புலம் பெயர்தல்

அன்று தொட்டு இன்று வரை புலம் பெயர்தல் என்பது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. புலம் என்பதற்கு இடம் எனப் பொருள் கொண்டு இடம் பெயர்தல் என்று இதனைக் குறிப்பிடலாம். இடம் பெயர்தல் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நடந்து வரக்கூடிய ஒன்றாகும்.
நாகரிகமற்ற காலத்தில் மனிதன் நாடோடியாக ஒவ்வொரு இடமாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தான்.

புலம்பெயர்தலும் இயற்கையும்

மனிதன் தனது தொடக்கக் காலத்தில் இருந்தே கூட்டம் கூட்டமாகப் புலம் பெயர்ந்து வாழ்தலைக் கடைப்பிடித்து வந்தான். பறவைகள், விலங்குகள் போன்றவை உணவிற்காகவும், நீருக்காகவும், வாழிடங்களுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இயற்கையாக இடம் பெயர்தல் உண்டு. இயற்கையே இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனலாம். வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கலுக்குப் பறந்து வந்து இங்கு தங்கி தனது இனத்தை விருத்தி செய்து கொண்டு மீண்டும் அது முடிந்தவுடன் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்கின்றன.புலம்பெயரக் கூடியவை பெரும்பாலும் மீண்டும் தங்களது பூர்வீக இருப்பிடத்திற்குத் திரும்புவதுண்டு.

புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும்

என்று வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்து புகாரில் வாழ்ந்தவர்களைப் பற்றி பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது.

 சரியாக 9 மணி நேரம் பயணம் செய்து நாங்கள் தேர்வு செய்த பள்ளி   அமைந்துள்ள பகுதியை அடைந்தோம்..எங்கள் செல்ல மகளுக்கு அது ஒரு சந்தோச உணர்வையே தந்தது. ஆனால் ஒரு அகதியைப்போன்ற உணர்வுதான் எங்களுக்குள் இருந்தது. புதிய மனிதர்கள்

புதிய பேச்சுவழக்கு 

ஈரப்பதம் இல்லாத காற்று

இருபது வீடுகள்

ஒரு டீக்கடையேனும் இல்லாத கிராமம் அது.

 எனது மனைவியின் கண்கள் பனித்ததை என்னால் உணர முடிந்தது.

வலியை வெளிக்காட்டாமல் ஆறுதல் அளித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அறிமுகம் செய்துவிட்டு பள்ளியை பார்த்தோம் பழைய ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் பள்ளி அது.

அரசாங்கவேலை சமுதாயத்தில் அந்தஸ்தையும் வருமானத்தையும் தந்தாலும் எங்களை புலம்பெயர்ந்த அகதிகளாக்கி விட்டது..


வேலை கிடைப்பதற்கு முன்பும்

கிடைத்த பின்பும்………….