போராட்டக் குழுத்தலைவர் மற்றும் நமது நண்பர் திரு. செல்லத்துரை அவர்களுக்கு.....

போராட்டக்குழுவிற்கு  தலைமை தாங்கி போராட்டத்தை முன்னின்று தலைமை தாங்கி நடத்துபவர் திரு.செல்லத்துரை அவர்களைப் பற்றிய சில குறிப்புகள்.

பெயர்:செல்லத்துரை

பால்:ஆண்

வயது:30லிருந்து 33 க்கு உள்ளாக

TET மதிப்பெண் :110

பாடப்பிரிவு:ஆங்கிலம்

வகுப்பு:OC(other community)

மாவட்டம்:சேலம்:

வட்டம்:ஆத்தூர்

ஊர்:வீரகனூர்

அனுபவம்:தனியார் கல்லூரி ஒன்றில் சில ஆண்டுகால ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.

ஏன் போராட்டம்?

ஆங்கிலப்பாடப் பிரிவில் 2800 பணியிடங்கள் நிரப்பப்பட்டும் நீங்கள் TET தேர்வில்  110 மதிப்பெண் எடுத்தும் இறுதிப் பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் போனதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் weightage முறைதான் காரணம் என்று அனைத்து ஊடகங்களிலும் தவறான செய்தியை பரப்பி பேட்டியளித்து வருகிறீர்கள்.

நீங்கள் பேட்டி அளிக்கும் அதே ஊடகம் நாங்கள் பேட்டியளித்தாலும் அதனை ஒளிபரப்பும் என்பதை மறவாதீர்கள்.பேட்டியளிக்கும் நீங்கள் பேட்டியளிக்கும் முன்பாக உங்களது வகுப்பையும் கூறி பேட்டியளிக்கலாமே!

நீங்கள் இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்காமல் போனதற்கு ஒரே காரணம் நீங்கள் OC பிரிவின் கீழ் வருவதுதான்.

என்னுடைய மதிப்பெண் 102. தமிழ்ப்பாடப் பிரிவு.அதுவும் நான் இளங்கலையில் 52% . தமிழில் மொத்த காலிப்பணியிடங்களே 772 தான்.

TET இல் 102, இளங்கலையில் 52% மதிப்பெண்கள் பெற்ற நானே 772 காலிப்பணியிடங்கள் கொண்ட இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்கும் பொழுது 2800 காலிப்பணியிடங்கள் கொண்ட அதுவும் TET இல் 110 மதிப்பெண் வாங்கிய உங்களால் இறுதிப்பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல்போனதற்கான உண்மையான காரணம் என்ன?

நான் சொல்லட்டுமா? அதற்கான உண்மையான காரணம் தமிழக அரசு கடைபிடித்து வரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைதான்.

நான் BC பிரிவின் கீழ் வருவதால் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளேன்.நீங்கள் OC பிரிவின் கீழ் வருவதால் என்னை விட அதிக TET மதிப்பெண் பெற்றிருந்தும்,ஆங்கிலத்தில் அதிக காலிப்பணியிடங்கள் நிரப்பட்டாலும் உங்களால் இடம் பிடிக்க முடியவில்லை.

நீங்கள் போராடுங்கள் ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் weightage முறைக்கு எதிராக இல்லை.இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக.......

உச்சநீதிமன்றம் அனைத்து இட ஒதுக்கீடுகளையும் 50% க்குள் முடித்து விட என்று உத்தரவிட்டது.ஆனால் தமிழ அரசுதான் அதற்கு எதிராக வாதாடி வெற்றி பெற்று 69% வரை இட ஒதுக்கீட்டின் வரம்பை நிர்ணயித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.

உங்களால் முடிந்தால் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக வழக்குத் தொடுத்து போராடி வெற்றி கொள்ளுங்கள்.

முக்கியக் குறிப்பு;

தற்போது 14,700 பேர் கொண்ட இறுதிபட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் 28 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 70 % . அதைபற்றி விளக்கமான  தனிப் பதிவு விரைவில் வெளியாகும்.

நன்றி......

Post a Comment

63 Comments

  1. Replies
    1. நண்பர்களே வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. மதிய உணவு இடைவெளிக்கு பின்புதான் வரும் என்று தகவல் வந்திருக்கிறது.சிறிது நேரம் காத்திருங்கள்.

      வழக்கு சம்பந்தப்பட்ட செய்தி கிடைத்த அடுத்த நொடியிலேயே நம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

      நானும் உங்களைபோல்தான் வழக்குப் பற்றிய செய்திகளை அறிய ஆவலாக உள்ளேன்.நன்றி............

      Delete
    2. Thank U Admn sir. Romba payama irukku. Stay mudinju order kidachu join panna god than arul purianum.

      Delete
    3. god selected candidates nu iruka intha websit quicka selected teachers nu change aganum pls save us

      Delete
    4. உங்கள் எண்ணம் நிறைவேறும் Sunitha k

      Delete
    5. ADMIN PLS UPDATE ARTICLES ON NORTHERN DISTRICTS LET US INTERACT FOR THE SCHOOL WE WERE ALLOCATED WHY TO WASTE TIME

      Delete
  2. சரியான கருத்துக்கள்,,,,,,,,,

    ReplyDelete
  3. தேர்வு ஆகவில்லையா? அரசு வேலை வேண்டுமா ? ••••••••••••••

    please visit http://unselectedcandidates.blogspot.in/ பொது வலைதளம்

    ReplyDelete
  4. Pls update the case details...

    ReplyDelete
  5. Sir .... what about case????? any news?????

    ReplyDelete
  6. செல்லமுத்து வா
    செல்லதுரை யா
    தற்கொலை முயற்சி நாடகமா?
    உண்மையா? சாவப்போறவன காப்பாத்தலாம் நடிக்கிறவன காப்பாற்ற முடியாது

    ReplyDelete
  7. சார், மணியரசன் சார் தூங்காதிங்க கேஸ் என்னாச்சி. கேட்டு சொல்லுங்கள்

    ReplyDelete
  8. miga sariyaga sonnergal..avanga padam pottu nama life ium keduthu nikkanga..teachera porathuku pathil nadikka pollam..but padam oddathu..

    ReplyDelete
  9. உண்மையான காரணங்களை முன்வைத்து போராடினால் தான் இவரின் சாயம் வெளுத்து விடுமே.பொதுமக்கள், அரசியல்வாதிகள் உட்பட எவரும் இவரை சீந்த மாட்டார்களே.துவக்கம் முதலே தெரியும் இவர் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக தான் போராடுகிறார் என்று.சமூகநீதிக்கு எதிரானது இவரது தலைமையில் நடைபெறும் போராட்டம்.இதை நாம் தமிழ்நாட்டுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடுவதுதான் இவரது உண்மையான காரணம்.ஆனால் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் மறைமுக காரணமாக வைத்து போராடுகிறார்.

      இந்த உண்மை தெரிந்தால் திரு.கருணாநிதி,திரு.தொல். திருமாவளவன் போன்றோர் இவரை மிகக் கடுமையாக எதிர்ப்பார்கள்.

      நமது சார்பில் விரைவில் ஊடகப் பேட்டி வெளியாகும்.நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம்.

      Delete
    2. mikka nandri...press meet viraivil vaithu nam tharapu niyayangalum thellivaga urrakka kura vendum...

      Delete
    3. ennamo ivargal matum pathika patathaga over polambalai tv chennal galil katugirargal...namakum pathipu ullathu..nam ammaithiyaga ullom..padikkamala 10+2+3+b.ed yill athiga mathipengal pettrullom..?

      Delete
    4. உண்மைதான் இவர்களின் போராட்டத்தின் குறிக்கோள் இட ஒதுகீட்டிற்க்கு எதிரானவையே........

      அதனால் தான் அரசும் இவர்களை கண்டூ கொள்ள வில்லை .......

      இவர்களின் அடாபிடியான போராட்டம் சீனியாரிட்டியோ அல்லது பணி அனுபவதிற்கோ அல்ல

      பணி இந்தான்டு கிடைக்கவில்லை எனில் இனி எப்போதும் கிடைக்காது என்ற தவரான கருத்து பரவியதே இந்த போராட்டதிற்க்கு காரணம்......

      போராட்டம் செய்யாமல் அடுத்த பி ஜி டிஆர்பி க்கு படித்தாலாவது சற்று லாபம் கிடைத்திருக்கும்

      Delete
  10. ''கடைசியில் அது நடந்தேவிட்டது ''

    இரவு 12 மணி
    இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது,
    ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக இத்தனை வருடங்கள்
    நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது,
    என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது, தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப் படும்! இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்!

    வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல, போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது, Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை, இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன, இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால் எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?! மக்கள் எல்லோரும் super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை பதுக்கிக்கொண்டார்கள், வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை தேடி ஓட ஆரம்பித்தார்கள்
    IT company கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், எல்லாம் மூடப்பட்டுவிட்டன கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது, எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும் மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது, நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது, நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்!

    ReplyDelete
  11. தொடர்சி:

    வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி பருப்பு வாங்க நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள், உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது,
    வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின,
    Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள், நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய உலக வெப்பமயமாதல் குறைந்து பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது
    வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன! பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும், tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும் உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது,
    பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது, பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது, எல்லாம் இருந்தும் எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த மக்களை மகிழ்விப்பதற்காக ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள் திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது
    ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி! காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது! அதனால், தயவு செய்து கரகாட்டத்தையும் குறட்டையையும் நிறுத்திவிட்டு கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்!
    ஆனால் எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை இந்த கனவும் அப்படித்தான கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான் காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது, கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம்

    பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்!
    பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது.

    ReplyDelete
  12. super article sella durai unaku ithuku mela enna venum

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Replies
    1. .sir,

      தயவுசெய்து இப்பொழுது இதை விடுங்கள்.நம்மை யாராவது தவறாக பேசும் போது நாமும் அப்பொழுது கண்டிப்பாக பேசுவோம்.நன்றி

      Delete
    2. unkalai yarum thaverake pesemattarkel sir, y endal nam ellarum teachers, but unkal pakkam ullavarkel than bad word use pannukirarkel, mukiyemake mathi sir

      Delete
  15. NAN PAPER 1 2004 SENIORITY AND TET MARK 107 AND 12TH ALSO BIOLOGY GROUB THAN 90 PERCENT AND DTED 85 PERCENT NAN SELECT AAGI ULLEN ENATHU DISTRICT IL PANI OTUKEEDUM KIDAITHULLATHU 11 YEARS KU APARAM VELAI KIDAICHU IRUKKU NU HAPPY YA IRUNTHEN BUT IPPO IRUKIRA NILAMAI SARIA SAPTA MUDILA THOONGA MUDIALA PORATTAKARARKALIDAM NAN KETPATHU ENNAI PONTRU ETHHANAI PER PALA VARUDANKALUKKU PIRAKU INTHA JOB PETTRIRUPARKAL PLS CONSIDER ALSO OUR LIFE NEENGA SOLRAMATHIRI MARK KAMMIYA EDUTHAVANGA KONJAM PER THAN VANTHIRUPANGA ENGALAI PONDROR ATHIGAM PER ULLANAR

    ReplyDelete
    Replies
    1. idhayellam media ta direct a sollanum sir.apadhan oru mudivu kidaikum

      Delete
  16. Dear Tet friends,
    Today afternoon item no.53. Stay case is coming at madurai high court all the best friends

    ReplyDelete
    Replies
    1. Sir unga comment a pakkamudiyama romba payama iruku sir.counslin mudnji scl Elam parthu makkal kekra kelviku pathil sola mudila sir

      Delete
    2. Unga logova parthalae selected candidates Ku apadi our anantham sir.lot of thanks to u sir

      Delete
    3. நன்றி sir,

      உங்களுக்குக் கிடைக்கும் தகவலை எங்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.அது பலருக்கு பேருதவியாக இருக்கும்.

      நண்பர்களே,நாம் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.போராட்டக்காரர்களும்,வழக்குத் தொடுத்து இருப்பவர்களும்தான் சுயநலமாக செயல்பட விரும்புகின்றனர்.

      தடையானை உடைக்கப்பட வேண்டுமென்று நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

      Delete
    4. Vijayakumar Chennai.... is the case coming in front of Justice Nagamutu ????

      Delete
    5. WELCOME VIJAY KUMAR SIR WAITING FROM U FOR THE SWEET NEWS

      Delete
    6. VIJAY KUMAR SIR THE SAME FEELING HERE ALSO AS SAID BY SURESH ATLEAST PUT A HI ,HELLO COMMENT SIR

      Delete
  17. pls any body answer me wt abt the case

    ReplyDelete
  18. Thank you dear Suresh. All the best

    ReplyDelete
    Replies
    1. ஆகா....
      விஜயகுமார் சென்னை எங்க சார் போனீங்க
      நன்றி சார்

      Delete
  19. 1). குமார், திருநெல்வேலி மாவட்டம் - டெட் வெயிட்டேஜ் அடிப்படையிலான பணி நியமனத்தை எதிர்த்து கடந்த ஒரு வருடமாக ஏன் போராடவில்லை. இப்போது மட்டும் ஏன் போராட்டம்? போராடுபவர்களின் பெயர்கள் பட்டியலில் வரவில்லை என்பதால் தானே?
    பதில் - இது தவறான கருத்து. 2012 ல் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என இதே சென்னையில் எங்களில் பலர் போராட்டம் செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். 2013 டெட் தேர்வில் ஜனவரி 20 - 23 ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட பிறகு 2013 டெட் தேர்வுக்கு இடஒதுக்கீடு வழங்ப்பட்டவுடன் 2012 ல் நடந்த டெட் தேர்வுக்கும் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் தற்போது தான் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராடுகிறோம் என்பது தவறு. கடந்த ஒரு வருடமாகவே இதற்காக போராடியுள்ளோம்.திரு. பிரபாகரன் தொடர்ந்த வழக்கு எண் 707 மற்றும் திருமதி. சுமதி தொடர்ந்த வழக்கு எண் 708 ஆகிய வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு தற்போது டி.ஆர்.பியால் வெளியிடப்பட்ட தற்காலிக பட்டியல் கட்டுப்பட்டது என டி.ஆர்.பி. வெளியிட்ட தற்காலிக பட்டியலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.

    2). சசி, தேனி மாவட்டம் - டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் என்றால் தங்கள் குழுவில் இருக்கும் 90 மதிப்பெண்கள் எடுத்த பலருக்கும் பணி கிடைக்காமல் போகலாமே? அதற்கு உங்கள் பதில் என்ன?
    பதில் - இதனால் டெட்டில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் கிடைத்து எங்களில் பலருக்கு பணி கிடைக்காவிட்டாலும் இதற்காக வருந்த மாட்டோம். எதிர்கால தலைமுறைக்கு இதனால் நிச்சயம் பயன் உண்டு. மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயன் உண்டு என நிம்மதி அடைவோம்.

    3) ரவி, திருவள்ளுர் மாவட்டம் - நடந்து முடிந்த கலந்தாய்வில், பங்கேற்றவர்களின் பணி ஆணையை பறித்து, தங்களுக்கு பணி ஆணையை வழங்க கோருவது நியாயம் தானா?
    பதில் - ஏறத்தாழ 8000 பேர் முன்னமே ஜனவரியில் சரிபார்ப்பு முடித்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் 3000 தேர்வர்கள் மட்டுமே. எனவே மற்றவர்களின் பணி ஆணையை பறித்து எங்களுக்கு பணி வழங்க கோரவில்லை. டெட் வெயிட்டேஜ் முறையால் இப்போதும், இனி வரும் தலைமுறைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என தான் போராடுகிறோம்.

    4) விமல் மணி, திருவண்ணாமலை மாவட்டம் - இது வரை பல போட்டித் தேர்வு எழுதி எதிலுமே வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
    பதில் - வேறு பணிக்கு நாங்கள் எப்போதும் போகவில்லை. ஆசிரியர் பணி என்பது மட்டுமே எங்கள் கனவு, அதுவே எங்கள் லட்சியம். அதில் மட்டுமே நாங்கள் சாதிக்கவேண்டும் என கருதி அதற்காகவே உழைக்கிறோம்.

    5) படிக்கவேண்டிய காலத்தில் சரியாக படிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
    பதில் - இது தவறு. சில வருடங்களுக்கு முன்பு வரை பொதுத்தேர்வில் மொத்த மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்களை விட, தற்பாது இருப்பவர்களின் மொத்த சராசரி மதிப்பணெ் அதிகமாகியுள்ளது - என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    ReplyDelete
  20. continue
    6) உங்களுக்குள் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட பணி அனுபவம் இருக்கும்போது டெட் தேர்வில் 145 மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்றிருக்கலாமே? ஏன் பெறவில்லை?
    பதில் - தற்போது உள்ள இளையே டெட் தேர்வர்கள் உட்பட எவருமே 145 மதிப்பெண்கள் பெற வில்லை என்பதே உண்மை. மேலும் தற்போது உள்ள டெட் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினம். அதனால் 6,00,000 தேர்வர்களில் 90 மதிப்பெண்களுக்கு பெற்று தாள் 2ல் 14700 தேர்வர்கள் மட்டுமே முதலில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    7) தற்போது நடந்த கலந்தாய்வில் கூட 10 வருடங்களுக்கு முன்னர் படித்த பலரும் கலந்துகொண்டு பணி இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு மட்டும் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிப்பு ஏற்படவில்லையா? என்ன?
    பதில் - ஒரு சிலரை மட்டும் கணக்கெடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணமாக தமிழ் பாடத்தில் 21-25 வயதிற்குள் 14.7 சதவீதம் பணி, 25-30 வயதிற்குள் 66.8 சதவீதம் தேர்வர்களும் , 30 - 58 வயதிற்குள் 18.5 சதவீதம் மூத்தோர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே மூத்தோர்களுக்கு இந்த வெயிட்டேஜ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்.

    8) இதே வெயிட்டேஜ் முறையில் ஒருவேளை தங்களுக்கு மட்டும் இறுதி பட்டியலில் இடம் கிடைத்திருந்தால், அப்போதும் வெயிட்டேஜ் முறையை நீக்கக்கோரி போராடி இருப்பீர்களா?
    பதில் - வருங்கால சந்ததியை காப்பாற்ற நாங்கள் நிச்சயம் அப்போதும் போராடி இருப்போம் என உறுதி தெரிவிக்கிறோம்.

    9) கோபால் - டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் மற்றொரு இளங்கலை டி.ஆர்.பி. தேர்வு வைத்து அதன் மூலம் பணி நியமனம் நடைபெறுவதாக இருந்தால் அதை ஒத்துக்கொள்வீர்களா?
    பதில் - அதற்கும் நாங்கள் தயார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.

    10) பிரிய தர்ஷினி - டெட் தேர்வு என்பது இரண்டு வருடமாகத் தான் நடக்கிறது, அதற்குள் ஒரு நல்ல அரசுக்கு விரைவான, தெளிவான நடைமுறை சாத்தியம் என கருதுகிறீர்களா?
    பதில் - ”முதல் கோணல், முற்றிலும் கோணல்” - என்பது போல் துவக்கம் முதலே டெட் தேர்வு பணி நியமனத்தில் பல்வேறு சிக்கல்கள் இதுவரை ஏற்பட்டிருப்பதால், இப்போதே இதற்கு தீர்வு கண்டாக வேண்டும் என தான் நாங்கள் போராடுகிறோம்.

    ReplyDelete
  21. continue
    6) உங்களுக்குள் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட பணி அனுபவம் இருக்கும்போது டெட் தேர்வில் 145 மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்றிருக்கலாமே? ஏன் பெறவில்லை?
    பதில் - தற்போது உள்ள இளையே டெட் தேர்வர்கள் உட்பட எவருமே 145 மதிப்பெண்கள் பெற வில்லை என்பதே உண்மை. மேலும் தற்போது உள்ள டெட் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினம். அதனால் 6,00,000 தேர்வர்களில் 90 மதிப்பெண்களுக்கு பெற்று தாள் 2ல் 14700 தேர்வர்கள் மட்டுமே முதலில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    7) தற்போது நடந்த கலந்தாய்வில் கூட 10 வருடங்களுக்கு முன்னர் படித்த பலரும் கலந்துகொண்டு பணி இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு மட்டும் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிப்பு ஏற்படவில்லையா? என்ன?
    பதில் - ஒரு சிலரை மட்டும் கணக்கெடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணமாக தமிழ் பாடத்தில் 21-25 வயதிற்குள் 14.7 சதவீதம் பணி, 25-30 வயதிற்குள் 66.8 சதவீதம் தேர்வர்களும் , 30 - 58 வயதிற்குள் 18.5 சதவீதம் மூத்தோர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே மூத்தோர்களுக்கு இந்த வெயிட்டேஜ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்.

    8) இதே வெயிட்டேஜ் முறையில் ஒருவேளை தங்களுக்கு மட்டும் இறுதி பட்டியலில் இடம் கிடைத்திருந்தால், அப்போதும் வெயிட்டேஜ் முறையை நீக்கக்கோரி போராடி இருப்பீர்களா?
    பதில் - வருங்கால சந்ததியை காப்பாற்ற நாங்கள் நிச்சயம் அப்போதும் போராடி இருப்போம் என உறுதி தெரிவிக்கிறோம்.

    9) கோபால் - டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் மற்றொரு இளங்கலை டி.ஆர்.பி. தேர்வு வைத்து அதன் மூலம் பணி நியமனம் நடைபெறுவதாக இருந்தால் அதை ஒத்துக்கொள்வீர்களா?
    பதில் - அதற்கும் நாங்கள் தயார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.

    10) பிரிய தர்ஷினி - டெட் தேர்வு என்பது இரண்டு வருடமாகத் தான் நடக்கிறது, அதற்குள் ஒரு நல்ல அரசுக்கு விரைவான, தெளிவான நடைமுறை சாத்தியம் என கருதுகிறீர்களா?
    பதில் - ”முதல் கோணல், முற்றிலும் கோணல்” - என்பது போல் துவக்கம் முதலே டெட் தேர்வு பணி நியமனத்தில் பல்வேறு சிக்கல்கள் இதுவரை ஏற்பட்டிருப்பதால், இப்போதே இதற்கு தீர்வு கண்டாக வேண்டும் என தான் நாங்கள் போராடுகிறோம்.

    ReplyDelete
  22. continue
    11) கோபால கிருஷ்ணன் - ஒரு வேளை நீதிமன்றம் ஸ்டே ஆர்டரை நீக்கி பணி நியமனம் நடைபெற்று விட்டால், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்?
    பதில் - அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாது என உறுதியாக நம்புகிறோம். ஒரு குடும்பத்திற்கு 5 நபர்கள் வீதம் பாதிக்கப்பட்ட 62,500 டெட் தேர்வர்களின் 3,12,500 நபர்களின் வாழ்வாதார பிரச்சினை இது. எனவே நீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என கருதுகிறோம். அப்படி ஒரு வேளை நீங்கள் கூறியது போல் தீர்ப்பு வந்தால், அடுத்த கட்ட நடவடிக்கையை போராட்டக்குழுவும், எதிர்காலமும் தீர்மானிக்கும்.

    12) டெட் மதிப்பெண் மட்டுமே தகுதியான ஆசிரியர் தான் என நிர்ணயிக்க போதுமானதா?
    பதில் - இதை ஒப்புக்கொள்ள மாட்டோம். தற்போது நடைபெறும் டெட் வினாத்தாளின் அடிப்படை அமைப்பு முறையே தவறு என்பதால் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம். டெட் - 80 மதிப்பெண்ணும், பணி அனுபவம் - 10 மதிப்பெண்ணும், பதிவு மூப்பிற்கு - 10 மதிப்பெணும் வழங்கி பணி நியமனம் நடைபெற்றால், அது ஒரளவிற்கு ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறோம்.

    13) 10 வருடங்களுக்கு முன்னரும் 12 ஆம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இருக்கிறார்களே? அதனால் 10 வருடங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என்பது தவறான கூற்று தானே?
    பதில் - 10 வருடங்களுக்கு முன் மாநில அளவில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கானோர் 1000க்கும் மேல் மதிப்பெண் பெறுகிறார்கள் என்பது புள்ளி விரங்களின் அடிப்படையில் உள்ள விளக்கம்.. எனவே மொத்த மாணவர்களின் மொத்த சராசரி மதிப்பெண்களை தற்போது உள்ள மொத்த மாணவர்களின் மொத்த சராசரி மதிப்பெண்ணுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்போது தான் நாங்கள் கூறுவது உண்மை என உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.

    14) உண்மையில் உங்கள் போராட்டம் வெயிட்டேஜ் முறைக்கு எதிரானதா? அல்லது இடஒதுக்கீடு முறைக்கு எதிரானதா?
    பதில் - வெயிட்டேஜ் முறைக்கு மட்டுமே எங்கள் போராட்டம் எதிரானது. இட ஒதுக்கீடு முறைக்கு எதிரானது அல்ல. அடித்தட்டு மக்களை முன்னேற்ற இடஒதுக்கீடு அவசியம் வேண்டும் என கருதுகிறோம்.

    15) சுருளிவேல் - எந்த காரணங்களுக்குாக போராடுகிறீர்கள் என உங்கள் கோரிக்கைகளை முழுமையாக தெரிவிக்க இயலுமா?
    1) வெய்டேஜ் முறையை அறவே ஒழிக்க வேண்டும்.
    2) தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெற வேண்டும்.
    3) 2013-14 மற்றும் 2014-15 காலிப்பணியிடங்களில் டெட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, கணக்கெடுத்து, பணியமர்த்தியபிறகே அடுத்த டெட் தேர்வு அறிவிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  23. continue
    16) ராஜ்குமார் - பள்ளி , கல்லூரிகளின் சீரான தேர்வு முறையின் மூலம் பெறும் மதிப்பெண்களைப் போலல்லாமல் TET போன்ற தேர்வுகளில் 15 முதல் 20 சதவீதம்வரை LUCK MARK பெறலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அவ்வாறு உள்ளபோது மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம் கோருவது தவறு இல்லையா?
    பதில் - ஒரு தமிழாசிரியருக்கு 30 ஆங்கில வினாக்கள், 60 சமூக அறிவியல் வினாக்கள் இடம்பெறும்போது, வினாத்தாள் அடிப்படையே தவறு என உறுதியாகிறது. எனவே டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என நாங்கள் கேட்பது என்ன தவறு?.

    17) கௌதம், வேலூர் மாவட்டம் - டெட் தேர்வு என அல்லாமல், எந்த தேர்விலுமே சராசரி மாணவர்கள் வெற்றி பெற்று வேலைக்கு செல்வது கடினம் தானே?
    பதில் - இது தவறு. இதனை சமூகம் தீர்மானிக்கும். சராசரி மாணவர்கள் பலரும் IAS, IPS உட்பட பல்வேறு உயர் பதவி ஏற்றுள்ளனர். எனவே சராசரி மாணவர்களும் உரிய நேரத்தில் உரிய உழைப்பை வழங்கும் போது நிச்சயம் வெற்றி பெற இயலும்.

    18) எந்த முறையில் பணி நியமனம் நடைபெற்றாலும் 15000 ஆசிரியர்களுக்கு மேல் மீதமிருப்பவர்களுக்கு பாதிப்பு தான். அப்படியிருக்க அவர்களுக்கு தங்கள் பதில் என்ன?
    பதில் - டெட் மதிப்பெண் முறையில் பணி நியமனம் நடைபெற்ற பிறகு, மீதமிருக்கும் பணி இடங்களிலும், கூடுதல் பணிஇடங்களிலும், தற்போது பாதிக்கப்படுபவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றுதான் உறுதியாக கோருகிறோம்.

    19) ஆரோக்கியராஜ் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அடுத்த தேர்வில் முன்னுரிமை கேட்பது நியாயமா? அதை விடுத்து வெயிட்டேஜ் ரத்து செய்ய கோரி போராட்டம் என்ற பெயரில் அரசு பணிகளை முடக்கி ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குவது நியாயமா?
    பதில் - தற்போதே ஆசிரியருக்கான தகுதித் தேர்வில் 118 மதிப்பெண்கள் பெற்று எங்கள் திறமையை நிரூபித்துள்ளோம். எனவே நாங்கள் முன்னுரிமை கேட்பது நியாயமானது.

    20) கார்த்திக் விசாலம் - போராட்ட களத்தில் இருப்பதால் உங்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் செயல்படுகின்றன. இதனால் ஒருவேளை எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அப்போதும் எங்களுக்காக நீங்கள் போராடுவீர்களா?
    பதில் - 2012லேயே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராயுள்ளோம். எனவே பாதிப்பு யாருக்கு ஏற்பட்டாலும், நிச்சயம் போராடுவோம்.

    ReplyDelete
  24. continue
    21) மனசாட்சிப்படி கூறுங்கள் - அரசை நிர்பந்திப்பதற்காக வருங்கால ஆசிரியர்களாகிய நீங்கள் ”தற்கொலை முயற்சி” போன்றவற்றில் ஈடுபட்டு மிரட்டுவது தவறு என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
    பதில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வரை சந்தித்து எங்கள் நிலையை விளக்க முயன்றும், எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜன நாயக உரிமைகள் மதிக்கப்படவில்லை. எனவே அதிகபடியான ஏமாற்றம் மற்றும் தொடர் ஏமாற்றம் காரணமாகவே இந்த தற்கொலை முயற்சி நடைபெற்றது. இது மனித இயல்பு.

    22) வெயிட்டேஜ் முறை சரி எனவும், கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் ஒருவேளை நீதிமன்றத் தீர்ப்பு வந்தால், அப்போதும் எதிர்கால ஆசிரிய சமூகத்திற்காக, வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராடுவீர்களா? அல்லது தங்களுக்கு பணி நியமனம் கிடைத்த வரை போதும் என போராட்டத்தை நிறுத்தி விடுவீர்களா?
    பதில் - அப்போதும் அடுத்த தலைமுறைக்காக - நிச்சயம் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராடுவோம்.

    23) தற்போது தேர்வு பெற்று பணி இடத்தை தேர்வு செய்திருப்பவர்களுக்கும் பாதிப்பில்லாமல், தங்களுக்கும் பணி கிடைக்க தாங்கள் முன் வைக்கும் தீர்வு தான் என்ன?
    பதில் - டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்ற பிறகு 2013-14 காலிப்பணியிடங்கள், 2014-15 காலிப்பணியிடங்கள், ஆதிதிராவிடர் மற்றம் நலத்துறை பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் போன்றவற்றில் காலிப்பணியிடங்கள் கணக்கெடுத்து, எவருக்கும் பாதிப்பு இல்லாமல் தற்போது தேர்வு பட்டியில் இடம்பெற்று பணி நியமனம் கிடைக்காமல் பாதிக்கப்படுவர்களுக்கும் பணி நியமனம் வழங்கலாம். இதுவே நாங்கள் முன்வைக்கும் தேர்வு.

    "Life life enjoy, life is our hand"

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு சொன்ன நீங்கள் உங்களின் நிஜ பெயரில் சொல்லி இருந்ததால் நன்றாக இருந்திருக்கும் நண்பரே

      ANY HOW THANKS FOR THE CLARIFICATIONS U GAVE ON BEHALF OF AGITATORS

      Delete
  25. வணக்கம் ஆசிரியர்,
    இப்போது திரு.செல்லதுரை பேராதுவது போல் சென்ற 2012ம் ஆண்டு நடந்த தேர்வில் வெயிட்டே்ச் கொடுத்து இப்போது கொடுக்கவிலைல என்றால் நாமும் போராடியிருப்ேபாம். அவர் பேராடுவதில் என்ன தவறு. ஒவ்வொரு ஆண்டும் ஒரு அரசாைனயா? நாம் எல்ேலாரும் ஆசிரிியர் நம் மீது நாமே சேற்றை வாரி பூசிக் கொண்டிருக்கிேறாம். இதில் யார் வெற்றி பெற்றாலும் ஆசிரியர் சமுதாயம் தான் ெவற்றி ெபற்றது. நாம் எல்லாம் எத்தைனேய மாணவர்களுக்கு ஏணி ேபால இருந்ேதாம். இப்ேபாது நம் பத்தி நாமே குறை சொல்லி நம் குரு தொமிைல கேவளப்படுத்துகிறோம்.

    ReplyDelete
  26. இன்று அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை.
    Stay order copy not received from Court officer so far.
    May be Thursday or friday case will come.

    ReplyDelete
    Replies
    1. stay order case vida important case enna iruku? intha case deal pannaama apdi enathaan panraanga ? cha sema tension

      Delete
    2. stay order copy not yet received! what a pathetic condition in govt court!

      Delete
  27. pla niethibathi tharatha thadai aanaiyai oru niethibathi tharuvathu nam sattaththilthan

    ReplyDelete
  28. போராட்டக்குழு தலைவர் போல் தன்னை காட்டி கொள்ளும் திரு. செல்லதுரை அவர்களே,
    1) அரசாங்கம் ஒரு சில முறை படி தேர்வு செய்யும் பொழுது, சிலருக்கு சாதகமாகவும் ஒரு சிலருக்கு பாதகமாகவும் அமையும், எல்லோருக்கும் சாதகமாக எப்பொழுதும் எல்லா காரியங்களும் அமையாது. அப்படி இருக்கையில் உங்களுக்கு சாதகமாக அமையும் விஷயம் மற்றவர்களுக்கு கண்டிப்பாக பாதகமாக தான் அமையும்.
    2) அரசாங்கம் 4 + 3 = 7 என்றால், நீங்கள் 5 + 4 = 9 என்று உங்களுக்கு சாதகமாக பேசுறிங்க. அரசாங்கத்திடம் நீங்கள் வேலை கேட்கிறிங்களா ? அல்லது அரசாங்கம் உங்களை வேலைக்கு சேர்க்க ஆர்வம் கட்டுகிறதா ?
    3) போராடும் 50 - 100 பேர்களை மீடியாவில் திரும்ப திரும்ப காட்டி, என்னமோ இவர்கள் எல்லோரும் 100 க்கு 100 மார்க் எடுத்து வேலை கிடைக்காது போலவும், மற்ற 11000 பேர்கள் 100 க்கு 25 மார்க் எடுத்து குறுக்கு வழியில் வேலைக்கு வந்தது போலவும் காட்சிகள் அமைகிறது. அந்த அந்த பாட பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப இட ஒதுக்கிடுக்கு ஏற்ப, ஏழைகள் வாழ்வின் ஒளிவிளக்கு அம்மாவின் தலைமையிலான இந்த அரசாங்கம் எங்களை போன்ற ஏழைகளுக்கு அளித்த இந்த வாய்ப்பினை தட்டி விட்ட நீயெல்லாம் நல்லா இருப்பே ???????

    ReplyDelete
    Replies
    1. Malar madam Unkaluku life kidaika neena comment podalam 12000 teacher mattum kural kodukila nam 70000 teacher ku kural kodukira namma teacher chelladurai pathi pesa unkalku thagithi illa mam.

      Delete
    2. poratta kuzhuvinar sollum korikkaikalai thangal sollamudiuma mr.kumar?

      Delete
    3. SIR UNKALUKU NAME ILLA THOLAINOKKU PARVAIYUM ILLA. INTHA GO IRUNTHA 80% BED PADIKIVANGAL PADICHI MUDICHIVANGAL BATHIPANGA SIR. APPA MAGAN TET 90 MARK MAGAN GET JOB APPA NO JOB HIS 10,11,DEGREE,B.ED MARK LOW SIR. NENGA SOLLUNGA SIR YARUKU KIDAIKINUM.

      Delete
  29. hello mr.kumar...thaguthi illa apdi ipdi nu konjamathigama pesuringa....inga yarum jathi pathi pesala..teachers jathi pathi pesakudathuna reservation um iruka kudathe,,,nadaimuraila iruka visayatha sonna ungaluku yen ivlo kovam...unga community crt lam enna kilichu pottutingala????

    ReplyDelete
    Replies
    1. 2012 KU ORU GO 2013 KU ORU GO EPPADI CORRECTA SIR. THIS IS GOVERNMENT MISKAKE. AVARGAL PORATTAM CORRECTA SIR. TEACHERA SOLLUNGA

      Delete
    2. OC COMMUNITY KU 60% MARK ELIGIBLE. BC.MBC.DNC.BCM.SC.ST KU MATTUN 55% MARK RELAXATION SIR. AVARGALKUM 55% VENDUM KODA PORATHAVILLAI SIR AVANGA. 2012 LA FOLLOW PANNA MATRI THAN APPOINTMENT KEKATANGA SIR. UNKA MELA AVANGALKU KOVAM ILLA SIR GOVERNMENT MELA THAN KOVAM. 2012 METHOD FOLLOW PANNA LIST IRUKIRA 80% APPADIYA IRUPANGA 20% MATTUM CHANGE AGUM SIR.

      Delete
  30. வணக்கம்.தயவுசெய்து யாரேனும் எனக்கு உதவுங்கள்.
    நான் சென்னையைச் சார்ந்தவள்.
    பல தடைகளை மீறி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். நான் தேர்ந்தெடுத்த பள்ளி அரசு மேனிலைப்பள்ளி,குடியாத்தம்,வேலூர். இப்பள்ளியை வரைபடத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளை குடியாத்தம் சென்று வீடு பற்றி விசாரிக்க உள்ளனர். நெல்லூர்பேட்டை அரசுப்பள்ளி என்றுள்ளதே அதுதான் குடியாத்தம் பள்ளியா..
    என் நிலை அறிந்து உதவவும். நன்றி.

    ReplyDelete
  31. தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே.....

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..