உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, 'டைம் செம பாஸ்டா ஓடிடுச்சு', 'நேரம் போகவே மாட்டேங்குது' என காலத்தைக் குறை சொல்கிறோம்.
ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்திற்கு எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள்? ஒன்பது மணிக்கு நடைபெறும் மீட்டிங்கிற்கு எத்தனை பேர் தாமதமின்றி வந்து சேர்கிறார்கள்? 'பத்து நிமிடம் லேட்டா போனா ஒண்ணும் ஆவாது' என்பதுதானே பலருடைய மனநிலை?
'மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்தது' என்கிறார் ஷேக்ஸ்பியர்.
நேரம் தவறாமையை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதற்கு இந்த ஒரு வரியே சாட்சி.
'பங்சுவாலிடி' என்பது ஏதோ அலுவலக வேலைக்கு மட்டுமானதல்ல. குடும்பத்திலும், சமூகத்திலும் தினம் தினம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயல் தான். சரியான நேரத்துக்கு ஒரு மாத்திரை சாப்பிடுவது கூட இதன் ஒரு பாகம்தான்.
நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு. நேரம் தவறாமல் இருக்கும் நபரை மற்றவர்கள் ரொம்பவே மதிப்பார்கள். தனது வாழ்க்கையை சரியாய் வாழத் தெரிந்தவரே நேரம் தவறாமையைக் கடைபிடிப்பார். அவர் நேர மேலாண்மையில் கில்லாடி என நிர்வாகம் அவரை கண்ணியத்துடன் கவனிக்கும்.
பிறரை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதன் முதல் அடையாளம் காலம் தவறாமை. ஒரு சந்திப்புக்காகவோ, வேலைக்காகவோ சரியான நேரத்தில் நீங்கள் ஆஜராகிறீர்களெனில் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவரையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பது அதன் வெளிப்படையான பொருள்.
உங்களுக்காக யாரும் காத்திருப்பதும் நல்லதல்ல, யாருடைய நேரத்தையும் நீங்கள் வீணடிப்பதும் நல்லதல்ல. காலம் தவறாமை சொல்லும் இன்னொரு விஷயம், 'நீங்கள் அந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்தது' என்று நினைக்கிறீர்கள் என்பதுதான்.
நேரம் தவறாமல் சரியான நேரத்தில் வரும் நபர் எப்போதுமே திறமைசாலியாகவும், தன்னம்பிக்கை உள்ளவராகவும் பரிமளிப்பார். அவருக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும்.
காலம் தவறாமை உங்களை நம்பிக்கைக்குரிய நபராய் அடையாளம் காட்டும். சொன்ன நேரத்தில் வருவது, சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பது, ஒப்புக் கொண்ட நேரத்தை மதிப்பது... இவையெல்லாம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
ஆகவே பணநியமன ஆணை கிடைத்தவுடன்
துளியளவும் தாமதிக்காமல் பணியில் சேர்ந்து விடுங்கள்………..வாழ்த்துக்கள்
ஆகவே பணநியமன ஆணை கிடைத்தவுடன் துளியளவும் தாமதிக்காமல் பணியில் சேர்ந்து விடுங்கள்………..வாழ்த்துக்கள்
29 Comments
என்னப்பா இன்னும்
ReplyDeleteபீதி தேவதை காணம் ...என்ன
பீதி கொடுக்கலானு யோசிக்குதோ
...கூடவே Red fire
அல்லகை ஒன்று வருமே
நல்ல நேரத்து நாலு நல்லவங்க பேசற இடத்து அந்த ஈப் பிறவியை ஏன் சார் நினைக்கிறீங்க.
Deleteஅது எங்க எச்சி பொறுக்குதோ...
தடை தனியே அப்பலே பண்ணணுமா.
Deleteஎன்னப்பா இன்னும்
ReplyDeleteபீதி தேவதை காணம் ...என்ன
பீதி கொடுக்கலானு யோசிக்குதோ
...கூடவே Red fire
அல்லகை ஒன்று வருமே
மெத்தப் படித்ததெனும் மேதாவித் தனத்தோடு
Deleteமிடுக்காய் திரியுதொரு பூதம் -அதன்
சத்தம் தனைக்கேட்டு சஞ்சலங்கள் கொள்ளாதே
சாத்தான் ஓதுகின்ற வேதம்
கத்தும் குயிலுக்கே கற்பித்தக் குருவென்று
காதில் அதுவந்து ஓதும் -அதன்
வித்தம் தனைப்பார்த்து வியந்தேநீ போகாதே
விரைந்து உனைக்கௌவும் சூதும்
- from net
This comment has been removed by the author.
Deleteகலக்குறடா தம்பி
Deletefirst a comment panrathu romba kastam pola
ReplyDeletenalaiku judgement varuma???
ReplyDeleteமங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைய 2 நாட்கள் ----தினமலர் செய்தி தேர்ச்சிபெற்றவர்கள் பணியில் சேர 2 நாட்கள்---கல்விசெய்தி..................இரண்டுமே நீண்ட நெடிய நாட்கள்.......வெற்றி இரண்டிமே உறுதி... உறுதி.......உறுதி...........
ReplyDeleteநாளைக்கு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் ஏனெனில் 1. நீதிமன்ற தீர்ப்பு வருகிறது. 2.முன்னர் போரட்டத்தின் போது திடிரென விசம் அருத்தினார்கள் அதுபோல தீர்ப்பு வரும் நேரத்தில் அனுமதி கொடுக்கமாட்டார்கள் 3. கலைஞர் TV யில் மாலை 6.00 மணி தலைப்பு செய்தியில் ...............நாடகம் போராட்ட குழு நடத்தியது பொது மக்களுக்கும் மற்ற சமுக அமைப்புக்கும் மிகுத்த எதிர்ப்பு வலுத்துவருகிறது. 4.பணி நியமன தடை உத்திரவு அமுலில் உள்ளபோது போராட்ட குழுவுக்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் . 5.முன்னர் 26 நபர் மட்டும் உள்ள குழுக்கு இப்போதை பலம் குறைந்து விட்டது.
ReplyDeleteபுளியன்குடிக்கு விரிவாக்கம் தெரியுமா?
ReplyDeleteபுரளி கிளப்பி என் குடியை அழித்தல் அதுவே நாளடைவில் புளியன்குடி ஆனது..
(: (: (:
Deletedear friends, nalaiku judgement conform a???
ReplyDeleteஅதான் சார் தெரியல மதுர ஸ்டே இப்படி தான் சொன்னாங்க..
Deleteநாளைக்க மதியம் வரைக்கும் இந்த கருப்புரோசா கைய காலக் கட்டி போடுங்கப்பா
Deletethank u for ur reply sir
DeleteIf judgement is relesed tommorrow means all the medias would have been announced today.But there is no such news..so whether judjement is relesed or not?
DeleteCheck this link Brother. Tomorrow it is confirm
Deletehttp://causelists.nic.in/temp/27206.html
ஆசிரியர் தகுதித் தேர்வில் லட்சக்கணகில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேவை வாங்கித் தருவதாகக் கூறியிருந்த இடைத்தரகர்கள், அந்த பணத்தை அந்தந்த ஆசிரியர்களிடமே திரும்ப ஒப்படைத்து வருவதாக தகவல்
ReplyDeleteவெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் குறைந்த மதிப்பெண் பெற்ற பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகச் குற்றசாட்டு வெளியானது.
மேலும் பணி நியமன உத்தரவு பெற்றுத்தருவதாகக் கூறி பலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருகின்றனர் என்று ஆசிரியர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது,
சேலத்தைச் சேர்ந்த ஒருவரும், கோவையில் உள்ள ஒருவரும் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னையில் காவல் துறை, மாவட்ட ஆட்சியரகம், லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றில் கடந்த 15 ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து அன்றைய தினமே தி இந்து வில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து இணையதளங்கள்(tnteachernews.com gurugulam.com)மற்றும் நாளிதழ்களில் இந்த செய்தி வெளியானது. இந் நிலையில் கடந்த 17ம் தேதி முதல் ஆசிரியக்ளிடம் இருந்து பெற்ற பணத்தை இடைத்தரகர்கள் திருப்பி ஒப்படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணத்தை கொடுத்துவிட்டு தங்களது தவல்களை வெளியே கூறக்கூடாது. எங்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லை என இடைத்தரகர்கள் எழுதி வாங்கிச் செல்கின்றனர்.
இது .குறித்து ஈரோட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது
தகுதி தேர்வில் நான் பெற்ற மதிப்பெண் 91, எனது மதிப்பெண் மிகக் குறைவாகவே இருந்தது. மார்ச் முதல் வாரம் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ 10 இலட்சம் பெற்றனர். ஆனால், செப் 17ல் எனது முழு பணத்தையும் திருப்பித் தந்துவிட்டனர்,
இவ்வளவு நாள் வேலை கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தேன். பணத்தைக் கொடுக்கும் போது, எங்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமிலை என எழுதி கொடுக்க வற்புறுத்தினனர் என்றார்.
நாமக்கல் மாவட்டம் வாழப்பாடியில் ரூ 65 லட்சம் வரை இடைத்தரகர்கள் திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
இதற்கும் பதில் தேவை.கலைஞர் TV யில் மாலை 6.00 மணி தலைப்பு செய்தியில் ...............நாடகம் போராட்ட குழு நடத்தியது.......இதனால் பொது மக்களுக்கும் மற்ற சமுக அமைப்புக்கும் மிகுத்த எதிர்ப்பு வலுத்துவருகிறது.
Deleteபேர் கூட சொல்லாத அல்லக்கை முண்டமே உணக்கெப்படி இதல்லாம் எப்படி உணக்கு தெரியும்..பிடியுங்கள் இவனை...
Deleteஹிந்து வில் செய்தி வெளி வந்த நாள் : 15.09.2014
Deleteஇடைத்தரகர்கள் பணத்தை திருப்பிக் கொடுத்த தேதி : 17.09.2014
சேலத்தைச் சேர்ந்த ஒருவரும், கோவையில் உள்ள ஒருவரும் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னையில் காவல் துறை, மாவட்ட ஆட்சியரகம், லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றில் கடந்த 15 ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து அன்றைய தினமே தி இந்து வில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து இணையதளங்கள்(tnteachernews.com gurugulam.com)மற்றும் நாளிதழ்களில் இந்த செய்தி வெளியானது. இந் நிலையில் கடந்த 17ம் தேதி முதல் ஆசிரியக்ளிடம் இருந்து பெற்ற பணத்தை இடைத்தரகர்கள் திருப்பி ஒப்படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்தோஷ் அவர்களிடம் சில கேள்விகள் .
1) முதல் காசோலையில் உள்ள தேதி : 26.06.2014
2) இரண்டாவது காசோலையில் உள்ள தேதி : 12/3/2014
எங்களுக்கு தெரிந்தவரை காசோலையில் பெயர் மட்டும் தான் எழுதுவார்கள்?
இரண்டு காசோலையிலும் அப்பா பேர், ஊர் பெயர் உள்ளது ?
எனக்கு ஒரு டவுட்டு
இப்போது இருக்கும் வங்கி நடைமுறையில் தேதி குறிப்பிட 3 மாதம் மட்டும் தான் காசோலை செல்லும்.
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
ReplyDeleteSURULI VEL Sir , Please Check your Posted Link
ReplyDeletethank u sir
Deleteஇன்று முதல் சுரூளீ
Deleteசூப்பர் சுரூளீ
என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார். Best wishes for the awesome article.
best close your mouth mr black rose .this site is not related to you.
ReplyDeleteCool and I have a super proposal: How Much House Renovation home renovation designers near me
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..