பயம்! பயம்! பயம்!


ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.


--இணையத்திலிருந்து

Post a Comment

7 Comments

  1. நண்பர் விஜயகுமார் சென்னை அவர்களே.. வழக்கு நீதீமன்றத்தில் உள்ளது.எனவே, சட்டப்படி என்ன நடக்கும் என்பதை தற்போது இங்கே கூறமுடியாது.
    அப்படி கூறினால் அவை ஒரு குறிபிட்ட நண்பர்களை மிகவும் பாதிப்பதாக அமைந்துவிடும்
    என்று கூறும் நீங்கள் ஏன் செவ்வாய் 16.09.2014
    அன்று There may be slight changes in GO 71 என்று கூறியிருந்தீர்கள்.,குறிப்பிட்ட நண்பர்கள் என்பது Selected candidates தானே
    ஏன் இந்த செய்தி Selected candidates
    மனதை பாதிக்காதா,
    கல்விசெய்தி & தங்களின் நடுநிலை இது தானா?

    ReplyDelete
  2. Manidhargalin manadhai pun paduthui adhil magizhchi kanbavan manidharagave iruka mudiyadhu.. varungala thalai muraiyinarai uruvakkum kadamai ulla asiriyargalae ivvaru nadandhu kollvadhu vedhanai alikiradhu.....

    ReplyDelete
  3. admin sir comment allow pannathiga..

    ReplyDelete
  4. Vijaya Kumar ChennaiSeptember 16, 2014 at 5:04 PM
    Dear Tet friends,
    Argument both side completed
    All advocates to produce written argument with in this week
    Within 10 working days judgement.
    Weightage maybe slightly modified
    Judge will decide
    All the best friends
    இன்று
    Vijaya Kumar Chennai18 September 2014 08:47
    இனிய நண்பரே,

    தங்களின் கற்பனைக்கு பதில்கூற நானும் மகானல்ல.
    G.O.71 slightly may be changed என்பது எப்போது என்பதை நான் எந்த இடதத்திலும் குறிப்பிடவில்லை

    ReplyDelete
  5. தன்னம்பிக்கை ஊட்டுகிறது இந்தக்கதை....நன்றிகள் பல ஸ்ரீ அவர்களுக்கு...

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..