ஆசிரியர்கள் நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்த
தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு
வழக்குரைஞர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 18 பேர் தாக்கல் செய்த மனு மீது அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
தகுதிகாண் மதிப்பெண் முறையில் மதிப்பெண் வழங்கும்போது, 2000-ஆம் ஆண்டுக்கு முன்பு பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜரானார். அவர், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதை அவசர வழக்காகக் கருதி உடனே விசாரிக்குமாறும் வேண்டினார்.
ஆனால், அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்தனர். மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தால் பட்டியலிடப்பட்டு முறையாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

3 Comments
FOR THE FIRST TIME I AM ENTERING
ReplyDeleteTHIS BLOG. ALL THE BEST TO THIS
BLOG.
you people welcome Mr.vijay
Deletei like
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..