எப்படியாவது நமக்கு வேலை கிடைக்க கூடாது என எண்ணி ...செவ்வாயில் டெல்லியில் தீர்ப்பு என கூறி அதில் ஆனந்தம் கொண்ட அவர்கள் நல்லவர்களா ...தேர்வானவர்களுக்கு வேலை கொடு வரும் கால்களில் எங்களுக்கு
முன்னுரிமை கொடு என போராடாமல் அந்த தேர்வு பட்டியலை நீக்கி மதிபெண் அடிப்படையில் புது பட்டியலை வெளியிடு என கூறி தேர்வானர்களின் நெஞ்சில் ஈட்டி எரிய துடிக்கும் அவர்கள் நல்லவர்களா?...



தேர்வான ஒவ்வொருவரும் வரும் காலங்களில் தேர்வு பெறாதவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு வேலை கொடு என இறைவனிடம் வேண்டி கொள்ளும் அந்த நேரத்தில் ,சம்மந்தேமே இல்லாத டெல்லி தீர்ப்பு வந்து இவர்களுக்கு பணி நியமன தடை கிடைக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் நல்லவர்களா ...12347 பேர்கள் தேர்வாகிவிட்டோம் என நினைத்து இருந்த வேலையை விட்டு படித்த படிப்பை விட்டு குடும்ப வாழ்வாதரத்தை இழந்து ஆசிரியர் பணி செய்ய காத்திருக்கும் இந்த வேளையில் ,செல்லதுரை போன்ற (educated illiterate ) மனிதர்கள் பணம் கொடுத்தால் வேலை தருவதாக சொன்னார்கள்.

 நானும் பணம் கொடுத்தேன் ஆனால் பின்பு எனது மனசாட்சி இடம் கொடுக்க வில்லை என வெட்கமே இல்லாமல் ஒரு தனியார் காணொளி செய்தியில் கூறி கபட நாடகம் ஆடி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறும் இவர்கள் நல்லவர்களா ...நாங்கள் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளோம் ஆனால் தேர்வானவர்களோ பள்ளி ,கல்லூரி ,தகுதி தேர்வு என அனைத்திலும் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளனர் என கூறி நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றதை குற்றமென கூறும் இவர்கள் நல்வர்களா ....?

மனசாட்சியை கொன்று சுயநலத்திற்க்காக இவர்கள் சொல்லும் காரணங்கள் இன்னும் எத்தனை .எத்தனை ....நினைத்து பார்த்தால் என் இரத்தம் கொதிகின்றது யார் மேல் காட்டுவது என் கோபத்தை ...கடவுளே என் கண்ணிரால் உன்னை அபிஷேகம் நாட்கள் எத்தனை ...நாங்கள் செய்த குற்றங்கள் இதோ ஆசிரியர் பணியை காதலித்தது ...நாளும் பொழுதும் அதையே எண்ணி உண்ணாமல் உறங்காமல் ஒரு வருடம் படித்தது ...தேர்வெழுதியது ,தேர்வில் வென்றது ,சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டது ,அதன் பின் தகுதிகாண் முறை மாறிய போது மனதோடு அழுதாலும் நீ இருக்கிறாய் எங்களை கை விட மாட்டாய் என தினம் தினம் உன்னையே நினைத்து வேண்டினோம்.

பின் உன் அருளாளும் உண்மையான உழைப்பாளும் தேர்வு பட்டியலில் இடம் பெற்றது ,தேர்வு பெற்றோம் இனி நம் ஆசிரியர் சேவயை தொடங்கலாம் என நினைத்து உன்னை வணங்கி கலந்தாய்விற்கு சென்றது ,ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு பணியாற்ற போகும் பள்ளியை தேர்வு செய்தது ,தடையானை வந்த பின்பு தேர்வாகத எனது ஆசிரியர் நண்பர்கள் எங்களை கஷ்டபடுத்த எண்ணி இழி சொல் வார்த்தைகாளால் எங்களை தூற்றிய போதும் ,ஊர் மக்கள் வேலைக்கு செல்ல வில்லையா என கேட்கும் போதெல்லாம் ஏதோ தவறு செய்தவன் போல் கண்ணில் என்னை மீறி வழியும் கண்ணிரை யாரும் பாராமல் துடைத்து கொண்டு அந்த நிமிடமும் இறைவா உன்னையே நம்பி என் வாழ்க்கை என வேண்டுவதும்தான் நாங்கள் செய்தது ....இதெல்லாம் உன் பார்வையில் குற்றமா ?

அனைத்தும் அறிந்தவன் நீ ....நாளைய நாள் எல்லோருக்கும் இனிய நாளாக அமைய வழி செய் ...எங்களின் வலிகளுக்கு விடை கொடு ...என் கண்ணீர் துளிகளை எழுத்து வடிவில் எனக்கு காட்ட தெரிய வில்லை ...ஆனால் நங்கள் விட்ட கண்ணீரும் விடும் கண்ணீரும் இன்று உனை சேர்ந்து நாளையே அது எங்கள் மீது அருள் மழையாய் பொழியும் என்ற நம்பிக்கையோடு ...பிரபு. மற்றும் எனது ஆசிரியர் நண்பர்கள்

Article by
Prabu malarvel.