இன்றைய நாட்களில் ஊடகங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் அதில் வயதில் மூத்தவர்களுக்கு இம்முறை சாதகமானதாக இல்லை என்றும் இம்முறையால் அவர்கள் தேர்வாக முடியாது என்றும் சொல்கின்றார்கள். ஆனால் இம்முறையால் பல 30 வயதிற்கும் மேற்ப்பட்டவர்கள் தேர்வாகியுள்ளனர் # அதற்க்கான இணைப்பை கொடுத்துள்ளேன்


தேர்வுக்கு முயன்றவர்களில் வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் யார்? அதிகமான நபர்கள் இளையவர்களாக இருக்கும் போது எப்படி மூத்தவர்களை தேர்ந்தெடுக்க முடியும்

அது மட்டுமல்லாமல் ஆசிரியர் தேர்வு முறையில் மற்ற போட்டி தேர்வுகளைப்போல் (TNPSC,UPSC,BANK EXAM) வயது வரம்பு தடையாக இருப்பது இல்லை..அனைத்து வயதினரும் பங்கேற்கலாம் ..

அதுமட்டுமில்லாம வயது அதிகமான மூத்த ஆசிரியர்கள் வேலையில்லாமலே இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதா? அவர்கள் ஏற்க்கனவே தேர்வாகி இருப்பதால் அல்லது வேறு ஏதேனும் போட்டி (TNPSC,UPSC,BANK EXAM) தேர்வுகளில் வெற்றிபெற்று பணிகளில் இருப்பதால் அவர்களின் எண்ணிக்கை குறையுமல்லாவா? வேலை வேண்டி காத்திருப்பவர்களில் இளைஞர்கள் அதிகமிருப்பார்களா? இல்லை மூத்தவர்கள் அதிகமிருப்பார்களா? இதை ஏன் கருத்தில் கொள்வதில்லை

இப்போது வேலை வேண்டி இருப்பவர்களில் 25- 30 வயதினர்தான் அதிகமிருப்பர். குடும்ப நிலை , திருமணம் போன்ற எதிர்காலமே இதை தான் சார்ந்திருப்பதால் இவர்கள் அதிகம் தேர்வாவதில் தவறேதுமில்லையே... அப்படியிருக்கையில் 30 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் குறைவாக இருப்பதும் தவறில்லையே..

அதிக இளம்நபர்கள் SC , ST , SCA பிரிவில் ஏற்க்கனவே இருந்த பின்னடைவு காலி பணியிடங்களிலும் , தற்போதைய பணியிடங்களிலும் இடம் பெறுவார் அதற்க்கு கூட போதிய அளவு நபர்கள் இந்த பிரிவில் இல்லையாதலால் தேர்வு பெற்ற நபர்களில் இளையவர்கள் முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இடம் பெறுகின்றனர் மீதி இடங்கள் தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாததால் பின்னடைவு பணியிடங்களில் இப்போதும் உள்ளது.

அடுத்து தொழிற்கல்வி மற்றும் அறிவிய பிரிவில் படித்த மாணவர்களின் மதிப்பெண்கள் பற்றிய விவாதம்...

ஒரு அறிவியல் பிரவில் பயின்ற மாணவர் அனைத்துவகை பாட பிரிவுகளையும் தேர்ந்தெடுத்து படிக்க முடியுமல்லவா?

ஆனால் ஒரு தொழிற்கல்வி பிரிவில் பயின்ற மாணவர் தமிழ் , ஆங்கிலம் இவை இரண்டைத்தான் அதிகம் தேர்ந்தெடுக்க முடியும் அப்படியிருக்க மற்ற பாடங்களில் அவர்களுக்கான வாய்ப்புகளில்லை அதனால் அவர்கள் இந்த இரண்டு பாடங்களில் தான் போட்டியிடுவர்... இதை எப்படி தவிர்க்க முடியும்...

அடுத்து TET யில் 85 மதிப்பெண் பெற்றவருக்கு வேலை 100 பெற்றவருக்கு வேலை இல்லை என்ற கேள்வி

இதிலும் நாம் சில விஷயங்களை பார்க்க வேண்டும்

ஒருவர் BC அல்லது OC பிரிவில் உள்ளவரை SC ,ST பிரிவினருடன் ஒப்பிட கூடாது அவர்கள் பிரிவில் தேர்ச்சி பெற்ற நபர்களின் எண்ணிக்கை மிக குறைவு... ஏன் தேவைப்படும் தேர்ச்சி பெற்ற நபர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே தேர்ச்சி பெற்றிருக்கும் போது குறைந்த மதிப்பெண்ணான 82 எடுத்தவருக்கே கிடைக்கும்...

அடுத்து தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாட பிரிவுகளில் காலியிடங்களின் எண்ணிக்கை மிக குறைவு அதிலும் அதிக இடங்கள் SC, ST பிரிவினரின் பின்னடைவு இடங்களில் சென்று விடுகிறது மீதி இருக்கின்ற குறைந்த இடங்களில் தான் அனைவரும் போட்டியிடுவர் அதனால் மதிப்பெண்கள் அதிக முள்ளவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவர்...

போராட்ட களத்தில் கருத்துக்களை முன்வைத்த நபர்களில் எத்தனை பேர் வயதில் மூத்தவர்கள் இளம் வயதிலுள்ள நபர்களே அதிகமாக உள்ளனர் அப்படியிருக்க நாங்களும் அவர்களுடைய காலத்தில் தானே படித்தோம், அதில் என்ன அதிக வேறுபாடு இருக்க போகிறது...

அது மட்டுமில்லாமல் +2 வில் இரண்டு (2) மதிப்பெண் வெய்ட்டேஜாக பெற 240 மதிப்பெண்கள் பெற வேண்டும்

அதே TET யில் 5 மதிப்பெண்கள் பெற்றாலே இந்த (2) இரண்டு மதிப்பெண்கள் வெய்ட்டேஜாக கிடைக்கும் உண்மையில் TET யில் ஒருவர் பெறும் மதிப்பெண்ணே அவரது வேலை வாய்ப்பை உறுதி செய்கிறது....

அடுத்து அவர் கேட்டது 118 மதிப்பெண் பெற்ற எனக்கு வேலையில்லை என்று சரி அதை பற்றி விரிவாக பார்ப்போம்...

118 மதிப்பெண்ணுக்கு வெய்ட்டேஜ்

118/150 x 100 = 78.66

78.66 இதை வெய்ட்டேஜ் மதிப்பெண்ணில் 60 க்கு மாற்றினால்

78.66 x 60/100 = 47.2 அவருக்கு 60 மதிப்பெண்ணில் கிடைக்கும் வெய்ட்டேஜ்

அப்படியிருக்க அவர் தனது முந்தைய படிப்புகளில் 50% சராசரியாக பெற்றிருந்தால் 40 க்கு 20 மதிப்பெண்ணை வேயட்டேஜாக பெறுவார்

அனைத்திலும் 60% பெற்றிருந்தால் 24 மதிப்பெண்கள் வெய்ட்டேஜாக பெறுவார்

அப்போது அவருடைய வெய்ட்டேஜ்

47.2 + 20 = 67.2 ஆகவோ அல்லது

47.2 + 24 = 71.2 ஆகவோ இருக்கும்

யோசித்து பாருங்கள்

அடுத்ததாக அவர்கள் சொல்லிய காரணம் தற்போதுள்ள மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது... நாங்க படிக்கும் போது அவ்வாறில்லை...

தற்போது படிக்கும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க காரணம் என்ன?

அவர்களுக்கு படிக்காமலே அல்லது தேர்வு சரிவர எழுதாமலே மதிப்பெண்களை வாரி வழங்குகின்றார்களா?

ஏன் இப்போதும் தேர்வில் 600 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களும், தேர்வில் தோல்வியடையும் மாணவர்களும் இல்லவே இல்லையா? இருக்கத்தானே செய்கிறார்கள்....

அவர்கள் சொல்லியது உண்மையென்றால் எந்த ஒரு மாணவனும் 1000 மதிப்பெண்களுக்கு குறைவில்லாமல் எடுப்பார்களல்லவா? தேர்வில் தோல்வி என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்குமே...

மாணவர்களை படி, எழுது என்று சொல்ல வேண்டிய அவசியம் ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் இல்லாமல் போய்விடுமே...

தயவு செய்து அவர்கள் கடினப்பட்டு உழைத்து பெற்ற மதிப்பெண்களை ஆசிரியர்களாக இருந்து கொண்டு நீங்களே இப்படி தரம் தாழ்த்திப்பேசலாமா... அந்த ஒவ்வொரு 1000 மதிப்பெண்களுக்குப் பின்னும் ஒவ்வொரு மாணவன் மற்றும் ஆசிரியரின் உழைப்பு உள்ளது வெறுமனே அவர்களுக்கு மதிப்பெண்கள் வாழங்கப்படவில்லை...

ஏன் 10 வருடத்திற்கு முன்பு யாரும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெறவில்லையா? உறுதியாக பெற்றார்கள்.. இதற்க்கு மிகசிறந்த உதாரணமாக இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சியில் சேர தேவைப்படும் கட்-ஆப் மதிப்பெண்னை எடுத்துக்கொள்ளலாம்.... அப்போது அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் கிடைக்க 1000 மதிப்பெண்களுக்கு மேல் இருந்தாலே போராட்டம் தான்.... கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான்...

அடுத்து அவர்கள் கேட்ட கேள்வி ஓட்டப்பந்தயத்தில் முதலில் ஒருவர் வேகமாக ஓடினார் அவருக்கு பரிசில்லை ஆனால் மெதுவாக வந்தவருக்கு பரிசு என்றார்கள்..

அவர்கள் வழியிலேயே பதில் சொல்கிறேன் ஒருவர் 3 கிலோமீட்டர் ஓட்டத்தில்

முதல் கிலோமீட்டரை 50 கிலோ மீட்டர் வேகதிலும்

அடுத்த இரண்டாம் கிலோமீட்டரை 40 கிலோமீட்டர் வேகத்திலும்

அடுத்த மூன்றாம் கிலோ மீட்டரை 30 கிலோமீட்டர் வேகத்திலும் கடந்து வெற்றி பெறுகிறார் என்று கொள்வோம்..

அப்படியிருக்கையில் அடுத்தவர்

முதல் கிலோமீட்டரை 10 கிலோ மீட்டர் வேகத்திலும்

அடுத்த இரண்டாம் கிலோமீட்டரை 20 கிலோமீட்டர் வேகத்திலும்

அடுத்த மூன்றாம் கிலோ மீட்டரை 40 கிலோமீட்டர் வேகத்திலும்

கடந்து நான் கடைசியில் அவர்களை விட 10 கிலோமீட்டர் அதிகவேகத்தில் வந்தேன் என்று சொல்லி பரிசை கேட்பது நியாம் என்போமா?

சரி ஒரு A என்ற கொத்தனார் அல்லது வேலையாள் எல்லா வேலை நாட்களிலும் குறைந்தளவே வேலை செய்கிறார் ஆனால் சம்பளம் பெறும் நேரத்தில் மட்டும் கடினமாக மூன்று மடங்கு பலத்துடன் உழைக்கிறார்.

ஆனால் இன்னொருவர் (B என்பவர்) அனைத்து நாட்களிலும் சிறப்பாக முன்னவரை விட இருமடங்கு அதிகமாக உழைக்கிறார்

இதில் முதலாம் நபர்தான் சம்பள தினத்தில் அதிகம் உழைத்தார் என்று அவருக்கு அதிக சம்பளமும் மற்றவருக்கு குறைந்த சம்பளமும் கொடுத்தால் நியாயம் என்பீர்களா?

தங்கள் பக்கமுள்ள நியாயத்தை கதை சொல்லி கேள்வி கேட்பதென்றால் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்... அதற்க்கான பதிலும் சரியாக சொல்ல வேண்டும் பதில் தவறாக இருக்க கூடாது..

ஒருபக்கத்தில் உள்ள நியாங்களை விசாரிப்பதால் அவர்கள் பக்கம் உள்ள கருத்துக்களை மட்டுமே மக்களுக்கு சென்றடையும் ஆனால் எதிர் தரப்பு நியாங்களையும் பரிசீலிக்க வேண்டுமல்லவா?

போராட்டம் என்பது அவர்கள் பக்கம் மட்டுமே நியாம் இருப்பது போல் ஊடகங்களால் காட்டப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்து போல் சொல்லப்படுகிறது... ஆனால் நாங்களும் அவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்று தான் அவர்களது தொடுத்த வழக்குகளால் பணிநியமன கலந்தாய்வு வரை சென்றும் பணிக்கு செல்ல முடியாமல் காத்திருக்கின்றோம்...
நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் வலிகளும் மனவருத்தங்களும் உள்ளது...

தேர்வான நண்பர்கள் அனைவரும் இரும்பாலான இதையத்தை கொண்டவர்களல்ல.. எங்கள் இதயமும் ரத்தமும், சதையும் சேர்ந்து தான் ஆனது...

முடிந்தால் எங்கள் பக்கமுள்ள நியாங்களையும் புரிந்துகொள்ளுங்கள்...

நாங்கள் ஒன்றும் படிக்காமலோ அல்லது ஏதோ குருட்டு தனமாக TET வினாக்களுக்கு பதிலளித்து விட்டு இங்கு தேர்ச்சி பெறவில்லையே.. அரசு சொல்லிய வெய்ட்டேஜ் முறைப்படியும் எல்லா நிலைகளிலும் சராசரியாகவாவது படித்து தான் இந்தமுறையில் தேர்வு பெற்றுள்ளோம்.. 

கடைசியாக ஒரு கேள்வி வயதானவர்கள் பணிக்கு தேர்வு பெறவில்லை என்கின்றீர்களே அனைவரும் தற்போது வேலையில்லாமல் இருந்தால் தானே இப்போது இந்த தேர்வில் போட்டியிடுவார்கள் ஆனால் 1/3 நபர்களாவது நிரந்தர பணியிளிருப்பார்கல்லாவா? அப்போது அவர்களின் எண்ணிக்கை குறையுமல்லவா?






தேர்ச்சிபெற்ற மொத்த நபர்களின் விவரங்கள்...






அநேகமாக இன்றுதான் இந்த வினாக்களை கேட்க்க கடைசி தினமாக இருக்கும்...

அதனால் மனம் திறந்து கேட்டுவிட்டேன்..

இதனால் யாரேனும் சிறுவருத்தமடைந்திருந்தாலும் மன்னித்துவிடுங்கள்..

நன்றி
என்றும் அன்புடன் 
ஸ்ரீ