"சோலார் பவர்' விவசாயத்தில் சாதித்த விவசாயி: இரு மாதங்களில் ரூ. 50 ஆயிரம் லாபம்

அருப்புக்கோட்டை:வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனைப்படி, "சோலார் பவர்' பம்ப் செட் விவசாயத்தில், காய்கறிகள் பயிரிட்டு, இரு மாதங்களில் ரூ. 50 ஆயிரம் லாபம் ஈட்டி சாதித்துள்ளார், காரியாபட்டி அருகே மேல துலுக்கன்குளத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன்.

விருதுநகர் மாவட்ட விவசாயம் மானாவாரி விவசாயம். மழை பெய்தால் தான் விவசாயம் நடக்கும். இருந்தபோதிலும் கிராமங்களில் தங்கள் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இருக்கின்ற ஓரளவு தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக, பம்ப் செட் மூலம் தண்ணீர் இறைக்க முடியாமல் போகிறது. இதை கருத்தில் கொண்டு, அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டியன் தலைமையில், விஞ்ஞானிகள் ஜெகதீஸ்வரி, ராமகிருஷ்ணன், தீபாகரன், வீரணன், அருண்கிரிதாரி, குமார் ஆகியோர் கொண்ட குழு, மாவட்டத்தில் உள்ள விவசாய சூழ்நிலைகளையும், நிலங்களையும் பார்வையிட்டனர். விவசாயிகளுக்கு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

இதன்படி, காரியாபட்டி அருகே மேல துலுக்கன்குளத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன், விஞ்ஞானிகள் ஆலோசனை பெற்று, தனது 15 ஏக்கர் நிலத்தில், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தில் இயங்கும் பம்ப் செட் மோட்டாரை பயன்படுத்தி லாப நோக்கத்துடன் விவசாயம் செய்து வருகிறார். நெல், கடலை பயிர்களை விதை பண்ணையம் செய்து வேளாண் துறைக்கு அளித்து வருகிறார். கத்தரி, தக்காளி, வெண்டை, சீனி அவரக்காய் காய்கறிகளையும் பயிரிட்டுள்ளார். கடந்த இரு மாதங்களில் 25 சென்ட் நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு 50 ஆயிரம் ரூபாய் வரை விற்று லாபம் பார்த்துள்ளார்.

ராமகிருஷ்ணன் கூறுகையில்,"" வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கூறிய ஆலோசனை கேட்டு, சோலார் பவர் மூலம் இயங்கும் பம்ப் செட் வாயிலாக விவசாயத்தில் நல்ல பலன் கிடைக்கிறது. சீசனுக்கு தக்கவாறு, காய்கறிகளை பயிரிட்டு, நல்ல நிலைக்கு விற்று வருகிறேன். தோட்டம் வைத்துள்ள விவசாயிகள் மின்சாரத்தை மட்டும் நம்பி இருக்காமல், சோலார் பவர் பயன்படுத்தி, விவசாயம் மேற்கொள்ளலாம்,'' என்றார்.இவரை தொடர்பு கொள்ள 95977 16650.

Post a Comment

6 Comments

  1. வாழ்க விவசாயம்...........
    வளர்க வையகம்............

    ReplyDelete
  2. வாழ்க விவசாயம்...........
    வளர்க வையகம்............

    ReplyDelete
  3. வாழ்க விவசாயம்...........
    வளர்க வையகம்............

    ReplyDelete
  4. வாழ்க விவசாயம்...........
    வளர்க வையகம்............

    ReplyDelete
  5. வாழ்க விவசாயம்...........
    வளர்க வையகம்............

    ReplyDelete
  6. எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய அம்மாவிற்கு இன்று நல்ல தீர்ப்பு கிடைக்க எங்கள் குலதெய்வ கோவிலில் குடும்பத்தோடு வேண்டிக்கொண்டிருக்கிறோம். எங்கள் தீர்ப்பு வந்ததும் கம்பீரமாக சிங்கம் போல் தமிழகம் திரும்ப இறைவனை வேண்டுகிறோம்.
    எங்களது இதயத்தில் குடியிருக்கும் அம்மாவிற்கு எந்த நாளும் வெற்றியே....
    __/\__

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..