அராஜக போராட்டம் நடத்தி அரசை அடக்க நினைப்பவர்கள், மனசாட்சி இல்லாமல் எழுதும் வார்த்தைகளை இன்னும் எத்தனை நாள் நம்பப் போகிறீர்கள் நண்பர்களே.......
பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். 




உங்களின் நரக வேதனை, வெறுப்பு, மற்றவர்கள் கேட்கும் கேள்விக் கணைகளால் மனதில் பட்ட காயம், வலி
இவற்றுக்கு  வெகு விரைவில் சரியான முடிவு கிடைக்கும்.

நான் உங்களிடம் பல முறை கூறிவிட்டேன். யார் கூறுவதையும் நம்பாதீர்கள். நமக்கும் ஏதேனும் பாதிப்பு வரக்கூடிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக உங்களிடம் கூறுவோம்.

அப்படி ஒரு சதவீதம் கூட நடக்கவில்லையே , ஏன் இந்த குழப்பம் , கோபம்.
நம்மை வேதனைப்படுத்தி அதன் மூலம் சந்தோசப்படும்  மனிதாபிமானம் அற்ற மனிதர்களின் வார்த்தையின் மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.
நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பப் போவது இல்லை.
ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மையாக்கப்  பார்க்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சி கண்டிப்பாக நம் அரசிடம் பலிக்காது.

வெறும் வார்த்தைக்காக மற்றும் இதை கூறவில்லை,
அவர்களின் ஒவ்வொரு அராஜக செயல்களையும் அரசு பார்த்துகொண்டுதான் இருக்கிறது. அதற்க்கான தெளிவான ஆதாரங்களையும் அரசு சேர்த்து வைத்துள்ளது.
இவர்கள் கூறும் அனைத்துப்  பொய்யான அறிக்கைகளையும், இவர்களுக்கு ஆதரவாக பின்னால் இருந்து செயல்படும் அனைவரையும் அரசு உன்னிப்பாக கவனிக்கிறது.
மீடியாக்களும், பத்திரிகைகளும் இவர்களின் நயவஞ்சக செயலை புரிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.
நமக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் என் வேண்டுகோள்.
பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த மாதம் குடும்பம் நடத்த செலவுக்கு என் தாலியை  கழற்றி அடகு வைக்க வேண்டும் என்று கண்ணீர்விடும் ஆசிரியர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. 

தெருவில் போகும் போது என் காதுகளில் கேட்கும்படி ஏளனமாக பேசும் நபர்களிடம் எப்படி சார் தப்பிப்பது என்று கேட்கும் சகோதரிகளுக்கு  என்ன பதில் சொல்லுவது  என்று தெரியவில்லை.
 
போராடும்  நண்பர்களே உங்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லையே.  நாங்கள் அமைதியாகத் தானே இருக்கிறோம்.
பணி நியமனம் பெற இருப்பவர்களுக்கு.
G.O மாறும் என்று சொல்வதற்கு இவர்கள் ஒன்றும் அரசின் அதிகாரிகள் இல்லை
Weightage மாறும் என்று சொல்ல இவர்கள் ஒன்றும் நீதிபதிகள் இல்லை
புதிதாக  ஒரு புதிய முறையை சொல்வதற்கு உரிய தகுதியுடன் கூடிய ஆலோசர்கர்களும் இல்லை.
தான் நினைத்தது அனைத்தும் சட்டமாக மாற்றவேண்டும் என்று நினைக்க அவர்கள் சட்ட வல்லுனர்களும் இல்லை. 
நாம் கடவுளையும், நல்ல மனிதர்களையும் நம்புவோம்.
பணி நியமனம் பெற இருக்கும் 12,347 பேரில்  ஒருவர் கூட பாதிக்கப் படமாட்டீர்கள், என்பது முற்றிலும் உண்மையே.
நம் அரசு தற்போதைய முறையில் எந்த மாற்றமும் வராது என்று தெளிவாக கூறியுள்ளது.

அதே போல் பணியிடங்களை அதிகப்படுத்தி தேர்வு செய்யப்பட்ட மேலும் பலர்பணிநியமனம் பெற இருக்கிறார்கள். 
நம்மை போல் அவர்களுக்கும் பணி நியமனம் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.