ஒளிக்க முடியாத தகவல்: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம்-


இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.


எப்போது தொடங்கியது:

2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி விஜயதசமி அன்று நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

எப்படி பெறுவது:

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம் குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

Post a Comment

20 Comments

  1. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. இருக்கட்டும் இருக்கட்டும் .. என்ன விஷயம் அமைச்சரே...????

      Delete
    2. மன்னர் மன்னா தங்களது தொலைந்து போன தொலைபேசியை கண்டுபிடித்து விட்டீர்கள

      Delete
  2. Sri sir one help..kooduthal paniyidathuku salary go varalanu soldranga..epa varum..details sola mudiuma

    ReplyDelete
    Replies
    1. அதிகபட்சமாக மூன்று மாதங்கள் ஆகும்.. ஆனால் இப்போது அதிக பணியிடங்கள் என்பதால் இந்த மாதமே இதற்க்கான பணிகள் முடிந்துவிடும்....

      Delete
  3. Hai sri sir kalviseidhi website la ,oruthar 2013 tet la select anavanglku periya aappu supreme court vaikapodhungraru sir,,romba bayamarku,,pls clarify sir,,success sir,,anniku neenga ariyalyr dstrct nu soningle,which schl

    ReplyDelete
    Replies
    1. நான் அரியலூர் மாவட்டம் இல்லை நண்பரே... சேலம் மாவட்டம் எனது மாவட்டத்திலேயே எனக்கு கிடைத்துவிட்டது.. பெரிய ஆப்பு ஏதும் இதற்க்கு மேல் வர வாய்ப்பு இல்லவே இல்லை... அதை பற்றி சிறு துளி அளவிற்கு கூட கவலைப்பட வேண்டாம்.. வேண்டுமென்றால் இதை பற்றி உங்களது நட்பு வட்டாரத்திலுள்ள வக்கீலிடம் கூட விசாரித்து பாருங்கள் உங்களுக்கு விளக்கம் கிடைக்கும்...

      சிறு துரும்பளவு கூட நம்பவேண்டாம்...

      Delete
    2. Thank u so much sri sir,,,ipodhan konjam relief ah irku,,innoru doubt sir,,enga schl hm ennoda emp.card ah kekala,Sila schl ah vangikitanglam,adhuku ena sir pannanum,,,

      Delete
    3. Kooduthal paniyidam enbathal yethenum pblm unda sri sir

      Delete
    4. நீங்கலாக கொடுத்து விடுங்கள் வாங்கிகொள்வார்கள்.... அது ஒன்றும் பெரிய விசயமெல்லாம் கிடையாது உங்களது பதிவு எண்ணை வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து நீக்கவேண்டும்...

      Delete
    5. Sir ungaluku therinthu veru yarathu kooduthal paniyidathil ulanara

      Delete
    6. அதனால் எந்த பிரச்சினையும் கிடையாது.. வேலை உறுதி..
      புதிய(உருவாக்கப்பட்ட) பணியிடங்களுக்கான சம்பள தலைப்பு மட்டும் இன்னும் கொடுக்க படவில்லை அதனால் தான் தாமதம்....

      Delete
    7. ஒரு சில நண்பர்கள் இருகிறார்கள்...

      Delete
    8. Evlo natkal agum salary head vara

      Delete
    9. நவம்பர் மாதத்திற்குள் எதிர்பார்க்கலாம்...

      Delete
    10. K sir thank u fr ur information...sila per 6 month agum engirargal.unmaya

      Delete
    11. ஒரு சில பணியிடங்கள் மட்டும் நிரப்ப படும் போது கால தாமதமாகும்... ஆனால் இம்முறை பணியிடங்கள் மிகஅதிகம் அதனால் காலதாமதம் ஆவது குறைவு....

      Delete
  4. Ayuur govt HSS..BT nan kooduthal paniyidam

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..