கொசுவிரட்டி

தொழு நோயாளிகளுக்கு கொசு விரட்டி, 'ஸ்டிக்கர்'களைத் தயாரித்து வழங்கும் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டைச் சேர்ந்த சையத் தாஜுதீன்: என் அப்பா கே..சையத் ஹசனுதீன், கால்நடை மருத்துவர். மாடுகளுக்கு அடிக்கடி கோமாரி நோய் தாக்கும். நோய் தாக்கிய ஆடு, மாடுகளைக் கொசு கடிக்காமல் இருக்க, அவற்றுக்கு வேப்பெண்ணெய் கற்பூரம் கலந்து தடவச் சொல்வார்;
இந்த வாசனைக்கு கொசு வராது என்பார். அந்தக் கருத்து, என் மனதில் ஊன்றி விட்டது. அவரின் நினைவாக மனிதர்களுக்கு, குறிப்பாக தொழு நோயாளிகளுக்கு, கொசு விரட்டி ஸ்டிக்கரை தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறேன்.பி.டெக்., படித்த நான், எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்வதால், அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் வருவேன். ஒரு முறை ஹாங்காங் சென்றபோது, அங்கே ஒரு கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளி கள், கையில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தனர்.அதுகுறித்து கேட்ட தற்கு, 'இது கொசு விரட்டி ஸ்டிக்கர்'என்றனர். 'இங்கு தான் அவ்வளவு கொசு இருக்காதே... ஏன் இதை ஒட்டியிருக்கிறீர்கள்?' என்றதற்கு, 'இருக்கிற கொஞ்ச கொசு கூட, கடிக்கக் கூடாதுன்னு கம்பெனி தந்திருக்கிறது' என்றனர். அந்த ஸ்டிக்கரில், 'லெமன் கிராஸ் ஆயில், சிட்ரோநெல்லா ஆயில்' கலந்திருந்ததும், அவை இந்தியாவிலிருந்து தான் கொண்டு செல்கின்றனர் என்பதும் தெரிந்தது. இயற்கையான இந்த பொருட்கள், மனித உடலுக்குத் தீங்கு செய்வதில்லை என்பதுடன், தயாரிப்பு செலவும் குறைவு. நல்ல நிலையில இருப்போருக்கு, கொசு கடித்தால் தெரியும். ஆனால், தொழு நோய் பாதித்தோருக்கு ஏற்கனவே புண் இருக்கும். கொசு கடித்தாலும் அவ்வளவு தெரியாது; இந்த ஸ்டிக்கரை, புண் உள்ள இடத்தின் அருகிலேயே ஒட்டலாம்; அலர்ஜி ஏற்படாது.இதை உடலில் ஒட்டிக் கொண்டால், நம்மைச் சுற்றி ஒரு, 'லேயரை' உருவாக்கும். ஸ்டிக்கரை வேறு வேறு அளவுகளில் தருகிறோம். அதில் வாசனை இருக்கும் வரை, 2 - 3 நாளுக்கு பயன்படுத்தலாம். இதையே மருந்தாக்கி, 'ஸ்ப்ரே'வும்தருகிறோம்.பரனூர் தொழு நோய் காப்பகத்துக்கும், ஆதம்பாக்கத்தில் உள்ள, 'உதவும் உள்ளங்கள்' இல்லத்துக்கும், ஸ்டிக்கர்களை இலவசமாக வழங்கி வருகிறோம். இதற்காக, நான், என் அண்ணன், அக்காவின் வருமானத்தில், 5 சதவீத தொகையை ஒதுக்குகிறோம். தமிழகம் முழுக்க நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இதை கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே, வழங்கப்பட்டவர்களுக்கு ஸ்டிக்கர் தீர்ந்து விட்டாலும், மற்ற பகுதி யில் தொழுநோய் பாதித்தோர் கேட்டா லும் அனுப்பி வைப் போம். இந்த ஸ்டிக்கரை சேவை மனப்பான்மையோடு இலவசமாக செய்து தர முன்வருவோருக்கு, இதன் செய்முறையைக் கற்றுத் தருவோம்.

Post a Comment

0 Comments