பூமியிலிருந்து 20 கிலோ மீட்டர் உயரத்திற்கு பிரமாண்ட கோபுரம்!



'
புர்ஜ் கலிஃபா துபாய்'-  828m உயரம் கொண்ட இதுதான் இப்ப இருக்குற கட்டடங்கள்ல உயரமான கட்டடம். ஆனா, புர்ஜ் கலிஃபா கட்டடத்தைப் பார்த்து, "நீயெல்லாம் எனக்கு சின்னப் பையன்" மாதிரி அப்படின்னு சொல்றதுக்காக ஒரு கட்டடம் வருது அதான் தோத் எக்ஸ் டவர் (ThothX tower).


தோத் என்பது ஓர் எகிப்திய தெய்வத்தோட பெயர். அந்த பெயர் கொண்ட இந்த கட்டடத்தோட உயரம் எவ்வளவு தெரியுமா 20 கி.மீ. கனடாவை சேர்ந்த பிரண்டன் குயைன் என்பவர்தான் இந்த உயரமான கனவுக்கு சொந்தக்காரா். இது பற்றி அவர் சொல்லும்போது, "இதை கட்டடம்னு சொல்ல முடியாது. வேணும்னா உலகத்துலேயே உயரமான லிஃப்ட் அப்படினு சொல்லலாம்" என்கிறார். ஆமாம், இதை அவங்க கட்டடமா பயன்படுத்தப்போறது இல்லயாம், வானத்துக்கு போக லிஃப்டா பயன்படுத்தப் போறாங்களாம்!இந்த திட்டத்தோட முக்கிய நோக்கமா இவங்க சொல்றது விண்வெளி பயணம். நாம் விண்வெளிக்கு அனுப்புற ராக்கெட்டுகளை இந்த லிஃப்ட்டோட உயரத்துலேர்ந்து அனுப்புறதுதான் அவங்களோட மாஸ் திட்டம். இந்த திட்டத்தின் மூலமா கிட்டத்தட்ட 30% சதவிகித விண்வெளி பயண செலவு குறையுமாம். அதுமட்டும் இல்லாம, சில செயற்கை கோள்களோட வேலையை இது காலிபண்ணிடுமாம்.

வானத்துல பறக்குற ஃபிளைட் இறங்கி பெட்ரோல் போடுறது, ஒரே கட்டமா செயற்கை கோள்களை சுற்றுவட்டப் பாதையில ஏவுறது என இவங்க வச்சிருக்கிறது எல்லாமே மெகா சைஸ் திட்டங்கள்தான். இந்தக் கட்டடத்த இதுவரை இல்லாத வகையில மிகவும் வலுவானதா கட்ட திட்டமாம். டைமண்ட் நேனோ முறைப்படி இந்தக் கட்டடத்த கட்டப் போறாங்களாம். இதுதான் உலகத்துலயே வலுவான கட்டடமாகவும் இருக்கும் என்கிறார்கள். ஆனா, இந்தக் கட்டடம் வர இன்னும் நிறைய வருஷம் காத்திருக்கனுமாம்.

ஒருவேளை இந்தக் கட்டடம் வந்தா, டைரக்டர் ஷங்கர் அங்க ஒரு பாட்டு கூட எடுக்கலாம். என்ன பாஸு கதையா விடுறீங்க, இவ்ளோ பெருசாலாம் லிஃப்ட் கட்ட முடியாது அப்படினு சொல்றவங்களுக்கு ஒண்ணு சொல்லணும். உலகம் அசாத்தியமானது என்று நினைத்து, ஒவ்வொன்றையும் மனிதன் சாத்தியமாக்கி இருக்கிறான்....!

Post a Comment

0 Comments