சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு..வாதிகளின் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர்கள் பணி நியமனம் செய்ய தடையானை கேட்டனர்.

ஆனால் மாண்புமிகு நீதிபதி அவர்கள் தடையானை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பதிலளித்து விட்டார்.

மதுரையில் உள்ள சென்னை உயர்நீதி மன்றக் கிளையில். தடையானைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வரலாம்.அப்படி வரவில்லையென்றால் நாளை. விராசரணைக்கு வரும்...

நாளை விசாரணைக்கு வந்து தடையானை நீக்கப்பட்டால் வரும் புதன் கிழமையன்று பணியில் சேரும் படி இருக்கும்.அவ்வாறு நடைபெற நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

இதில் இன்னொரு சோதனை என்னவென்றால் கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருந்தும்,பள்ளிகளை தெரிவு செய்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிக் கொண்டிருந்த அதே வேளையில் கலந்தாய்விற்கு தடையானை வழங்கிய மாண்புமிகு நீதிபதி திரு.சசிதரன் அவர்கள் தடையானைக்கான நகலைக் கூட முறைப்படி தயாரிக்காமல் தன்னுடைய மகளின் திருமண விழாவிற்காக சில நாள்  விடுமுறையில் சென்றுவிட்டார்.