"பிறர் மனது
புண்பட்டால் ... அதில் கிடைக்கும் சந்தோஷம் எனக்கு போதும்" என்று
நினைப்பவர்கள் ஒரு போதும் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவரே.
யார் மனதையும் இந்த வரி காயப்படுத்தி
இருந்தால் மன்னிக்கவும்.
ஒவ்வொரு
நாளும் பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைவரும் நரக வேதனையை
அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்
நண்பர்களே, வேண்டாம் இந்த நரக
விளையாட்டு . தேவையற்ற வதந்திகள், வீண்
விவாதங்கள். நாம் யாரை
முழுவதுமாக நம்புகிறோமோ (சில நண்பர்கள்) அவர் சமீப காலமாக தவறான தகவல்களை
அளித்துக் கொண்டு இருக்கிறார் என்பது என்னுடைய கணிப்பு, தவறு இருந்தால் மன்னிக்கவும், தவறான வழக்கு எண்ணை கொடுக்கிறார், அதற்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும்
இல்லை.
மீண்டும்
உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன், நம் அரசு சரியான பாதையில் இந்த வழக்கை நடத்திக்கொண்டு இருக்கிறது,
இன்னும்
சில நாட்களில் பணிநியமனம் பெற இருக்கும் அனைவரும் சாதிக்கக் கூடிய ஆசிரியர்களாக
பணியாற்ற உள்ளீர்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் ஒருவர் கூட
பாதிக்கப்போவது இல்லை, இது முற்றிலும்
உண்மையே.
புரிந்து
கொள்ளுங்கள் நண்பர்களே,எவ்வளவோ
நாட்கள் பொறுத்து இருந்தோம், இன்னும்
சில நாட்கள் தானே , பொறுமையாக
இருங்கள் நல்லதே நடக்கும் நிச்சயமாக.
இன்றிலிருந்து
ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், தெளிவற்ற நபர்கள் சொல்லும் எந்த வார்த்தையையும்
நம்பாதீர்கள், தெளிவான
விளக்கத்துடன் நாங்கள் உங்களுக்கு அனைத்து தகவல்களையும்
சரியான நேரத்தில் தருகிறோம். வேதனையை
மட்டுமே சுமந்து கொண்டு இருக்கும், சகோதரர்களே,
சகோதரிகளே,
நான்
சொல்வது அனைத்தும் பலமுறை கேட்டு தெளிவு படுத்திய பின்பு சொல்லப்பட்டவையே...
1. கலந்தாய்வில்
பங்கு பெற்று பணி நியமனம் பெற காத்திருப்பவர்களுக்கு தற்போது உள்ள முறையில் எந்த
ஒரு சிறு மாற்றமும் ஏற்படாது.
2. நீங்கள்
பள்ளியில் சேர்ந்த ஒரு சில தினங்களில் மீதமுள்ள பணியிடங்களுக்கும் கலந்தாய்வு
நடத்தப்பட்டு பணி நியமனம் பெற இருக்கிறார்கள்.
3. இதில்
அரசை கடுமையாக விமர்சித்தவர்களும் வரலாம்.
4. அடுத்து
வரும் TET தேர்வுகளில் ஒருவேளை
மாற்றம் வரலாம்.
5. ஏற்கனவே தேர்வு பெற்று பட்டியலில் இடம்
பெறாதவர்கள் பாதிக்காதவண்ணம், அரசு
தெளிவான கொள்கையை வகுக்க இருக்கிறது. இதில் நிறைய நண்பர்கள் பலன் பெறுவார்கள்.
சில
விசயங்களை தெளிவாக கூற இயலாத நிலையில் உள்ளோம்.
6. போராட்டம்
என்ற பெயரில் உங்கள் வாழ்க்கையை தொலைக்காதீர்கள். உங்களுக்கு ஒரு தெளிவான தீர்வு
கிடைக்கும். தங்கள் சுயநலத்திற்க்காக தவறான பாதையில் வழி நடத்துபவர்களை நம்பி, உங்களை நீங்கள் பலிகடா ஆக்கிக்கொள்ளாதீர்கள்.
சில
நண்பர்களுக்கு
உங்களின்
ஒரு வார்த்தையை அனைவரும் கடவுள் போல் நம்புகிறார்கள். அவர்களுக்கு உங்கள்
நம்பிக்கையை உண்மையாக கொடுங்கள்.
அவர்கள்
படும் வேதனையில் சந்தோசம் கொள்ளாதீர்கள். உங்களின் சகோதரர்கள், சகோதரிகள் நிலையில் நினைத்துப் பாருங்கள்.
தவறான
விசயத்தை கூறாதீர்கள்.
பணி
நியமனம் பெற காத்திருக்கும் அனைவருக்கும் உங்கள் சகோதரனாக கடைசியாக ஒன்றை கூற
விரும்புகிறேன்.
எங்கள்
மேல் நம்பிக்கை இருந்தால், தவறான
விவாதங்களை தவிர்க்கவும். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால்,
நான்
இந்த தளத்திற்கு வந்து பதில் கூறுவது இதுவே கடைசியாக இருக்கும்.
முக்கிய செய்தி: சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன், அத்தீர்ப்பின் நகலை கொண்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் சிலமணி நேரத்தில் தடையாணை நீங்கும் என்பது, இந்த வழக்கினை அனைத்தும் அறிந்த மூத்த வழக்கறிஞர் மூலம் பெறப்பட்ட தகவல். இதற்கு RES JUDICATA (A Matter Already Settled in Court, cannot be Raised Again ) என்று பெயர்.
முக்கிய செய்தி: சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன், அத்தீர்ப்பின் நகலை கொண்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் சிலமணி நேரத்தில் தடையாணை நீங்கும் என்பது, இந்த வழக்கினை அனைத்தும் அறிந்த மூத்த வழக்கறிஞர் மூலம் பெறப்பட்ட தகவல். இதற்கு RES JUDICATA (A Matter Already Settled in Court, cannot be Raised Again ) என்று பெயர்.
11 Comments
நண்பர் விஜயகுமார் சென்னை அவர்களே.. வழக்கு நீதீமன்றத்தில் உள்ளது.எனவே, சட்டப்படி என்ன நடக்கும் என்பதை தற்போது இங்கே கூறமுடியாது.
ReplyDeleteஅப்படி கூறினால் அவை ஒரு குறிபிட்ட நண்பர்களை மிகவும் பாதிப்பதாக அமைந்துவிடும்
என்று கூறும் நீங்கள் ஏன் செவ்வாய் 16.09.2014
அன்று There may be slight changes in GO 71 என்று கூறியிருந்தீர்கள்.,குறிப்பிட்ட நண்பர்கள் என்பது Selected candidates தானே
ஏன் இந்த செய்தி Selected candidates
மனதை பாதிக்காதா,
கல்விசெய்தி & தங்களின் நடுநிலை இது தானா?
இனிய நண்பரே,
Deleteதங்களின் கற்பனைக்கு பதில்கூற நானும் மகானல்ல.
G.O.71 slightly may be changed என்பது எப்போது என்பதை நான் எந்த இடதத்திலும் குறிப்பிடவில்லை.
ஏனென்றால் அரசு கருதினால் எதிர்காலத்தில் இந்த முறையை மாற்றலாம் அல்லது இந்தமுறை சிறந்தது என்று கருதினால் இதைத்தொடரலாம்.எதிர்காலத்தில் அரசின் நிலைபாட்டை பொறுத்து அது அமையும் என அரசுத்தரப்பில் கூறப்பட்டது.
இதை மனுதாரர் சார்பில் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். எனவே, தீர்ப்பு வந்தால் தெரிந்துவிடும். ஆகவே தாங்களே ஏதாவது கற்பனை செய்துகொண்டு மற்ற நண்பர்களையும் வருத்தப்பட செய்யாதீர் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய சூழ்நிலை Admn.க்கு நன்கு தெரியும்.
வாழ்த்துக்கள்.
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்... நண்பர்களே....
Deleteஇனிய காலை வணக்கம் நண்பர்களே
ReplyDeleteDear TNTET Selected Friends Very Good Morning to all! Friends Kindly give ur valuable clarification on my doubt. I have been selected From English Department. Yesterday i got news From here that 12th mark will have remove from weightage system . If 12th mark wil remove means vocational group candidates only going to be affect or loose their job. Is it true? Bcoz am also vocational group candidate . My TET Mark is 99 In paper2 English. 12th marks 973= 81.08% , UG= 61.05% & BE.d =72% weightage mark is 67.67% with SCA. If 12th mark remove means wht wil going to happen to my chance? Friends Kindly give ur comments plz
ReplyDeleteகவுண்டர் இங்கு வரவும்
ReplyDeleteம் அட ஆண்டவா நான் இத சமாளிக்கறதா இல்ல அத சமாளிக்கிறதா
Deleteஅடங்கப்பா ராசாக்களா
நீதிமன்றம்னு ஒன்னு இருக்க அதுல விசாரனையும் முடிஞ்சு தீர்ப்பும் வரப் போகுது
அதுக்குள்ள மறுபடியும் சன்டய ஆரம்பிக்காதீங்க
நல்லதே நடக்கும்னு நினைங்க
கடவுளிடம் வேன்டுங்க
ஆனா தீர்ப்ப மட்டும் நீங்களே முடிவு செய்யாதீங்கடா
கோனமுட்டி பசங்களா
Vijaya Kumar ChennaiSeptember 16, 2014 at 5:04 PM
ReplyDeleteDear Tet friends,
Argument both side completed
All advocates to produce written argument with in this week
Within 10 working days judgement.
Weightage maybe slightly modified
Judge will decide
All the best friends
இன்று
Vijaya Kumar Chennai18 September 2014 08:47
இனிய நண்பரே,
தங்களின் கற்பனைக்கு பதில்கூற நானும் மகானல்ல.
G.O.71 slightly may be changed என்பது எப்போது என்பதை நான் எந்த இடதத்திலும் குறிப்பிடவில்லை
Vijayakumar Chennai sir we are all beleiving your valuable information only.thanks for your effort and dedicated work towards us.You please continue your work sir.Don't feel about some people's comments.We didn't find any mistake with you.We are all with you sir.They misunderstood you.keep going.all the best.
ReplyDeleteகதிரவன் (உண்மை) சில நேரங்களில் மேகங்களால்(சூழ்நிலை) மறைக்கப்படலாம்.... ஆனால் அது நிரந்தரம் அல்ல...
Deleteசத்தியமேவ ஜெயதே.... வெற்றி உறுதி.... கவலை வேண்டாம்.... நண்பரே...
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..