கல்வியாளர் போரப்பாவுக்கு வால்மீகி விருது

"அரசு வழங்கும், 'மகரிஷி வால்மீகி' விருதுக்கு, இந்தாண்டு கல்வி வல்லுனரும், சமூக சேவகருமான போரப்பா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,” என, சமூகநலத் துறை அமைச்சர், ஆஞ்சநேயா தெரிவித்தார்.


நிருபர்களிடம், அவர் கூறியதாவது: 'மகரிஷி வால்மீகி' விருது தேர்வுக்காக நியமிக்கப்பட்டிருந்த, சித்தராமையா தலைமையிலான தேர்வு கமிட்டி, இந்தாண்டு, சித்ரதுர்காவின் தொட்டலகட்டா கிராமத்தைச் சேர்ந்த போரப்பாவை தேர்வு செய்துள்ளது. இவர், பல கல்வி நிறுவனங்களை அமைத்துள்ளார். இத்துடன், மாவட்டத்தின் மதகிரி நாயகர் சங்கத்தை உருவாக்கியவர். இந்த விருது, 2 லட்சம் ரூபாய் ரொக்கம், சான்றிதழை உட்கொண்டதாகும். நாளை, விதான் சவுதா மாநாட்டு அறையில் நடக்கவுள்ள, வால்மீகி ஜெயந்தி நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, இந்த விருதை வழங்குகிறார். வால்மீகி மடாதிபதியான, ஸ்ரீ பிரசன்னானந்த சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரின் பொருளாதாரம், கல்வியின் நிலையை ஆய்வு செய்ய, இந்தாண்டு, 4,515 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு, 180 கோடி ரூபாய் செலவில், 15 வால்மீகி உறைவிடப்பள்ளிகள் புதிதாக துவங்கப்படும்.

மலைவாழ் மக்களுக்கு, மழை காலத்தில், ஆறு மாதங்களுக்கான உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, 30 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

வன உரிமை சட்டத்தின் கீழ், 7,000 மலைவாழ் மக்களுக்கு, உரிமை பத்திரிகை கொடுக்கப்பட்டுள்ளது. போலி ஜாதி சான்றிதழ்கள் வழங்கி, வேலை வாய்ப்பு பெற்றுள்ள அதிகாரிகள் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

4 Comments

  1. Kolumni,............

    Kolumni.....................

    Kolumni................................


    Trb seivathu migapperiya kodumai.

    Adtw 'minority school vaccant fill pannama thoongaranga

    Vankodumai seiyum trb ozhiga.

    Saathi veri piditha trb ozhiga

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஜெ க்கு ஜாமின் மறுப்பு www.gurugulam.com

    ReplyDelete
  4. சுப்ரீம் கோர்டில் கேஸ் பைல் செய்ய நினைப்பவர்கள் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக வாதடக்கூடிய சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரம் அவர்களை உடனடியாக அனுகவும். மேல்முறையீடு செய்ய குறைவான காலமே உள்ளதால் காலதாமதம் வேண்டாம்.

    சிலர் சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்கிறோம் என்ற போர்வையில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் யாரும் சுப்ரிம் கோர்ட் லாயர் கிடையாது. இவர்கள் அங்கு சுப்ரிம் கோர்ட்டில் வேறு லாயர் யாரையாவது வைத்து தான் வாதிடுவார்கள். அவர்களை பற்றி தெரியாமல் நாம் ஏமாற்றப்படுவோம். ஆகவே நேரடியாக வாதாடக்கூடிய சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரத்தை சந்தியுங்கள், கேஸ் பைல் செய்து கொள்ளுங்கள். இதுதான் உங்களக்கு நல்லது.

    கேஸ் போடுபவர்களுக்கு மட்டும் தான் பணி நியமனம் உறுதி செய்யப்படும்

    ஆபீஸ் முகவரி.:-

    கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..