ஷாஜஹானின் தோட்டம் டில்லியில் கண்டுபிடிப்பு

டில்லியில் உள்ள, வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில், புதைந்து போன, ஷாஜஹான் அமைத்த தோட்டத்தை, இந்திய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
கடந்த 1638ல், முகலாய மன்னராக இருந்த ஷாஜஹான், தன் அரசின் தலைநகரை, ஆக்ராவில் இருந்து டில்லிக்கு மாற்ற திட்டமிட்டு, அதற்காக, 1639ல், தற்போதுள்ள செங்கோட்டையை கட்டுவதற்கு அடித்தளமிட்டார். 1648, ஏப்ரல் 16ல், கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.கோட்டை வளாகத்தில், அரண்மனைகள் தவிர, தோட்டம் மைக்கப்பட்டுள்ளது. இதில், பலவித பழ மரங்கள், மனதை மயக்கும் நறுமண பூச்செடிகள், கொடிகள், வளர்க்கப்பட்டன. மல்லிகை, முல்லை, அல்லி, சம்பங்கி, கனகாம்பரம் உள்ளிட்ட மலரினங்கள் இருந்தன.கடந்த 1857ல், செங்கோட்டை யை கைப்பற்றிய ஆங்கி லேயர்கள், அங்கிருந்த தோட்டத்தை மண் நிரப்பி, ராணுவ அணிவகுப்பு மைதானமாக மாற்றினர். சில ஆண்டு களுக்கு முன், நூலகத்தில் இருந்து, 1857
ஆண்டுக்கு முந்தைய ஆவணம், இந்திய தொல்லியல்துறையினருக்கு கிடைத்தது.அந்த ஆவணத்தின்படி, கோட்டைக்குள் இருந்த தோட்டம் குறித்த தகவல் கிடைத்தது.புதைந்து கிடந்த அந்த தோட்டத்தை, வெளியில் கொண்டு வரும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதன் பின், அந்த தோட்டம் பழையபடி பராமரிக்கப்படும்.

Post a Comment

0 Comments