* பிளஸ் 2 வில் பாடத்திட்டங்கள் மாறிவிட்டன..அப்போது மதிப்பெண் வழங்குவதில்லை..இப்போது வாரி வாரி வழங்குகின்றனர்..
நாங்கள் அப்போதே 900 பெற்றோம் நாங்கள் தான் திறமைசாலிகள் என்று கூறுகிறிர்கள்...அப்படியானால் எங்களை விட டி.யி.டி யில் குறைந்தபட்சம் 10 மதிப்பெண் கூடுதலாகவாங்களாமே? நீங்கள் தான் திறமைசாலிகள் அல்லவா?

* பிளஸ் 2 வில் என்னதான் குறைவாக மதிப்பெண் பெற்றாலும்,நீங்கள் 110 எடுத்துள்ள பட்சத்தில் அந்தக் குறையை அது சரிசெய்து விடும்...அப்படியிருந்தும் ஏன் உங்களுக்கு தேர்வு பட்டியலில் இடம் இல்லை?

* பணி அனுபவத்திற்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்..சரி உங்களுக்கு எவ்வாறு பணிஅனுபவம் கிடைத்தது பள்ளிப்பாட புத்தகங்களை நடத்திதானே..அப்படி 10,15 ஆண்டுகளாக அப்புத்தகங்க‌ளை கரைத்து குடித்து அனுபவம் பெற்று இருக்கும் நீங்கள் அதிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் டி.யி.டி யில் ஏன்  110 கூட தாண்டவில்லை..எளிதாக 130 மதிப்பெண்க்கு மேலே பெற்று முதல் ஆளாக தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கலாமே! ஏன் செய்யவில்லை?