ஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்
பலருக்கும் பிடித்தமான அசைவ உணவு பிராய்லர் சிக்கன். அது தீவனத்துக்குப் பதிலாக ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது.
இந்த சிக்கனை சாப்பிடுவதால் காய்ச்சலுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நாம் சாப்பிடும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் செயலிழந்து போகலாம் என்பதை அறிவியல், சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு செல்லும் சாலை வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.
இந்த வழியில் வரும் பங்கனப்பள்ளி, 1700-கள் வரை வைரச் சுரங்கங்களுக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரங்கள் நிஜாம் ஆண்ட ஹைதராபாத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன.
1800-களின் இறுதிவரை இங்கே வைரங்கள் வெட்டப்பட்டன. அதேபோலப் பங்கனப்பள்ளி மாம்பழங்களும் கனிகளில் உயர்ந்த இடத்தைப் பெற்றன.
ஆனால், சமீபகாலமாக வியாபாரிகளின் பேராசையால் பங்கனப்பள்ளி மாம்பழங்களின் புகழுக்குப் பங்கம் ஏற்பட்டது. வேகமாகப் பழுக்க வைப்பதற்காகக் கால்சியம் கார்பைடைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த கால்சியம் கார்பைடு, பழங்களைச் செயற்கையாகப் பழுக்கவைக்கும் வாயுவான எத்திலீனை வெளியிடும்.
இந்த கால்சியம் கார்பைடு, மனித ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பது. ஒருவழியாக அரசாங்கம் விழித்துக்கொண்டு கார்பைடு உபயோகம் குறித்து வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
என்ன வகைப் புரட்சி?
இப்போதெல்லாம், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு வரும் வழியில் வரிசைகட்டி நிற்கும் கோழிப் பண்ணைகளைப் பார்க்கமுடியும். இவை கிராம மக்கள் நடத்தும் கோழிப் பண்ணைகள் அல்ல. பெரிய தொழில் நிறுவனங்களால் நடத்தப்படும் சிக்கன் தொழிற்சாலைகள் இவை. இதைப் போன்ற பண்ணைகளின் வாயிலாகத்தான் கோழி, முட்டைப் புரட்சி இந்தியாவில் ஏற்பட்டது.
பசுமை, வெண்மைப் புரட்சிக்குச் சமமான மாற்றம் இது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் சத்துணவுத் திட்டத்தில் முட்டையை அறிமுகப்படுத்தியது, உணவுடன் ஊட்டச்சத்தை வழங்குவதற்கான பாராட்டத்தக்க யோசனை.
ஆனால், அதில் ஒரு ஆபத்தும் உள்ளது. மாம்பழத்தைப் பழுக்கவைக்க கார்பைடைப் பயன்படுத்துவதைப் போல, பாலை அதிகம் சுரக்கவைக்க ஆக்சிடோசின் ஹார்மோனை மாடுகளுக்குச் செலுத்துவதைப் போல, வர்த்தகரீதியாக உற்பத்தி செய்யப்படும் கோழிகளிலும் ஆரோக்கியக் குறைபாடுகள் நிறைய உள்ளன.
அதிர்ச்சி முடிவுகள்
கோழிகள் வேகமாக வளர்வதற்காகவும், முட்டை பொரிக்கும்போது தொற்று நோய்களைத் தடுப்பதற்காகவும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அவற்றின் உடலில் செலுத்தப்படுகின்றன. பிரபலமான சிக்கன் கம்பெனிகளான வெங்கிஸ், வெட்லைன் இந்தியா, ஸ்கைலாக் ஹேட்சரிஸ் ஆகியவை கோழிகளுக்குக் குறைந்த உணவைத் தந்து அதிக வளர்ச்சியைப் பெறுவதற்காக ஆன்ட்டிபயாட்டிக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன.
சுற்றுச்சூழல் அறிவியல் இதழான டவுன் டு எர்த், இந்தியாவின் வெவ்வேறு சந்தைகளில் விற்கப்படும் கோழி இறைச்சியைத் தனது பரிசோதனைக் கூடத்தில் பரிசோதித்து வெளியிட்டிருக்கும் முடிவுகள் அதிர்ச்சி தருபவை. கோழி ஈரல், தசைகள், சிறுநீரகங்களில் டெட்ராசைக்ளின் (டாக்சிசைக்ளின் போன்றவை), புளூரோகுயினலோன்ஸ், அமினோகிளைகோசைட்ஸ் ஆகியவை படிந்திருக்கின்றன.
ஏன் ஆபத்து?
இந்த மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் எந்த மருந்தாலும் எதிர்க்க முடியாத பாக்டீரியாக்கள் உருவாகும். இந்த பாக்டீரியாக்கள் உள்ள கோழிகளைச் சாப்பிடும் மனிதர்களுக்கும் இவை நேரடியாகக் கடத்தப்படும். வளர்சிதை மாற்றம் அடையாத பாக்டீரியாக்கள் இறைச்சியில் இருந்தால், வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களைத் தாக்கும். கோழிப் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக்குகள், மனிதப் பயன்பாட்டுக்கான வீரியத்தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பயன்படுத்தப்படாத பாகங்கள்
நாம் வாங்கும் கோழியில் பயன்படுத்தாமல் தூக்கி எறியும் பாகங்கள் என்ன ஆகின்றன? மேலே சொன்ன ஆபத்தான பாக்டீரியாக்கள் அவற்றின் சிறகுகள், எலும்புகளில் இருக்கும். அவை ்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக டவுன் டு எர்த் இதழில் டாக்டர் சந்திர பூஷன் சில பரிந்துரைகளைத் தந்துள்ளார்.
1. கோழிகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக்குகளைத் தடை செய்ய வேண்டும்.
2. கோழித் தீவனத்தில் ஆன்ட்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது. தொழிற் பாதுகாப்பு கழகத்தின் (பி.எஸ்.ஐ.) ஒழுங்கு விதிகளைக் கடுமையாக்க வேண்டும்.
3. மனிதப் பயன்பாட்டுக்கான ஆன்ட்டிபயாடிக்குகளைக் கோழிகளுக்குப் பயன்படுத்து வதைத் தடுக்க வேண்டும்.
4. ஆன்ட்டிபயாடிக்குகளைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை விலங்கு மருத்துவர் களுக்கு அளிக்க வேண்டும்.
5. கோழிப் பண்ணைகளி லிருந்து சுற்றுச்சூழலுக்குக் கடத்தப்படும் பாக்டீரியாக்கள், ஆன்ட்டிபயாடிக்குகளால் ஏற்படும் மாசுபாட்டின் அடிப்படையில், மாசுபாட்டு அளவீடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.
6. ஆன்ட்டிபயாடிக்குகளுக்கு மாற்றாகக் கோழிகளின் வளர்ச்சிக்கு உதவும் மூலிகை ஊட்டப்பொருட்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்.
7. மனிதர்கள், விலங்குகள், உணவு சங்கிலித் தொடரில் ஆன்ட்டிபயாடிக்குகளை எதிர்க்கும் மண்டலங்கள் உருவாகியுள்ளனவா என்பதைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அரசு விரைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில், நுண்ணுயிர்கள் வேகமாகத் திடீர் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியவை. ஒரு நிமிட நேரத்தில் பல தலைமுறை வளர்ச்சியை எட்டிவிடக்கூடியவை இந்த பாக்டீரியாக்கள். அதனால் புதிய புதிய எதிர்ப்புத்தன்மை கொண்ட பாக்டீரியாக்கள் வளர்ந்து பெரும் பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பு அதிகம்.
அச்சுறுத்தும் கோழிகள்
# இந்தியாவில் பிறந்து ஒரு மாதத்துக்குள் இரண்டு லட்சம் குழந்தைகள் இறந்து போகின்றன. இதில் மூன்றில் ஒரு குழந்தை ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தியால் (Antibiotic Resistance) இறக்கிறது.
# காசநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில் 15 சதவீதம் பேருக்கு ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி இருக்கிறது.
# இந்த ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்திக்கு நாம் சாப்பிடும் பிராய்லர் கோழிகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று டெல்லி சி.எஸ்.இ. அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
# பிராய்லர் கோழிகளுக்கு ஆண்டிபயாட்டிக் கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் அவை வேகமாகவும் கொழுகொழுவென்றும் வளர்கின்றன.
# ஆண்டிபயாட்டிக் கொடுக்கப்பட்ட கோழியைச் சாப்பிடுவதன் மூலம், நம் உடலிலும் ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி ஏற்படலாம். அந்த நிலையில் நமக்கு நோய் வந்து ஆண்டிபயாட்டிக் மருந்து உட்கொண்டால், உடல் குணாமாகாமல் போக நேரிடலாம்.
# ஏனென்றால், கோழியைச் சமைத்து சாப்பிட்டாலும்கூட, அதிலிருக்கும் ஆண்டிபயாட்டிக் முற்றிலும் அழிவதில்லை.
# அத்துடன், கோழியின் உடலில் இருக்கும் ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி பெற்ற பாக்டீரியா நமது உடலுக்குப் பரவக்கூடும்.
எங்க போறீங்க சிக்கன்சாப்பிடவா……
post by
Mr.சுருளி வேல்

81 Comments
நன்றி,
ReplyDeleteநல்ல தகவல்.
நான் மகான் அல்ல sir,
Deleteselectedcandidatestet2013@gmail.com என்ற முகவரி மூலம் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.நன்றி
நாட்டுக்கோழி சாப்பிடலாம்
Deleteநான் மகான் அல்ல சார்
திட்டிடாதிங்க
தமிழ்நாடு முதன்மைகள்:-
Delete1. பாரத ரத்னா விருது பெற்றவர்கள் -
2. முதல் பெண் நீதிபதி-
3. முதல் பெண் மருத்துவர்-
4. பெண் ஆளுநர்-
5. பெண் முதலமைச்சர்-
6. பெண் தலைமை செயலாளர்-
7. பெண் கமாண்டோ-
8. முதல் நாளிதழ்-
9. முதல் தமிழ் நாளிதழ்-
10. வானொலி நிலையம்-
11. முதல் இருப்பு பாதை-
12. வணிக வங்கி-
13. முதல் மாநகராட்சி-
14. முதல் ஊமைப்படம்-
15. முதல் பேசும் படம்-
DANGER DANGER
DeleteWEIGHTAGE LINK BASED ON GO71 IN TRB WEBSITE REMOVED
FRIENDS PLS CHECK
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteTHE WEIGHTAGE MARKS OF THE CANDIDATES WHICH WAS IN THE B.T.NOTIFICATION HAS BEEN REMOVED....BUT DONT FEEL ABOUT THAT....MAY BE TRB REMOVED THAT FOR THE REASON THE PROCESS HAVE COMPLETED.....
Deleteநன்றி சுருளி சார்,
Deleteகடந்த 5 வருடங்களாக broiler chicken ஐ உபயோகப்படுத்துவதை தவிர்த்து வருகின்றேன். அதற்கு மாற்றாக காய்கறிகளை பயன்படுத்துகிறேன்.
கோழி65 க்கு பதிலாக சேனைகிழங்கு65, கோழி டிக்கா மசாலா க்கு பதிலாக உருளைக்கிழங்கு டிக்கா மசாலா
1. டாக்டர். ராதாகிருஷ்ணன், சர்.சி.வி.ராமன், ராஜாஜி.
Delete2. பத்மினி ஜேசுதுரை
3. Dr. முத்துலட்சுமி
4. பாத்திமா பீவீ
5. ஜானகி ராமசந்திரன்
6. லட்சுமி பிரானேஷ்
7. காளியம்மாள்
8. மதராஷ் மெயில்(1873)
9. சுதேசமித்திரன்(1829)
10. சென்னை(1930)
11. ராயபுரம்-வாலாஜா(1856)
12. மதராஸ் வங்கி(1831)
13. சென்னை(29-9-1688)
14. கீசகவதம்(1916)
15. காளிதாஸ்(1931)
நன்றி teacher
Deletemy baby luvs chicken item and I used to give it to her very often. hereafter i wont give chicken to my child. THANK U ADMIN SIR!
ReplyDeleteThank you & welcome madam
Deleteஏன் சார் இந்த வேலை...
ReplyDeleteஇயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு... எந்த இரசாயன மருந்தும் செழுத்தப்படாத சுகாதாரமான சத்துள்ள ருசியான சிக்கன்..,
அனுகவும்
ராஜராஜன்
உரிமை..
பைரவ் நாட்டுக்கோழி பண்ணை
திருவாரூர்
Hariharan Sudan sir என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்
Deleteமதுரை பிரபாகர் சார் கூறினார்கள் நண்பா
DeleteOK OK sir
Deleteஉங்கள் மற்றும்
பிரபாகர் போன் நெம்பரை
Trbzero@gmail. Com அனுப்பும்
தேர்வு பெற்ற நண்பர்கள் கவனத்திற்கு nice message for you please visit tetsolai.blogspot.com
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete50%
DeleteThursday, September 18, 2014
ReplyDeleteதேர்வு பெற்ற நண்பர்கள் கவனத்திற்கு
Dear friends,
நீதிமன்ற தீர்ப்புக்கு 10 நாட்கள் இருக்கிறது என இருந்து விடாதீர்கள்.
TET-2013 சிறப்பே ஒவ்வரு காரியமும் நாம் எதிர் பார்க்காமல் இருக்கும் போது நடப்பதுதான்.
எனவே எப்பொழுது வேண்டுமானாலும் நீதிமன்ற தீர்ப்பு வரலாம்.
கலந்தாய்வுக்கு முன் TET ஐ மட்டும் நினைத்து கொண்டு இருந்தோம்.
ஆனால் இப்பொழுது NET ஏ கதி என இருக்கிறோம்.
ஓய்வு நேரத்தில் சிலவற்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.
1.தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.
2.PAN Card க்கு apply செய்யுங்கள்.
3.Service Record book வாங்குங்கள்.
4.Medical Certficate வாங்குங்கள்.
பின் உங்களுடைய பள்ளியின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தனியாக வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் உங்கள் மாவட்ட நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.
குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் நல்ல வீடாக பார்த்து கொள்ளுங்கள்.
குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் Ration Card ,
Gas cylinder போன்றவற்றை மாற்றும் வழி முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
நட்புடன் - ZUBAIR DGL
வெரி குட்
Deletetet தேர்வர்களின் super star,,உலக நாயகன்,தல,தளபதி, GO.71.
Deletewelcome.
நன்றி ஐயா
Deletesuruli vel sir,may i know your native place.
DeleteVISUVASAPURAM THENI DT
Deleteஹரி ஹரசுதன் சார்
Deleteநான் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளேன்
இந்த கணக்கு போதுமா
சொல்லுங்க சார்
Vaigai selippudan Valka Valamudan @ suruli vel sir.
Delete
Deleteவைர பாரதி,
இந்தியன் வங்கியும் தேசிய மயமாக்கப்பட்ட வாங்கிதான் sir.
online மூலம் pan card apply செய்யும் வழிமுறையை அல்லது தேவைப்பட்டால் selectedcandidates வலைதளமே apply செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறது
நன்றி
நன்றி சார்.
Deleteநான் Pancard வைத்துள்ளேன் சார்
நன்றி சார்
DeleteZubair dgl சார்
Deleteநான் என்றும் உங்களுக்கு நன்றி கடன்பட்டவனாக இருப்பேன்
Trbzero@gmail. Com
சூப்பர் சூப்பர்
ReplyDeleteஇந்த மாதிரி செய்தி போடுங்கப்பா...
யாருப்பா என் தகவலை சுட்டது.
Deleteநன்றி Harihara Sudhan sir.
Deleteஹரி ஹரசுதன் சார்
Deleteநான் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளேன்
இந்த கணக்கு போதுமா
சொல்லுங்க சார்
my account is in KVB. is that OK sir
Deleteஊன் உடலிற்கு கேடு என்பது நிச்சயமான உண்மை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇறந்தவர்களின் உடலை புதைக்க என் வயிறு ஒன்றும் சுடுகாடு அல்ல--- ஹிட்லர்............. ஊன் உண்டு ஊன் பெருக்காதே------ புத்தர்
ReplyDeleteKandipa counciling ponavangaluku job potu viduvangala,
ReplyDeleteபெண் பிள்ளைகள் சிறிய வயதில் பருவமடைவதற்கு பிராய்லர் சிக்கனே காரணம்
ReplyDeleteஆகவே நாட்டுக்கோழி சாப்பிடலாம்........
ஹரி ஹரசுதன் சார்
ReplyDeleteநான் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளேன்
இந்த கணக்கு போதுமா
சொல்லுங்க சார்
selected candidate18 September 2014 16:40
ReplyDeleteவைர பாரதி,
இந்தியன் வங்கியும் தேசிய மயமாக்கப்பட்ட வாங்கிதான் sir.
online மூலம் pan card apply செய்யும் வழிமுறையை அல்லது தேவைப்பட்டால் selectedcandidates வலைதளமே apply செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறது
நன்றி
PAN card apply செய்ய
Delete1.போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை
2.Address proof
3.Date of Birth proof
போன்றவற்றின் நகல் தேவை.ஆனால் ஓட்டுனர் அடையாளஅட்டையில்
இந்த மூன்றுமே உள்ளதால் driving license நகல் மட்டும் போதும்.
Pan card அவசியம் தேவை
ReplyDeleteயாரும் கவலைப்பட வேண்டாம் நண்பர்களே,
Deletepan card விண்ணப்பித்த 2 வாரங்களில் நமக்கு post மூலம் வந்து சேர்ந்துவிடும்.
PAN card apply செய்ய
Delete1.போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை
2.Address proof
3.Date of Birth proof
போன்றவாற்றின் நகல் தேவை.ஆனால் ஓட்டுனர் அடையாள அட்டையில்
இந்த மூன்றுமே உள்ளதால் driving license நகல் மட்டும் போதும்.
என்னாச்சு!!!
ReplyDeleteஎன்னாச்சு!!!
என்னாச்சு!!!
:'( :'( :'(
1409 ADTW vacancy
என்னாச்சு!!!
:'( :'( :'(
Madurai corporation vacancy
என்னாச்சு!!!
:'( :'( :'(
13777 BT vacancy kalvi manya korikai
என்னாச்சு!!!
:'( :'( :'(
3500 this acadamic year vacancy 2013 tet candidates ஐ கொண்டே நிரப்பப் படும் என்றார்களே
என்னாச்சு!!!
:'( :'( :'(
2013-14 vacancy
என்னாச்சு!!!
:'( :'( :'(
backlog vacancy
tamil483
eng1825
mat1299
phy1044
che810
bot563
zoo548
his3122
geo1001
என்னாச்சு!!!
:'( :'( :'(
vacancy அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ???
:-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-)
reply reply admin
friends
2013 tet candidate.
வங்கி கணக்கு துவங்குவதில அவசரம் வேண்டாம். அது ஒவ்வொரு பள்ளிகும் மாறுபடும்
ReplyDeletenamathu valaithalam near by 400000 visitors, congratulation ..................
ReplyDeleteMani sir enaku state bank indian bank la account yerkanave eruku.so na new account open pana vendam la?edaye use panikalama?
ReplyDeleteofcourse madam.
DeleteThank u sir
DeleteSir enaku sbi la ac iruku. Athu ok va
ReplyDeleteDANGER DANGER
ReplyDeleteWEIGHTAGE LINK BASED ON GO71 IN TRB WEBSITE REMOVED
FRIENDS PLS CHECK
HOW TO SAY THIS
Deletenothing friends
Deleteclick here To know the GO.71
Deleteமாமன்னர் புலிகேசி வழியை பின்பற்றுங்கள்
DeleteTRB GO 71 பற்றி
ReplyDeleteஎன்ன போடப்பட்டது
என்ன நீக்கப்பட்டது?
THE WEIGHTAGE MARKS OF THE CANDIDATES WHICH IS IN THE B.T.NOTIFICATION HAS BEEN REMOVED....BUT DONT FEEL ABOUT THAT....MAY BE TRB REMOVED THAT FOR THE REASON THE PROCESS HAVE COMPLETED.....
DeleteMani sir what is this anchor saying reply sir what is the danger
ReplyDeleteஇறுதிப்பட்டியலில் இடம்பெற்றவர்களின் பட்டியல் இருக்கிறதே madam.அதுதான் முக்கியம்.
Deleteபணி நியமனம் செய்யும் பணி கிட்டதட்ட நிறைவடைந்து விட்டதால் அந்த link remove செய்யப்பட்டிருக்கலாம்.
கவலை வேண்டாம் madam.
Thank sir for ur reply
Deleteகொரளி வித்தக்காரங்க நிறைய சுத்துறாங்க where is gounder ayya?
ReplyDeleteIm busy in kalviseithi
DeleteAnga konjam dappa thalayangala porratituu erunden
THE WEIGHTAGE MARKS OF THE CANDIDATES WHICH IN THE B.T.NOTIFICATION HAS BEEN REMOVED....BUT DONT FEEL ABOUT THAT....MAY BE TRB REMOVED THAT FOR THE REASON THE PROCESS HAVE COMPLETED.....
ReplyDeleteGo71 தேர்வானவர்களுக்கு மட்டும் தெரியும் வண்ணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteIt is unde the current. Recruitment side sir dont worry sir
ReplyDeleteIt should be...........but not there why?
DeleteService Unavailable........this message only come
DeleteANCHOR சார் எப்படி சார் இவ்வளவு WATCHING கா இருக்கிங்க ஒரு வேளை DATABASE ADMINISTRATOR ஆ வேலை பாதிங்களா???????
ReplyDeleteprathap AN சார்...selection list அப்படியேதான் இருக்கு...அதனால ரொம்பவும் யோசிக்க வேண்டாம்...நல்லதே நடக்கும்..
DeleteANCHOR IS NOT DANGER
DeleteWe have to be alert... prathab sir... otherwise without our knowledge in our land somebody will build home friend.....
ReplyDeleteஅடேய் ஆங்கர் பையா
ReplyDeleteஎன்டா டர்ராகுற
ஒழுங்கா கன்ன துறந்து பாறு
dear mani sir two days before alexender solomen sir kalviseithi ill our pm articel potu irrunthar. namudiya panaveekam pariyathu, enn namudiya link ill athai tamil ill potal niraiya per foriegn things thavirpargal. pls try sir this is my request. don't mistake me.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..