குரூப் 2 முதன்மை தேர்வு, நவம்பர், 8ம் தேதி நடக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி.,யான, அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு விவரம்: துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட, 19 பதவிகளில், 1,047 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, டிசம்பர், 1ம் தேதி, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதில், 4.98 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவு, கடந்த, 8ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வு (மெயின்), வரும், நவம்பர், 8ம் தேதி நடக்கும். இந்த தேர்வுக்கு, 11,497 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
1 Comments
காலையில் விழித்ததும் பெரும் எதிர்பார்ப்பு., மதியம் பதற்றம், மாலை ஏமாற்றம், இரவு விரக்தி, இறைவா காப்பாற்றுவா
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..