தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு
வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்
செயலாளர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சான்றிதழ்
ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் 2012–2013–ல் நடத்தப்பட்ட ஆசிரியர்தகுதி
தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி
பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய
அறிவுறுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான
தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம்
செய்து கொண்டனர்.சரியான முறையில் பதிவிறக்கம்
செய்யாதவர்களின் சான்றிதழ்கள் அனைத்து மாவட்ட முதன்மை
கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி
14–ந்தேதி கடைசி
தேர்வர்கள்
தேர்வு எழுதிய மாவட்டத்தின் அடிப்படையில்,
அந்த அந்த மாவட்ட முதன்மை
கல்வி அலுவலகத்தில் நேற்றுமுதல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பிப்ரவரி 14–ந்தேதி கடைசி நாள்.சென்னை மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை பனகல்
மாளிகையில் உள்ள முதன்மை கல்வி
அதிகாரி அலுவலகத்தில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
இறுதி தீர்ப்பு
சென்னை
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அரசால்
தொடரப்பட்ட சீராய்வு மனுவின் மீது பெறப்படும்
இறுதி தீர்ப்பின் அடிப்படையில் 82 முதல் 89 வரைமதிப்பெண்கள் பெற்று பதிவிறக்கம் செய்யாத
தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுகுறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்
செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
2 Comments
sir i didnt get my certificate in ceo office also. my certificate not available, im virudhunagar dist. pls help me sir. already i informed trb through mail. today i went ceo office unfortunately my certificate not available there. surulivel sir help me
ReplyDeletegood eve., innum neraya perukku ABOVE 90 EDUTHAVANGALUKKUM CEO OFFICE-ILUM VARAVILLAI ENDRUM ., TRB KKU PHONE PANNU KETTATHARGAKU
ReplyDeleteREQUISITION LETTER KODUKKA VENDRUMAM., MELUM CEO OFFICE IL ORU NOTE VAITHU ADHIL DETAIL ELUTHA SOLGIRARGAL.,
CERTIFICATE INNUM CEO OFFICE KKU VARAVILLAI ENDRAL UDANE TRB KKU PHONE
SEYYUNGAL., CEO OFFICE IL NOTE IL ELUTHI VAIYUNGAL.,
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..