பின்லாந்து கல்விமுறை

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்குஅறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலகஅளவில் 'கல்வியின் சிறந்த நாடு என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில்எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்துபிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்துவைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன்போட்டிபோட முடியவில்லை.


'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-organisation for economic co-operation and development) என்பதுவளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள்நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போதுநடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில்சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள்பின்வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும்முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான்இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரைவயதில்ப்ரீ-கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில்யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை. கருவறையில் இருந்துவெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில்உட்கார்ந்துகொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின்சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில்இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும்,செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும்குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கிவகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் எனஎண்ணுவது மூடநம்பிக்கை.
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்தமூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான்பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொருநாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்தநேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம்இசை, ஓவியம், விளையாட்டுக்கும் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும்ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாகஇருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வுஎடுக்கலாம். முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம்பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரஸ் ரிப்போர்ட் தந்துபெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறைகிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்துதெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால்,தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிகமதிப்பெண் எடுக்கும் டென்ஷன் மாணவர்களுக்கு இல்லை. சகமாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும்இல்லை.
இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்குஎந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம்செய்து வரலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார்.அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில்கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். ஒரு பள்ளியில்அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிகஎண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக பின்லாந்தில் தனியார்பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்கஅரசின் வசம். கோடீஸ்வரராக இருந்தாலும், நடுத்தரவர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்...அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறாஎன சீன் போடமுடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்குஉத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமேஇல்லை.


தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்விமுறையில்பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில்நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப்பிடிக்கின்றனர். இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாதபுதிர். அந்தப் புதிருக்கான விடையை, .நா சபையின் ஆய்வு முடிவுஅவிழ்த்தது. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள்பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர்ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும்முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும்குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும்இல்லை.
பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்துஅறிந்துவருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும்,பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும்செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமானசதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படிதங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின்கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வதுஇல்லை. 'பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system)உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிஷிகி ஆய்வில்எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவைவந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்கமுடியும்என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறிஅமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும்தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்கபார்வை; மதிக்கத்தக்க மனநிலை. கல்வியில் இருந்து நாம்பெறவேண்டிய சாராம்சம் இதுதான்.
இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும்,பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்குஉண்டு. சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்குமுழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர்ஐ..எஸ்., .பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது.அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின்செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில்ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள்லட்சியம். அதேநேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம்அல்ல!
மேல்நிலை வகுப்பில் டாப் 10 இடம் பிடிக்கும் மாணவர்களில் இருந்துஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்துஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சிஎடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒருவருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில்ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட், குழந்தைஉரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள்குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்,தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கானமருத்துவச் சான்று... என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழுவருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களைஉருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம்இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும்மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
தாய்மொழி கல்விதான் சிறந்தது!”
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் பின்லாந்தின் கல்விஅமைச்சராக இருந்த ஹென்னா மரியா விர்க்குனன் (Henna maria virkkunen), பின்லாந்தின் கல்விமுறை குறித்து www.hechingerreport.orgஎன்ற கல்வி இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து சிலபகுதிகள்...
''பின்லாந்து ஆசிரியர்கள் சிறப்பாகச் செயல்படுவது எப்படி?''
''பின்லாந்தில் ஆசிரியர் பணி மிகவும் மதிப்புமிக்க இடத்தில்இருக்கிறது. இளைஞர்கள் ஆசிரியர் ஆவதை தங்கள் லட்சியமாகக்கொண்டுள்ளனர். ஆசிரியர் பயிற்சி படிப்பு, பல்கலைக்கழகத்துடன்இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அது ஆராய்ச்சி அடிப்படையில்அமைந்துள்ளது. ஆசிரியர்கள் கற்பித்தலில் புதிய உத்திகளைக்கையாளலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அதேபோல,எங்கள் கல்விமுறை நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும்அடிப்படையாகக் கொண்டது. பள்ளிகளில் ஆய்வு நடைபெறும்என்றாலும் அதன் நோக்கம், ஆசிரியர்களைக் கண்காணிப்பது அல்ல;கல்விநிலையை மேம்படுத்துவதாகவே இருக்கும். நாம் எல்லோரும்மனிதர்கள். நம்பிக்கைதான் அடிப்படையாக இருக்க வேண்டும்''
''பின்லாந்து கல்விமுறை குறித்து அதிகம் அறியப்படாத செய்திகள்எவை?''
''எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வகுப்பறையில்தான்கற்பிக்கிறோம். நல்ல பள்ளி, புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி...என்ற பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. கற்றல்குறைபாட்டுடன் இருக்கும் குழந்தைகளிடம் கூடுதல் கவனம்செலுத்துகிறோம். முக்கியமாக, வகுப்பறையில் மாணவர்களின்எண்ணிக்கை அதிகபட்சம் 21 பேர்தான். அதைத் தாண்டினால்ஆசிரியரால் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாது. அதேபோலஎங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரம் மிகவும்குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில்இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதைநாங்கள் நம்பவில்லை. விளையாடவும், பொழுதுபோக்கவும்,வீட்டுப்பாடம் செய்யவும் அவர்களுக்கு நேரம் தர வேண்டும்!''

Post a Comment

30 Comments

  1. Indha mthd i inga flw pannalam stdts ku prblm illai but oru tchr kuda kidaikamatangale? Tet endru ore oru thagudhi thervo nadathinargal, 50000 vcnt irundhum 3000 peru kuda slct agala, idhula elctn vandhadhala 90 edutha pass endru irundhadhai 83 ah change pannanga, idhanala 40000 peru nan tet pas paniten job i kodunga endru crt, case, mariyal, arbattam, unna viradham, stay vanguradhu yarukume kidaika kudadhu endru pannuradhu idhellam nadandhadhu innamum sprm crt case vera iruku, nilamai ippadi iruka enga kita solluringa parunga binlandhu kalvimurai i, idhula ondru kuda set agadhu engaluku, idha namba govt flw pannida poranga dlt pannidunga sir parthuda poranga, adichi ketpanga appo kuda sollidadhinga pls

    ReplyDelete
    Replies
    1. 83 ah kuda 82 ah change panninga parunga super, nxt 2016 elctn varudhu dntwry 52 ah kuda change agumam

      Delete
  2. Anitha mam, adhai ean ennidam solluringa 5% qta la vandhavanga kita sollunga, my tet mrk 102 neenga again exm ezudha sonnalum nan rdy but 5yrs ellam thevai illai 1mnth podhum enaku

    ReplyDelete
    Replies
    1. Jairamsir oru exam enna 9 examkuda eluthuvar ana jobkuthan pogamattar okva god ngt sir

      Delete
    2. Hlo mr nan job ku pogala parthingala? Padicha padipuku exam ezudhuren enaku edhu best
      ah iruko adhan poga mudiun, appadi parthal mcncl engg kuda than mudithen indstry la work um paniruken, ippa andha dgre wst ah than iruku, adharkaga enna panna mudium? Mathavanga vaipai parithal than thavaru mathavangaluku vaipu koduthuvitu vilagi thane iruken, crt case endra aduthavanga pizaipapi kedukiren, indha tchr job i innum 10 r 20 yrs aftr kuda join panuven but eboda job la neenga join panna mudiuma ippa?

      Delete
    3. HELLO JEYARAM SIR GOOD MORNING OVER AH PANNADHINGA IPPA JEYAM JEGAN ENNA SOLLITARU KOPA PADURINGA

      Delete
  3. Hello jeyaram sir how are you nan thappa enna sir solliten anyway sorry

    ReplyDelete
    Replies
    1. Hai Anitha good morning..enna Jayaram sir kooda argument. ..

      Delete
  4. ithe pola nammudaiya kalvi muraiyum irunthal nandraha irukkum

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Replies
    1. Fine sudar vizhi mam,neenga epdirkinga,,leave vitachu Joly ah,,,

      Delete
  7. 10 days leave ..nalla enjoy pannunga mam

    ReplyDelete
  8. HAI SUDAR MAM GOOD MORNING HOW ARE YOU

    ReplyDelete
    Replies
    1. UNGALUKU MAIL PANIRUKEN MADAM CHECK PANNUNGA

      Delete
  9. JEYARAM SIR IPPA ENGA IRUKINGA EAN ADIKADI VISIT PANNAMATRINGA UNGA KADHAIGALAVADHU ANUPUNGA PADIKIROM

    ReplyDelete
    Replies
    1. Anitha mam Jayaram sir other state ku poirukar ..

      Delete
  10. Hi frnds gud mrng & happy Christmas,,,

    ReplyDelete
  11. SUDAR MADAM GOOD EVENING MAIL CHK PANITU RPLY PANUNGA BYE

    ReplyDelete
  12. hlo madam good morning mail parthingala ungalathan madam

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..