கூடுதல் பணியிட ஆசிரியர்களுக்கு சம்பளம்'தினமலர்' செய்தி எதிரொலி

மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல்
நடந்தது.

அப்போது மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட உபரி(சர்பிளஸ்) ஆசிரியர்களை 'பணி நிரவல்' அடிப்படையில் வேறு மாவட்டங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. 
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உபரி ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம் தோறும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.இக்கூடுதல் இடங்களில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டனர். 
மதுரையில் 29 ஆசிரியர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் பணியில் சேர்ந்த பின், நிதித்துறை ஒப்புதல் கிடைக்காததால், ஜூலை, ஆகஸ்ட் மாத சம்பளம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்களாக அடுத்தடுத்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கல்வித் துறையின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

1 Comments

  1. Watch
    http://www.kalvikooda.blogspot.com

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..