தேனி: வெயிட்டேஜ் முறையில் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணிநியமனம் செய்ய வேண்டி தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனுவை பட்டதாரி ஆசிரியர்கள் அளித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பி.எட்., தேர்வில் வெற்றி பெற்றும்,பணி நியமன ஆணை கிடைக்கப்பெறாத சுமார் 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் பழனிசாமியிடம் வழங்கினர்.
இது குறித்து, பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது.



இதில் தேர்ச்சிபெற்று, பின்னர், அரசு அறிவித்த அரசாணை 71 ன்படி வெயிட்டேஜ் முறையில் தமிழகம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றோம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடந்து முடிந்தது.

இந்நிலையில்வெயிட்டேஜ் முறை கூடாது என வலியுறுத்தி சிலர் நீதிமன்றத்திற்கு சென்றதையடுத்து, எங்களது பணிநியமனம் தடை பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டள்ள எங்களை விரைவில் அரசு பணி நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.