மத்திய அமைச்சர் அவை விரிவாக்கம் ,புது முகங்களுக்கு வாய்ப்பு !!!

பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்திற்கு முன் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில்,
  கோவா முதல்வர் மனோகர் பரிகருடன், கிரிராஜ்சிங், ராம்கிருபால் யாதவ்
மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட சிலருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக வசதிக்காக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போது, அதிக பணிச்சுமை கொண்ட நிதி மற்றும் பாதுகாப்பு துறை அருண் ஜெட்லியிடம் உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு துறைக்கு புதிய அமைச்சரை நியமிக்கவும், மேலும் பல துறைகளுக்கு புதுமுகங்களை நியமிக்கவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். பிரதமரின் ஆஸ்திரேலிய பயணத்திற்கு முன் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுமுகங்கள் யார்?:

விரிவாக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் தற்போதைய கோவா முதல்வர் மனோகர் பரிகர் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவருக்கு, பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மேலும் சிலரின் பெயர்களும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் பட்டியலில் அடிபடுகின்றன. பீகாரில் இருந்து, கிரிராஜ்சிங் மற்றும் ராம்கிருபால் யாதவ் ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தின்போது, நரேந்திர மோடி பிரதமர் ஆவதை பிடிக்காதவர்கள் இந்தியாவை விட்டு வௌியேறி, பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்று கூறி, பரபரப்பை ஏற்படுத்தியவர் கிரிராஜ்சிங். லாலு பிரசாத் முகாமில் இருந்து வௌியேறி, பா..,விற்கு வந்தவர் ராம்கிருபால் யாதவ். இவர், லாலுவின் மகள் மிசா பார்தியை தேர்தல் தோற்கடித்தவர். இதனால், யாதவுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பீகாரைச் சேர்ந்த கிரிராஜ்சிங், ராம்கிருபால் யாதவ் ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுப்பதன் மூலம், பீகாரை பிடிக்க முடியும் என, பா.., கருதுவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

சிறுபான்மையினருக்கும் வாய்ப்பு:

பா..,வின் செய்தி தொடர்பாளராக பல ஆண்டுகளாக இருந்து வரும் முக்தர் அப்பாஸ் நக்விக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முஸ்லிமான இவருக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம், சிறுபான்மையிரின் ஆதரவு பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தவிர, மகாராஷ்ட்ராவில் இருந்து இருவர் அமைச்சரவையில் இடம் பெறலாம் என்றும், அவர்களில் ஒருவர் சிவசேனா கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஸ்வந்த்சின்ஹாவின் மகன், ஜெயந்த் சின்ஹாவும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தற்போதுள்ள அமைச்சர்கள் சிலருக்கு பதவி உயர்வு இருக்கலாம் என்றும் , சிலர் வௌியேற்றப்படவும் கூடும் என்றும் பா.., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அமைச்சரவையில் இடம் பெற உள்ள புதியவர்கள் குறித்த தகவல்கள் நாளை வௌியாகும் என்று கூறப்படுகிறது.

ஜெட்லி கிரீன் சிக்னல்:

இந்நிலையில், டில்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பேசுகையில், 'நான் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற போது, அது எனக்கு கூடுதலாக அளிக்கப்பட்ட துறை என்று கூறினேன். அமைச்சராக பொறுப்பேற்ற பின் நான் கூறிய அந்த வார்த்தையை கேட்டு மக்கள் வியப்படைந்தனர். பாதுகாப்புத்துறை விட்டுக்கொடுக்க தயாராகவே இருக்கிறேன்,' என்று கூறி உள்ளார். இதன் மூலம், பாதுகாப்பு துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

Post a Comment

0 Comments