சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானியின் வாதம் நிறைவு பெற்றது.சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இதில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி,அரசு தரப்பு கருத்தைக் கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம். மேலும், இது போன்ற வழக்குகளில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது போல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராம் ஜெத்மலானி வாதாடினார்.அரசு வழக்குரைஞர் பவானி சிங்கின் வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் கூறிய ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா, சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவர். அவருக்கு ஜாமீன் வழங்கினால், நாட்டை விட்டு எங்கும்தப்பிச் சென்றுவிட மாட்டார் என்றும் உறுதி அளித்தார்.ஜெயலலிதா தரப்பு மனு மீதான விசாரணைநிறைவு பெற்றதை அடுத்து, சசிகலா சார்பில் வழக்குரைஞர் அமித் தேசாய் தனது வாதத்தை துவக்கியுள்ளார்.

Post a Comment

0 Comments