சாமானியன்
விசிறியாக இருந்து, அதனை உலகம் முழுக்க
பரப்ப ஒரு நன் முயற்சியை
எடுத்துள்ளார். தேனி, பழைய பேருந்து
நிலையத்திலுள்ள, மதுரைப் பேருந்துகள் செல்லும்
வழித்தடத்தின் அருகே, பாடல்கள் ஒலிபரப்பும்
டி.வி.டி கடைகள்
வரிசைகட்டி நிற்க, ஈசான்ய மூலையில்
8 க்கு, 6 அடி இடைவெளியில் உள்ளவொரு
இடத்தில், நம்மை அந்த ஆச்சர்யம்
தடுத்து வழிமறித்தது.
என்னவென்றால், "ஒரு கடிகாரம் பழுதுபார்க்கும்
கடையைச்சுற்றி", முற்றிலும் அறநெறியைப்போதிக்கும் திருக்குறளில் இருந்து, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளிலிருந்தும் தலா ஒரு
குறள் வீதம் தினமும் 3 குறள்களும்,
அதன் விளக்கங்களும் எழுதப்பட்டிருந்தன. இந்த அளப்பரிய முயற்சிக்கு
காரணம் வெ.பெ.முத்துராஜ்
என்பவர்.இவர் கடிகாரம் பழுது
நீக்கும் தொழில் செய்பவர். இவர்தான்
அந்தக் கடையை நடத்தி வருகிறார்.
இதன் நோக்கம் குறித்து அவரிடம்
விசாரித்த போது,"சிறு வயசுலேயிருந்து தமிழ்
மேல அலாதிப்பிரியம். அப்போயிருந்த குடும்ப பொருளாதாரச் சூழ்நிலை
பத்தாங்கிளாசுக்கு மேல படிக்க முடியலை.
திருக்குறள் கூறிய சீரிய கருத்துக்கள்,
உடனே ஏதாவது, தொழில் செய்யணும்னு
மறைமுகமா சொல்லுச்சு, உடனே, செய்தித் தாளில்
வந்த விளம்பரத்தப் பார்த்துட்டு, தபால் வழியில் படிச்சு
"கடிகாரம் பழுதுபார்க்கிறத் தொழிலைப் பழகிக்கிட்டேன். 1983 ல் இருந்து கடை
நடத்திட்டுவறேன். ஏற்கனவே தமிழார்வம் இருந்ததனால,
நாலு வருசத்துக்கு முன்னாடியிருந்து, தினமும் ஆயிரக்கணக்குல மக்கள்
கூடுற, இந்த இடத்துல, திருக்குறளை
பொருளோடு எழுதிப்போட்டால், அதுலப் பாதி பேருக்காவது,
போய்ச்சேருமேனு தோணுச்சு. உடனே, இந்த வேலைய,
தமிழுக்குச்செய்ற சிறுதொண்டாக நினைச்சு துவக்கிட்டேன். அதுமட்டுமில்ல திருக்குறள் தொன்மை வாய்ந்த நூல்.
எத்தனை மொழியிருந்தாலும்... தமிழ்மொழியிலயிருக்கிற மாதிரி.. குறளை எங்க தேடினாலும்
கிடைக்காது. இரண்டு அடியில உலகத்தை
அடக்கியவர்- வள்ளுவப் பெருந்தகை. அவருடைய குறளின் வழிகாட்டுதலின்படி
நடந்தால், எப்போதுமே வெற்றிதான்.. தோல்வி என்பதே கிடையாது"எனக்கூறிவிட்டு, 20 வருடங்களுக்கு முன்பு வீரபாண்டித் திருவிழாவில்
வாங்கியத் திருவள்ளுவர் சிலையின் முன் அமர்ந்து, தான்
விட்டிருந்த பணிகளைச் செய்ய ஆயத்தமானார். குறள்பதாகை
மூலம் மனிதமனங்களை பழுதுநீக்கும் வெ.பெ.முத்துராஜ்,
உண்மையிலேயே... பாராட்டப்படத் தகுதியனாவர் தான்.. இந்த திருவள்ளுவர்
தினநாள் சிறப்புப் பகிர்வில் திருக்குறளுக்காக வாழும் வெ.பெ.முத்துராஜை, அடையாளப்படுத்துவது சிறப்பாக இருக்கும். செய்தி, படங்கள்- ம.மாரிமுத்து (மாணவப் பத்திரிகையாளர்) மி
கத்தொன்மை வாய்ந்த மொழிகளில் தமிழ்
மொழி மாட்சிமை மிக்கது. அதன் அழகு நடையில்
பயணிக்கும் போது, அந்த வனப்பில்
மூழ்கித் திளைக்காதவர்கள் இல்லையென்றே கூறலாம். வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும், தமிழ்ப்
பனுவல்களை ஆராய்ந்தால், நிச்சயம் நம் மனம் சிலாகிக்கும்
தீர்வுகள் அதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்பது தான், தமிழ்
எனும் செம்மொழியின் சிறப்பம்சம். அதனை அத்தனை அழகாக,
எதிர்காலத்தில் எளிய சாமானிய மக்களும்
புரிந்துகொள்ள வேண்டும் என இரண்டு அடிகளில்"நறுக்"என பட்டை தீட்டியவர்,
வான்புகழ் கொண்ட "வள்ளுவன்". நம் கிராமங்களில் அடிக்கடி,"கடுகு சிறுத்தாலும், காரம்
குறையாது" எனும் முதுமொழியைக் கூறுவார்கள்.
அதன் சிறப்பம்சம் முற்றிலும் திருக்குறளை வாசித்தவர்களுக்கு நன்கு தெரியும். ஆம்.
இத்திருக்குறளில் ஒழுக்கம், அறம், ஈகை, குறிப்பறிதல்,
சூது, வாய்மை, விருந்தோம்பல், பகைமாட்சி,
வீரம் என அத்தனைப் பண்புகளும்,
அதன் காரம் குறையால், படாரெனப்பட்டுத்
தெறிக்கிறது. அப்படிப்பட்ட தனித்துவம் மிக்க திருக்குறளுக்கு ஒரு
சாமானியன் விசிறியாக இருந்து, அதனை உலகம் முழுக்க
பரப்ப ஒரு நன் முயற்சியை
எடுத்துள்ளார். தேனி, பழைய பேருந்து
நிலையத்திலுள்ள, மதுரைப் பேருந்துகள் செல்லும்
வழித்தடத்தின் அருகே, பாடல்கள் ஒலிபரப்பும்
டி.வி.டி கடைகள்
வரிசைகட்டி நிற்க, ஈசான்ய மூலையில்
8 க்கு, 6 அடி இடைவெளியில் உள்ளவொரு
இடத்தில், நம்மை அந்த ஆச்சர்யம்
தடுத்து வழிமறித்தது. என்னவென்றால், "ஒரு கடிகாரம் பழுதுபார்க்கும்
கடையைச்சுற்றி", முற்றிலும் அறநெறியைப்போதிக்கும் திருக்குறளில் இருந்து, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளிலிருந்தும் தலா ஒரு
குறள் வீதம் தினமும் 3 குறள்களும்,
அதன் விளக்கங்களும் எழுதப்பட்டிருந்தன. இந்த அளப்பரிய முயற்சிக்கு
காரணம் வெ.பெ.முத்துராஜ்
என்பவர்.இவர் கடிகாரம் பழுது
நீக்கும் தொழில் செய்பவர். இவர்தான்
அந்தக் கடையை நடத்தி வருகிறார்.
இதன் நோக்கம் குறித்து அவரிடம்
விசாரித்த போது,"சிறு வயசுலேயிருந்து தமிழ்
மேல அலாதிப்பிரியம். அப்போயிருந்த குடும்ப பொருளாதாரச் சூழ்நிலை
பத்தாங்கிளாசுக்கு மேல படிக்க முடியலை.
திருக்குறள் கூறிய சீரிய கருத்துக்கள்,
உடனே ஏதாவது, தொழில் செய்யணும்னு
மறைமுகமா சொல்லுச்சு, உடனே, செய்தித் தாளில்
வந்த விளம்பரத்தப் பார்த்துட்டு, தபால் வழியில் படிச்சு
"கடிகாரம் பழுதுபார்க்கிறத் தொழிலைப் பழகிக்கிட்டேன். 1983 ல் இருந்து கடை
நடத்திட்டுவறேன். ஏற்கனவே தமிழார்வம் இருந்ததனால,
நாலு வருசத்துக்கு முன்னாடியிருந்து, தினமும் ஆயிரக்கணக்குல மக்கள்
கூடுற, இந்த இடத்துல, திருக்குறளை
பொருளோடு எழுதிப்போட்டால், அதுலப் பாதி பேருக்காவது,
போய்ச்சேருமேனு தோணுச்சு. உடனே, இந்த வேலைய,
தமிழுக்குச்செய்ற சிறுதொண்டாக நினைச்சு துவக்கிட்டேன். அதுமட்டுமில்ல திருக்குறள் தொன்மை வாய்ந்த நூல்.
எத்தனை மொழியிருந்தாலும்... தமிழ்மொழியிலயிருக்கிற மாதிரி.. குறளை எங்க தேடினாலும்
கிடைக்காது. இரண்டு அடியில உலகத்தை
அடக்கியவர்- வள்ளுவப் பெருந்தகை. அவருடைய குறளின் வழிகாட்டுதலின்படி
நடந்தால், எப்போதுமே வெற்றிதான்.. தோல்வி என்பதே கிடையாது"எனக்கூறிவிட்டு, 20 வருடங்களுக்கு முன்பு வீரபாண்டித் திருவிழாவில்
வாங்கியத் திருவள்ளுவர் சிலையின் முன் அமர்ந்து, தான்
விட்டிருந்த பணிகளைச் செய்ய ஆயத்தமானார். குறள்பதாகை
மூலம் மனிதமனங்களை பழுதுநீக்கும் வெ.பெ.முத்துராஜ்,
உண்மையிலேயே... பாராட்டப்படத் தகுதியனாவர் தான்.
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..