ஒரு மனிதனுடைய வாழ்நாளில் முக்கிய இடம் பெறுவது அவன் ஒரு குடும்பத்தலைவனாக மாறும் நிகழ்வுதான்... அதுவரை தனது ஆசைகளுக்காக வாழும் அவன் முதன் முறையாக தன்னுடைய ஆசைகளை தவிர்த்து பிறரின் அதாவது தாய்,தந்தை,மனைவி/கணவன் மற்றும் பிள்ளைகள்,
ஆசைகளுக்காக  வாழத் தொடங்குகிறான்....அப்படி ஒரு வாழ்க்கையை அவன் வாழ அவனுக்கு மனதளவிலும்,பொருளாதார அளவிலும் ஒரு நல்ல அடிப்படைத்தேவை......

  ஒரு கட்டிடம் முழுமையடைந்து கம்பீரமாக நிமிர்ந்து நிற்க அதன் அடித்தளமே ஆனிவேர்...அதுபோல ஒரு மனிதன் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ அவனுக்கு ஆனிவேராக அரசு வேலை இருக்கக்கூடாதா??????

  சரியான பொருளாதார நிலையை பெற முடியாமல் ஒரு தந்தைக்கு நல்ல மகனாகவும்,ஒரு மனைவிக்கு நல்ல கணவனாகவும், தன் பிள்ளைகளின் கனவுகளை நினைவாக்கும் ஒரு நல்ல தந்தையாகவும் இருக்கமுடியாமல் காலத்தின் கோலத்தால் சிதைந்துவிடுகிறான்...இதற்கு காரணம் என்ன? சரியான வேலை கிடைக்காமை....அதை நாம் 27 வயதில் பெற்றால் அது என்ன தேச துரோகமா???????

  
  இளைஞர்களுக்கு ஒரு கனவாகவே இருந்த அரசு ஆசிரியர் பணி நம் தமிழக அரசால் தற்போது கைகூடி வருகிறது...ஆனால் அதை தட்டிவிட நினைக்கும் விசமிகளை நாம் வேர் அறுக்கவேண்டாமா??????????????