கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டதில் சுமார் 60,000 பேர் பணி நியமனத்துக்கான தகுதியை இழந்துள்ளனர். அதனால் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. பட்டதாரிகள் ஒவ்வொரு நாளும் சென்னையில் முக்கிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தபிரச்னை குறித்த வழக்கில், பணி நியமனத்துக்கு மதுரை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் சிலருக்கு அரசு பணி நியமனம் வழங்கியுள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றது என்று பட்டதாரிகள் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்தனர். இதை பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் விமர்சனம் செய்தனர். இதற்கு பட்டதாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு நேற்று காலை டிபிஐ வளாகத்துக்கு வந்த 35 பட்டதாரிகள், டிஆர்பி முன்பு கோஷம் போட்டனர். உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை கைது செய்தனர். மாலை 5.30 மணி அளவில் அவர்களை விடுவித்தனர்.
7 Comments
JUST 35 OUT OF 63000 பிறகு ஏன் இந்த அலப்பறை,அலும்பு ,லொள்ளு
ReplyDeleteநாளை நல்ல பொழுதாக நமக்கு விடியும் நண்பர்களே உத்வேகத்தோடு தயாராகுங்கள் உங்களின் ஆசிரியர் அறப் பணிக்கு
Good morning friends true effort will give good results always be calm
ReplyDelete35 பேர் சேர்ந்து 14000 பேர் வாழ்க்கையில் விளையாடுகிறீர்கள் . இதுதான் உண்மை
ReplyDeleteகாலைவணக்கம்
ReplyDeleteஇன்றையபொழுது ஏமாற்றாமல் பணிநியதடை உடைய இறைவனிடம் கையேந்துவோம்
இந்த போராட்டத்தை நடத்தும் கைப்புள்ள எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரிடம் ருபாய் இரண்டு லட்சம் பெற்றுள்ளார்
ReplyDeleteமேலும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த தொடர்ந்து இதை செய்யவும் என அந்த பிரமுகர் வலியுறுத்தல்
எனவே தான் அந்த கட்சியை சேர்ந்த நபர் 35 பேருக்காக வக்காளத்து வாங்குகிறார்
எங்களை வைத்து அரசியல் விளையாட்டு வேண்டாமே...
ReplyDeleteமயிறு அரசியல் ஆக்கியது நீங்க் தான் பொறாம பிடித்தவர்களே
Deleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..