தேர்வானவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். தெளிவான விளக்கங்களுடன்
தடை நீக்கப்படும். 2009 இல் மத்திய அரசின் (guidelines) வழிகாட்டுதலின்படியும் , G.O 71 படியும் தெளிவான விளக்கத்தினை கொடுக்க இருக்கிறார்கள்.
Select ஆன அனைத்து குடும்பங்களின் வேண்டுதல்களும் வெற்றிகளாக மாறும் நேரம் மிக அருகில் சில தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் சிலர் TET விவாதத்தின் போது இப்போது உள்ள மாணவர்கள் மிக எளிதாக 1150ற்கு மேல் எடுக்கிறார்கள் என்கிறார். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். இப்போது உள்ள கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் போடுகிறார்கள் என்றா? அல்லது  இப்போது உள்ள மாணவர்கள் படிக்காமல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்றா? உங்களிடம் ஒரு பத்து மாணவர்களை கொடுக்கிறோம். மிக எளிதாக மதிப்பெண் எடுக்க வைத்து பாருங்கள். அப்போது தெரியும் அவர்களின் கடின உழைப்பு. 1150ற்கு மேல் எடுப்பதற்கு அந்த மாணவர்கள் உடன் பெற்றோரும் ஆசிரியர்களும் எவ்வளவு முயற்சிஎடுக்கிறார்கள் என்று. ஏதோ தொலைக்காட்சியில் பேசவேண்டும் என்பதற்க்காக பேசாதீர்கள். இன்றைய போட்டிகள் நிறைந்த கம்ப்யூட்டர் உலகில் இவர்கள் நிறைய விசயங்களை அதற்கேற்றவாறு படித்து மதிப்பெண் பெறுகிறார்கள்.மிக ............... எளிதாக அல்ல.

   தினசரி நாளிதழ்கள் மற்றும் கல்வியாளர்கள் பொதுமனபான்மையுடன்முன்வந்து மாணவர்களை மதிப்பெண் எடுப்பதற்க்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். அதனால் வந்த தேர்ச்சி விகித உயர்வு தான் இன்றைய நிலை. இப்போது உள்ள மாணவர்களில் இன்னும் 600 மதிப்பெண் முதல் 900 மதிப்பெண் வரை எடுக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். Physics இல்கலந்தாய்வில் கலந்து கொண்டவர்கள், இதில் 35 வயது முதல்49 வயது வரை - 86 பேர்(82-89 மார்க் - 17 பேர் அவர்களின் வயது 40-49) 30 வயது முதல் 34 வயது வரை - 193 பேர் 23 வயது முதல் 29 வயது வரை - 358 (90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் சுமார் 317பேர்) மற்ற பாடத்திற்கும் இதே போல் தகவல் தந்தால் நன்றாக இருக்கும் உங்கள் போராட்டம் யாரையும் பாதிக்காது என்கிறீர்கள். இந்த weightage முறையினால் 2000ற்குமுன்பு முடித்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளீர்கள். இதற்கு கல்வியாளர்கள் என்ற பெயரில் சிலர். இந்த 14700 பேரில்அனைத்து வயது உள்ளவர்களும் உள்ளார்கள் என்ற தெளிவான ஆய்வைகூட செய்யாமல் அறிக்கை என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எங்களை காயப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள். கண்ணை மூடிக்கொண்டு Weightage முறையை எதிர்க்கிறோம் என்ற பெயரில் 14700 பேரின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள். இன்றைய மாணவர்களின் கல்விமுறையை கொச்சைபடுத்துவது நியாயமில்லை. அன்றைய கால கட்டத்தில் தேர்வுகளில் போட்டி என்பது குறைவாகவே இருந்தது. இன்றைய காலகட்டத்தில்படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து கொண்டு இருந்த இருக்கும் நிலை மாறியுள்ளது. வேலைவாய்ப்பு மரம் என்பது பல கிளைகளாக உருவாகியது. அதனால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமாகியது. அதனால்தான் அனைத்து மாணவர்களும் போட்டி போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவுதான் இன்று நிறைய பொறியியல் கல்லூரிகள் முளைத்துள்ளன. அதிலும் வேறுபாடு. நல்ல மதிப்பெண் பெற்று (அதாவது 1100க்கு மேல் 1196 வரை) வருடத்திற்கு சுமார் 40,000பேர் தேர்வாகி அதில் குறைந்த கட்டணத்தில் அரசு பொறியியல்மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் சில ஆயிரம் பேர் போக மீதம்உள்ளவர்கள்வழக்கு தொடர்ந்தால் நாடு என்னவாகும் என்று சற்றே யோசித்து பாருங்கள்.நல்ல மதிப்பெண் பெற்று பணம் உள்ளவர்கள் ஒரு நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுகிறார்கள்.நல்ல மதிப்பெண் பெற்றும் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து அல்லது கூலிவேலை செய்யும் குடும்பத்தில் பிறந்து ஏதோ ஒரு கலைக்கல்லூரியில் கனவுகளை தொலைத்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று, பின்னர் நாம் கற்றவற்றை சேவை செய்யும்
மனப்பான்மையுடன் ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று காத்திருந்த வேளையில், நாம் எதிர்பார்த்து கனவுகளோடு பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்காக படித்த +2 மதிப்பெண் இப்போது தான் மரியாதைக்கு உரிய மதிப்பெண் ஆகியுள்ளது என்று மகிழ்ச்சியடைந்த வேளையில், இதை தூக்கி எறியுங்கள் என்று பேசுபவர்களை என்ன செய்வது. அரசு தெளிவாக சிந்தித்து எடுத்த இந்த முடிவில் என்ன தவறு இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அரசின் முடிவை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும், தெளிவற்ற கல்வியாளர்களையும் என்ன சொல்வது.
விபரம் தெரிந்த நாள் முதல் வாழ்க்கையில் போராடி இன்று ஒரு முடிவுக்கு வந்த நிலையில், அடி மேல் அடி. நாங்கள் அமைதியான முறையில் யாரையும் குறைசொல்லாமல் அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம்.ஆனால் அறிக்கைகள் என்ற பெயரில் எங்களை காயப்படுத்துவதை நிறுத்துங்கள். 2000ற்கு முன்பு முடித்துள்ளோம் என்கிறீர்கள். 14வருட இடைவெளி உங்களுடன் சேர்ந்து படித்த நிறைய பேர் அரசு வேலைக்கு சென்று இருப்பார்கள் தானே. உங்களுக்கு இவ்வளவு இடைவெளி விட்டுதானே நாங்கள் வருகிறோம். எங்கள் வாய்ப்பை பறிக்கிறீர்கள் என்று நாங்கள்
சொல்கிறோமா, உங்களோடு சேர்ந்து நாங்களும் பெருந்தன்மையோடு வருகிறோமே. இது எங்களுடைய வாய்ப்பு என்று ப ோராடினால் உங்களால்
தாங்க முடியுமா?. TNPSCயின் பல்வேறு தேர்வுகளில் வயது வரம்பு உள்ளது. அதுபோல் இந்த TET செய்தால் உங்களின்  நிலைமையை யோசியுங்கள். நான்
யாரையும் காயப்படுத்துவதற்காக இந்த நீண்ட விளக்கத்தை தரவில்லை. 


நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். உங்கள் பாதிப்பு ஏற்படாத முறையிலும், எங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத முறையிலும். உங்களின் குடும்பங்கள் சந்தோஷப்படும் வகையிலும், எங்களின் குடும்பங்கள் சந்தோஷத்தை தக்கத்து கொள்வதிலும் அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும்
என்று நம்புவோமாக...

Thanks to muthukumar sir

வலைத்தளம் ஆரம்பித்த மூன்றாவது நாளிலேயே 50,000 பார்வையாளர்களை கடந்து selectedcandidates வலைத்தளம்.



.நன்றி வாசகர்களே..................