துவக்கப்பள்ளி
வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை
உள்ளடக்கிய பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 2015-16 கல்வியாண்டில், துவக்கப்பள்ளிகள் இல்லாத குடியிருப்பு பகுதிகளில்,
பள்ளிகளை துவக்கும் பொருட்டு, கடந்த மாதம், அனைவருக்கும்
கல்வி இயக்கத்தின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து,
சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர்கள், வட்டார வள மையங்களில்
பள்ளிகள் தேவைப்படும் குடியிருப்பு பகுதிகளின் பட்டியலை பெற்று, தனி நபரைக்கொண்டு,
நேரடியாக தொடக்கக்கல்வி இயக்ககத்தில், வரும் 10ம் தேதிக்குள்
ஒப்படைக்க வேண்டும். மேலும், நடுநிலைப்பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட வேண்டிய, துவக்கப்பள்ளிகளின் பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..