வைத்தது மூன்று !!! கிடைத்தது இரண்டு !!! SSTA கோரிக்கை !!



இன்று (13-11-2014) SSTA மாநில பொறுப்பாளர்கள் மதிப்பிற்குரிய தொடக்கக் கல்வி  இயக்குநர் அவர்களை சந்தித்தனர். தொடக்கக் கல்வி துறையில் 5 ஆண்டுகளாக வழங்கப்படமால் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் (CPS )ஒப்புகை சீட்டு SSTA வின் சீரிய முயற்சியினால் (10.09.2014) அன்று வழங்கப்பட்டது.

ஆனால் பல ஒன்றியங்களில் ஒப்புகை சீட்டு இதுவரை வழங்கவில்லை என்ற புகார் எழுந்தது , நமது மாநில பொறுப்பாளர்கள் உடனடியாக இணையதளத்தில் ,வழங்காத ஒன்றியங்கள் பட்டியல் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டியிருந்தனர் ,அதனை ஏற்று நமது இயக்கத்தினர் மற்றும் சகோதர  இயக்க பொறுப்பாளர்களும் SSTA மாநில பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் ஒன்றியத்தில் வழங்க படவில்லை என தெரிவித்தனர் , அந்த பட்டியல் இயக்குநரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் CPS பிரிவு  அதிகாரியை அழைத்து உடனடியாக ஒப்புகை சீட்டு வழங்கிட கேட்டு கொண்டுள்ளார் வழங்காத ஒன்றியத்தில் உடனடியாக வழங்க ஆணையும்யிட்டுள்ளார் . இன்னும் ஒரு வாரத்தில் அனைவருக்கும் CPS ஒப்புகை சீட்டு பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Missing Credit உள்ளவர்களுக்கும் சரி செய்ய கால அவகாசம் வேண்டப்பட்டது. இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக அனைவரும் ஒப்புகை சீட்டு வழங்கப்படும் !அனைவரும் ஒப்புகை சீட்டு பெறும் வரை ஓயமாட்டோம்!!! ,                                 மற்றொரு கோரிக்கையான.                 உயர் கல்விக்கு முன் அனுமதி( pre permission ) இல்லாத ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க ௯டாது என்ற கடிதம் எண்;023458/1/2014 படி பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன ,பின்அனுமதி பெற்று பலன் அடைந்த ஆசிரியர்களும், இனி இக்கடிதத்தால்  பாதிக்கும் ஆசிரியர்கள் பிரச்சினைகள் பற்றி ௯றி, இதுவரை பயின்றவர்களுக்கு பின் அனுமதி அளித்தும் இனி வரும் காலங்களில் முன் அனுமதி பெற்று உயர் கல்வி பயில வேண்டும் என்று இயக்குநரிடம். கோரிக்கை வைக்கப்பட்டது இந்த குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் இன்னும் ஒரிரு தினத்தில் பின் அனுமதி வேண்டுபவர்கள் பட்டியல் பெறப்பட்டு அரசிடம் அனுமதி பெற்றுவிட நடவடிக்கை மேற்கொள்ளபடவிருக்கிறது..             எடுத்த கோரிக்கையை வெற்றி பெறும் வரை ஓயாது SSTA!!!               உண்மையை சொல்வோம் !!! சொல்வதை செய்வோம் !!!


Post a Comment

0 Comments