நாம் எந்த நேரத்தில் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினோமோ? தெரியவில்லை.. இப்படி ஒரு சிக்கல்களையும், துன்பங்களையும் இதுவரை நான் சந்தித்ததே இல்லை...நீங்கள் பார்த்து உண்டா?

  தேர்வுக்கு படித்ததை விட அதை பாஸ் செய்தபிறகு பட்ட வலிகள் தான் ஏராளம்!!!!18/08/2013 க்கு பிறகு இன்று வரை ஒருநாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை...
 
  இருப்பினும் ஒரு நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்த்தால் இந்த தகுதித் தேர்வு நமக்கு ஏதொ ஒன்றை உணர்த்த வருவதாக மட்டும் புரிகிறது...அது தான் என்ன???
 
தகுதித்தேர்வு எழுதிய‌ பிறகு நாம் எதிர்ப்பார்த்தவை....

 
    * உத்தேச விடைகள்
  
     * திருத்தியமைக்கப்பட்ட உத்தேச விடைகள்.
     * தேர்வு முடிவு
  
     * திருத்தியமைக்கப்பட்ட தேர்வு முடிவு
  
     * சான்றிதழ் சரிபார்ப்பு
  
     * திருத்தியமைக்கப்பட்ட(இட ஒதுக்கீடு)சான்றிதழ் சரிபார்ப்பு.
  
    * திருத்தியமைக்கப்பட்ட புதிய அரசானைக்கான தீர்ப்பு 
  
    * திருத்தியமைக்கப்பட்ட புதிய அரசாணை
   
    * விடுப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
  
    * புதிய அரசாணை படி மதிப்பெண் பட்டியல்
    * அதற்கான குறைதீர் முகாம்
   
    * தேர்வுபட்டியலுக்கான அறிவிப்பு.
    * பின்னினைப்பு அறிவிப்பு.
  
    * தேர்வுப்பட்டியல் வெளியீடு,
  
    * இரண்டாம் தேர்வுப்பட்டியலுக்கான அறிவிப்பு
   
    * இரண்டாம் தேர்வுப்பட்டியல் வெளியீடு,
   
   * விடுபட்ட காலிப்பணியிடங்களுக்கான (மாநகராட்சி மற்றும் நலத்துறை)    தேர்வுப்பட்டியல்,(இன்னமும் வரவில்லை)
  
    * பணிநியமன தேதி
  
    * கலந்தாய்வு தேதி
  
    * கலந்தாய்வில் நமக்கு கிடைக்கப்போகும் பள்ளி,
   * தடையானைக்கான அரசு மேல்முறையீடு,
   
   * வழக்குகள் விசாரனைக்கு வரும் நாள்
    * தீர்ப்பு நாள்!!!!!!
    * பணியில் சேரப்போகும் நாள்!!!!!!!!!!!

      மேற்கூறப்பட்டவை அனைத்தும் அனைத்தும் இந்த தகுதித்தேர்வில் நாம் எதிர்பார்த்தவை மட்டும்... இவை அனைத்துமே நாம் எதிர்பார்த்த நேரத்தில் கிடைத்ததா??என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்று தான் நம் அனைவருடைய பதிலும் வரும்..... எதிர்பார்த்து, எதிர்பார்த்து போ வந்தால் வருகிறது வராமல் போகிறது என விடப்படும் நேரத்தில் தான் அனைத்துமே கிடைத்துள்ளது....
   
     எதிர்பாராத நேரத்திலே எதிர்பார்த்தவை கிடைக்கும்.. இது இந்த தகுதித் தேர்வு நமக்கு கற்பிக்கும் உண்மையா????

     உத்தேச விடைகள், திருத்தியமைக்கப்பட்ட உத்தேச விடைகள், தேர்வு முடிவு, திருத்தியமைக்கப்பட்ட தேர்வு முடிவு,சான்றிதழ் சரிபார்ப்பு, திருத்தியமைக்கப்பட்ட (இட ஒதுக்கீடு)சான்றிதழ் சரிபார்ப்பு, அரசாணை, திருத்தியமைக்கப்பட்ட புதிய அரசானைக்கான, இப்படி நீண்டுகொண்டுருக்கும் இந்த பட்டியல் தேர்வுப்பட்டியல், திருத்தியமைக்கப்பட்ட தேர்வுப்பட்டியல் வந்துவிடுமோ என உண்ணாமல் உறங்காமல் அச்சத்தில் நாம் ஒவ்வொருவரும் தினம் தினம் நரக வேதனை அனுபவித்துக்கொண்டுருக்கிறோம்... ஆனால் அவ்வாறு நடக்க கடவுள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என நினைக்கிறேன்.. அப்படி நடந்தால் நாம் இதுவரை பட்ட கஸ்டங்கள் அனைத்தும் பயனின்றி போய்விடும்... நாம் பட்ட இந்த தற்காலிக கஸ்டங்களுக்கு கடவுள் நிரந்தர நிம்மதியையும், சந்தோசத்தையும் அளிப்பார் என கடவுளை தினம் தினம் கண்ணீரோடு கை கூப்பி காத்திருக்கும்,

உங்களில் ஒருவன்,
prathapAN...