உடற்கல்வி இயக்குநர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?

தமிழகத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு விளையாட்டுகளில் அபாரத் திறமைகொண்ட மாணவர்கள், அரசுக் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால் அங்கு உடற்கல்வி இயக்குநர்கள் இல்லாததால் மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

தமிழகத்தில் இப்போது 83 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் (டிஆர்பி) நிரப்புவதற்கான நவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இதுபோல, இந்தக் கல்லூரிகளில் காலியாக இருந்த நூலகர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், அண்மையில் ஓரளவுக்கு நிரப்பப்பட்டன.

இந்த நிலையில், அரசுக் கல்லூரிகளில் 20 கல்லூரிகளில் மட்டுமே உடற்கல்வி இயக்குநர்கள் உள்ளனர். மீதமுள்ள கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன என்கின்றனர் பேராசிரியர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்மணி, பொதுச் செயலாளர் பிரதாபன் ஆகியோர் கூறியதாவது:

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் மூலம், விளையாட்டுகளில் தனித் திறமைமிக்க மாணவர்கள் சிறந்த வாய்ப்பைப் பெறுவர்.

ஆனால், பல்வேறு விளையாட்டுகளில் சிறந்த திறமையைப் பெற்றிருந்தும், அதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாத பல மாணவர்கள் அரசுக் கலைக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இதுபோன்ற மாணவர்களை அடையாளம் கண்டு, ஊக்குவிக்கும் திறமை உடற்கல்வி இயக்குநர்களுக்கு மட்டுமே உள்ளது. அவ்வாறு அவர்களைச் சரியாக வழிநடத்தினால் விளையாட்டில் சாதனையாளர்களாகி, மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்து தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், 50-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளாக உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்த இடங்களில் பொறுப்பு அதிகாரிகளாகப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதால், அவர்களுக்கு வேலைப்பளு கூடுவதோடு, மாணவர்களுக்கு விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றுத்தர முடியாத சூழலும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இப்போது சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ள மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளிலும், திறமைமிக்க மாணவர்கள் பலர் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

எனவே, உடற்கல்வி இயக்குநர் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அல்லாமல் டிஆர்பி மூலமாக உடனடியாக நிரப்ப வேண்டும் என்றனர்.

Post a Comment

1 Comments

  1. பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் என் இனிய நண்பர்களுக்கு மட்டும் காலை வணக்கம்.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..