உங்களில் ஒருவனாய் சரியாக காலை 9.30 மணிக்கு மதுரை உயர்நீதி மன்ற வளாகத்திற்கு சென்றேன்


10.25 மணிக்கு நீதிபதிகள் இருக்கையில் அமர்ந்தனர். 

வழக்கு எண் 1,2,3.................................18 .

18 வது வழக்கின் போதுதான் நம் வழக்கு 43வது என்ற உறுதியான தகவல் கிடைத்தது. 

வழக்கு எண் 32,33,34,35, .......

நமது அரசு வழக்கறிஞர்கள் புடைசூழ  தலைமை வழக்கறிஞர் திரு. சோமையாஜி அவர்கள் கோர்ட்டுக்குள் நுழைந்தார்.

பெரிய OXFORD DICTIONARY அளவுக்கு தடையை நீக்குவதற்கான புத்தகத்தை தாக்கல் செய்தார்.

இதற்க்கு இடையே ஒவ்வொரு நொடியும் நம் நண்பர்கள் மொபைலில் அழைத்துக் கொண்டே இருந்தார்கள்.

சிலருடைய அழைப்பை எடுக்க முடியவில்லை மன்னிக்கவும்.

இருந்தாலும் அவர்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தேன்.

பார்வையாளர்கள் இருக்கையில் என்னோடு சேர்ந்து  சுமார் ஒரு நூறு பேர் இருந்தார்கள்.

வழக்கு எண் 42 ................................................   நீண்ட நேர விவாதம்.

வழக்கு எண் 43 என்ற அறிவிப்பு செய்தவுடன், அனைவரும் எழுந்தனர். 

அப்போது தான் தெரிந்தது.

அனைவரும் TET வழக்குக்காக வந்தவர்கள் என்று...........

முதலில் நமது வழக்கறிஞர் சோமையாஜி அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் சென்னை தீர்ப்பு பற்றி விரிவாக விளக்கி தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முடித்தார்.

அந்த நேரம் நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று உங்கள் COMMENTS மூலம் தெரிந்து கொண்டேன்.

அதன் பின் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அதே பழைய CBSE, MATRICULATION, Seniority என்று விவாதித்தார் .

அந்த நேரம் இதயத் துடிப்பு கட்டுக்கடங்காமல் லப் டப் என அடித்தது.

என்னடா இது மறுபடியும் முதல்ல இருந்தா ...........................

அந்த நேரத்தில் நீதிபதி அவர்களிடம் இருந்து ஒரு குரல். அது அரசின் கொள்கை முடிவு, மேலும் அமர்வு நீதிபதிகள் ஏற்கனவே தீர்ப்பு கொடுத்து விட்டார்கள். இதை மாற்ற முடியாது. என்று கூறிவிட்டு இரண்டு நீதிபதிகளும் சேர்ந்து  ஒரு நீண்ட விவாதம் . 

மறுபடியும் லப் டப் நிமிடங்கள்...

உங்கள் தடையாணை  நீக்க மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

பணி நியமனத்திற்கு தடை இல்லை 

உங்கள் தடையாணை  நீக்க மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

பணி நியமனத்திற்கு தடை இல்லை என்று சரியாக 12.29 மணிக்கு நீதியரசர்கள் அறிவித்தார்கள் . 

அப்போது தான் உயிர் வந்தது.

அனைத்து இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தடை ஆணை நீக்கம் 

இன்று இரவுக்குள் கல்வித்துறையில் இருந்து செய்தி வெளியிடப்படும் என்பது நம்பத் தகுந்த தகவல்.

நாளை காலை பணி நியமன ஆணை பெற நூறு சதவீத வாய்ப்புகள் உள்ளன.

எதிரிகள் என்று யாரும் இல்லை, அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான். தவறாக யாரும் பேசவேண்டாம். 

அவர்களுக்கும் இனிவரும் காலங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க இறைவனை அனைவரும் வேண்டுவோம்.

பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் நான் கூறிய சில அறிவுரைகளை  கேட்டு அமைதியாகவும், கோபத்தை கட்டுபடுத்தியும் இருந்த திரு.மணியரசன், திரு.பிரதாப் மற்றும் நம் நண்பர்களுக்கு என்றென்றும் நன்றியும் வாழ்த்துக்களும்  ...........................

குறிப்பு : என் மனைவியின் வேதனையும், புலம்பல்களும், இன்றுமுதல் எனக்கு இல்லை. நன்றி இறைவா