ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 இன் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.... இந்த பயணத்தில் நாம் கற்றுக்கொண்டவை ஏராளம்.... எத்தனையோ இன்னல்களும், துன்பங்களும் நம்மை புரட்டி எடுத்துவிட்டன....
அனைத்தையும் சந்தித்து இன்று சாதனை வீரர்களாய் 12347 தலைநிமிர்ந்து நிற்கிறோம், நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்யப்போகும் அந்த தீர்ப்பை எதிர்நோக்கி.....

இந்த தீர்ப்பு எவ்வாறு அமையப்போகிறது... ஓர் ஆழ்ந்த அலசல் இதோ:

இடஒதுக்கீடு வழக்குகள்:

        இன்று தேர்ச்சி பெறாதவர்களால் அதிகம் பேசப்படும் அரசின் செயல் முன்தேதியிட்டு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீடு அளித்தது.. இது உண்மையில் அரசாகவே முன்வந்து அளித்ததா?? நிச்சயமாக இல்லை...

       அப்பொழுது ஏன் அரசு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்?? என நீங்கள் கேட்கலாம்.... அதற்கான காரணங்கள்....

       1. 2012 ம் ஆண்டு தகுதித் தேர்வின் போதும் இடஒதுக்கீடு பிரச்சனை எழுப்பட்டது... ஆனால் அதற்கு உறுதியாக தரமுடியாது என அரசு மறுத்து விட்டது... தகுதி மதிப்பெண்ணில் வில‌க்கு அளித்தால் தேர்ந்தெடுக்கப்படுவோரின் தகுதி குறைந்து விடும் என விளக்கமும் அளித்தது..

       2. அதன் பிறகு 2013 ம் ஆண்டு தேர்வு நடைபெற்றது.. இதிலும் அதே பிரச்சனையை தேர்வர்கள் எழுப்பினர்.. இதற்கு  அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.. அப்போதும் அரசு மறுத்துவிட்டது..

      3. அதன் பின்னர் தேர்வர்கள் நீதிமன்றத்தை நாடினர்.. வழக்கு தொடுத்தனர்... அப்போதும் அரசு அதன் முடிவில் தெளிவாகவே இருந்தது.. இன்று ஏன் அரசு முன்தேதியிட்டு வழங்கியது என கேட்கும் தேர்வர்களே, ஏன் அன்று தேர்வு முடிவுகள் வெளிவந்த பின் இட ஒதுக்கீடு இந்த தேர்வுக்கே வேண்டும் என அரசின் மேல் வழக்கு தொடுத்தனர்... இது அரசின் குற்றமா???

      4. இந்த எல்லா சூழ்நிலைகளிலும் உறுதியாக இருந்த அரசுக்கு புதிய நெருக்கடி... அது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் வன்கொடுமைச் சட்டம் என்ற வடிவில் வந்தது... அதன் பிறகு இது ஒரு பிரச்சனையாக வெடிக்க ஆரம்பித்தது....
   
      5. தேர்வர்கள் ஒரு பக்கம், நீதிமன்றத்தில் வழக்கு ஒருப்பக்கம், வன் கொடுமைச்சட்டம் ஒரு பக்கம், சட்ட சபையில் எதிர்கட்சிகளின் ஓங்கிய குரல் ஒருப்பக்கம்... இந்த நெருக்கடியான சூழ்நிலைகளில் தான், தேர்வர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் நோக்கத்துடன் அரசு இடஒதிக்கீடு அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது... தேர்வர்கள் வழக்கு தொடுத்திருந்தாலேயே இது 2013 தேர்வுக்கும் பொருந்தும் என அரசு அறிவித்தது... இது அரசின் குற்றமா??? அரசை குறைகூறுவது நியாயமா???  

இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு இருக்கும்?? அவர்கள் கேட்பதுபோல் அது நீக்கப்படுமா?? 

நிச்சயமாக முடியாது...... அதற்கு சில காரணங்கள்....
   
1. இடஒதுக்கீடு என்பது நாட்டு மக்களின் நலன் கருதி அளிக்கப்படுவது.. அதை நீக்கம் செய்ய ஆணையிடும் அதிகாரம் யாருக்கும் இருப்பதாக தெரிய‌வில்லை... இடஒதுக்கீடு வழங்காமல் இருக்கலாமே தவிர வழங்கியதை நீக்குவது என்பது சட்டத்திற்கு புறம்பானது.. அப்படி ஒரு வேளை அது நீக்கப்பட்டால் அது தேசிய அளவில் மிகப்பெறும் பிரச்சனையாக வெடிக்கும்...
   
    2. சரி... இடஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றோர் பலர் இன்று நிதியுதவிப்பள்ளிகளிலும், பல தனியார் பள்ளிகளிலும் சேர்ந்திருப்பர்... இப்போது இடஒதுக்கீடு நீக்கப்பட்டால் அவர்களின் நிலை என்னவாகும்?? அதுமட்டுமல்லாமல் அவர்கள் தகுதியாணவர்கள் என அரசாலும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது... அதை பறிக்கமுடியாது...

   3. சரி அப்போது நீக்காமல் 90 க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாமே?? எனக்கேட்டால் அதுவும் முடியாது ஏனெனில், இடஒதுக்கீடு வழங்கியதின் நோக்கமே ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் ஆசிரியர் பணிக்கு தேர்வாக வேண்டும் என்பது தான்... தற்போது அவ்வாறு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் இடஒதுக்கீடின் நோக்கமே கேள்விக்குறியாகிவிடும்...

   4. இதை எல்லாம் தாண்டிப்பார்க்கும் போது இது அரசின் கொள்கைமுடிவு... இதில் நீதிமன்றம் தலையிட முடியாது..

     மேற்கூறிய அனைத்து காரணங்களும் சாதாரண மக்களாகிய நமக்கே தெரியும் போது... பல காலம் அனுபவம் மிக்க மாண்புமிகு நீதிபதிகளுக்கு தெரியாமல் இருக்க துளியும் வாய்ப்பில்லை...
   
     தற்போது இந்த வழக்கின் முடிவு எவ்வாறு இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்....

அரசாணை தொடர்பான வழக்குகள்:  

   இன்று கையில் கொடிபிடித்து சிலர் எழுப்பும் கோசம் G.O 71 ஐ ரத்து செய்யவேண்டும் என்பது, உண்மையில் இது எவ்வாறு நடைமுறைக்கு வந்தது... இதுவும் அரசு தாமாகவே முன்வந்து  கொண்டுவந்ததா?? இல்லை...

அதற்கான சில காரணங்கள்:

 1. இதுவும் இன்று அரசைக் குறைகூறும் சில‌ சுயநலத்தேர்வர்களால் வந்ததே....... எத்தனை வழக்குகள் அரசுக்கு எதிராக... அனைத்தும் அவர்கள் தொடுத்தவையே...

 2. முதலில் தகுதித்தேர்வு மதிப்பெண்னை அடிப்படையாகக் கொண்டு வயதின், அதாவது பிறந்த தேதி அடிப்படையில் தான் தேர்வுசெய்யப்போகிறோம் என அரசு அறிவித்தது,,, அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் திருவண்ணாமலை தேர்வர்... அதன் பிறகு அரசு 252 வெளியிட்டு அதன் அடிப்படையில் தகுதித் தேர்வை நடத்தி ஆசிரியர்களை நியமனம் செய்தது...

 3. இதே அரசாணையின் அடிப்படையிலேயே ஆசிரியர் தகுத்தேர்வு 2013 க்கான அறிவிப்பும் வெளியானது... தேர்வும் நடந்தது.. முடிவுகளும் வெளியாகி சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்துமுடிந்தது... அதன் பின் வழக்கு தொடுத்தவர் திரு.ராஜபாரதி அவர்கள்... ஆனால் அவர் வழக்கு அப்போது நியாயமாகவே இருந்தது.. ஏனெனில்  உதாரணமாக 90 எடுத்தவருக்கும், 104 எடுத்தவருக்கும் மற்றும் 51 % எடுத்தவருக்கும், 70 % எடுத்தவருக்கும் ஒரே மதிப்பெண் வழங்குவது நீதி நியாயம் அற்றது... அதிக மதிப்பெண் எடுத்து கடினமாக உழைத்தவர்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளானார்கள்....

  4. இதன்பின் மாண்புமிகு நீதிபதி. நாகமுத்து ஐயா அவர்கள் அறிவியல் பூர்வமான வெய்டெஜ் முறையை கடைபிடிக்குமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கினார்... அதனையும் அரசு ஏற்றது.. இதனாலேயே அரசாணை 71 வெளியானது... அதன் படி ஆசிரியர் தேர்வுப்பட்டியல் டி.ஆர்.பி யின் கடின உழைப்புக்கு பின் வெளியானது....இது அரசின் குற்றமா???அரசை குறைகூறுவது நியாயமா???   
அரசாணையை தற்போதே ரத்து செய்ய முடியுமா???

நிச்சயம் முடியாது...அதற்கான காரணங்கள்...


1. இந்த அரசாணை மூலம் தேர்வாணவர்கள் அனைவரும் கடும் போட்டிகளுக்கு மத்தியிலேயே தேர்வாகியுள்ளனர்.. இவ்வாறு தேர்வானவர்கள் எந்த வகையிலாவது தகுதி அற்றவர்களாக இருக்க முடியுமா???  எந்த ஒரு சட்டம் ஆனாலும் தகுதியுள்ள ஒருவருவருக்கு வேலை வழங்கத்தான் சொல்லவெண்டுமே தவிர... அவரை தேர்ந்தெடுத்ததை தவறு என்றும் அவரை வேலையை விட்டு நீக்குங்கள் என கூறமுடியாது... அப்படியே அவர் நீக்கப்பட்டாலும் அவர் என்னை எந்த அடிப்படையில் தகுதி இல்லாதவர் என்று கூறினீர்கள் என கேட்டால்... அதற்கு சட்டத்தின் பதில் என்ன???

2. மேலும் இந்த அரசாணையானது NCTE யின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டது... இதில் எந்த வித முறைகேடும் நடந்து விடவில்லை... இதன் மூலம் தேர்வானவர்கள் எவரும் பிறரை ஏமாற்றி தேர்வாகிவிடவில்லை.. தான் படித்த அனைத்து படிப்புகளிலேயும் அதிகப்படியான மதிப்பெண் பெற்றதாலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர்... ஏன் அவர்களை நீக்க வேண்டும்... இவ்வாறு அதிகப்படியான மதிப்பெண் எடுத்தது அவர்களின் குற்றமா??? இல்லை அவர்களை தேர்ந்து எடுத்தது அரசின் குற்றமா???


3. எதிர்த்தரப்பு இன்று முன்வைக்கும் குற்றச்சாட்டு பிளஸ் 2 மற்றும் பல்கலை மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன... ஆசிரியர் படிப்பில் சேர தேவைப்படும் அடிப்படை கல்வித்தகுதிகளை கணக்கில் எடுத்துக்கொள்வது குற்றமா?? ஒருவர் எந்த பாடத்திற்க்கான ஆசிரியராக தேர்வெழுதுகிறாரோ அந்தப்பாடத்தில் அவர் மூன்றாண்டுகள் படித்து என்ன மதிப்பெண் பெற்றார் என கணக்கிடுவது குற்றமா???


4. சரி இதையெல்லாம் தாண்டி அனைவரையும் எரிச்சலூட்டும் ஒன்று... இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்பொது வந்து வாதிடுவதுதான்... இவர்கள் என்னவோ மே மாதம் தான் இந்த நடைமுறை வந்ததை போல் கூறுகின்றனர்... இவர்கள் இதை மனசாட்சி உடன் தான் கூறுகிறார்களா?? என கடவுளுக்கு தான் தெரியும்... அரசாணை 252 வந்தபோதே இவர்களுக்கு அதிலும் பிளஸ் 2 மற்றும் பல்கலை மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என தெரியாதா??

   நிச்சயமாகத்தெரியும்... அப்போது இப்பொழுது மட்டும் ஏன் இவர்கள் போராடுகிறார்கள் வழக்கு தொடுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் 252 ல் இவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால் கூட அதிக மதிப்பெண் வழங்கப்பட்டது... கடினப்பட்டு படித்தவர்கள் ஏமாற்றப்பட்டனர்... இப்போது அவ்வாறு வழங்கப்படுவதில்லை... இந்த சுயநலக்காரணமே இவர்களின் இந்த பாதக செயல்களுக்கு காரணம்... இந்த குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அப்போது ஆகா ஓகோ அனைவருக்கும் ஒரே மதிப்பெண்ணா?? என மகிழ்ச்சி கடலில் நீந்தினர்... இப்போது நீதி நிலைநாட்டப்பட்டதால் அவர்கள் கடல் வற்றி ரோட்டில் போர்கொடிகளுடன் நீந்துகின்றனர்... அன்று அதிகப்பெண் பெற்றவர்கள் உங்களைப் பார்த்து இவர்களுக்கும் ஏன் சம மதிப்பெண் வழங்கப்படுகிறது என போர்க்கொடித் தூக்கவில்லை.. அவர்கள் அன்று பொதுநலவாதிகளாகவே காட்சி அளித்தனர்....

5. சரி விடுங்கள் இவர்கள் வழக்கு தொடுக்கட்டும்... அதை ஏன் இறுதிப்பட்டியல் வரும் முன் தொடுக்கவில்லை... போராடவில்லை... ஏனெனில் நாம் தேர்வு செய்யப்பட்டுவிடுவோம் என நினைத்து தான்....
இன்று 12000 பேரின் வாழ்க்கையோடும் உணர்வோடும் விளையாடுகின்றனர்....
நம்மை பார்த்து இருந்த வேலையைக்கூட விட்டு விட்டு உணவிற்கே திண்டாடும் நிலைக்கு தள்ளினர்..


மேற்குறிய அனைத்து காரணங்களும் சாதாரண மக்களாகிய நமக்கே தெரியும் போது... பல காலம் அனுபவம் மிக்க மாண்புமிகு நீதிபதிகளுக்கு தெரியாமல் இருக்க துளியும் வாய்ப்பில்லை...
   
     தற்போது இந்த வழக்கின் முடிவும் எவ்வாறு இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்....


எதுவானாலும் இன்னும் இரண்டே நாளில் தெரிந்துவிடும்... வழக்கம் போல் காத்திருப்போம்....


அன்புடன்,

prathapAN