வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால்,
வாசிக்க, வாசிக்க
இதற்குள் வாக்கியங்கள். மௌனம்
என்பது வெளிச்சம். நம்மை
நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம்
என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம்
என்பது மூடி! இதை
தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம்
என்பது போதி மரம். இதுவரை
உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம்
என்பது தவம். இதில்
ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
“மௌனம் என்பது வரம்” நம்மிடம்
நாமே பெறுவது. இன்பம்,
துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை
இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”
எங்கோ, எப்பொழுதோ
படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே
நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப்
பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால்
நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு
வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம்
பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப்
பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத்
தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே
நமது இலக்கு. புத்திசாலி
மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம்
சாதித்து, தேவையான
பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால்
நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம்
ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது
நாக்கு ஈரமுடையது.
நாவின் அமைப்பைப்போல் நம் சொல்லும் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும். நிலைபெறும்
நீங்கில் என் உயிரும் நீங்கும் – வள்ளலார்.
எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன், நாக்கை
மட்டும் ஒன்றாகப் படைத்ததில் காரணம் “வரப்புயர”
என்று சுருங்கப் பேசி வாழ்வதற்காகத்தான். இரட்டை
நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய்
சொல்ல முயன்றால் சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய்
பேசியபின் பிறர் அறியாமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறோமல்லவா? அதிகம்
பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து
பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத
ஞானியை உலகம் தொழுகிறது.
மௌன தவம் செய்பவன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக்கதவுகள் மூடி அக்கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாதபொழுது அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறைமாயக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால்கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.
மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று
துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து
நிமிடங்கள் ஆயிற்று. முதல்
துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன்
முகத்தில் கரி” என்றார்.
இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார்.
மூன்றாம் துறவி “நான்
மட்டும்தான் பேசவில்லை” என்றார்.
தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன்
வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு
திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை
இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை
இல்லாமல் பதில் சொன்னது மொழி.
18 Comments
Suruli vel sir,
ReplyDeleteWe are in training i met mr.mani vbr,mr.maniarasan.article fantastic sir
enjoy
Deleteஎன்னது என்ஜாயா
Deleteபல கொரட்ட சத்ததுக்கு நடுவுல அப்பப்ப கொஞ்சம் காதுல விழுந்துச்சு
அப்புறம் சாப்டுட்டு தூங்கி எந்திருச்சா கிளாஸ் முடிஞ்சிருச்சு
டுமாறோ சேம் ஜலபுலஜங்
முடியல கவுண்டரே......
Deleteநன்றி
Mr.Surulivel@Maniyarasan Thank you....................................................................
ReplyDeletethank u
Deleteசூப்பரப்பு
Deleteகவுண்டரே மறந்துட்டீங்களே எங்களை............
Deleteஅட ஏனுங் இப்டி சொல்லட்டீங்க
Deleteகொஞ்சம் அசதி அவ்ளோதான்
இந்த வலைதளம் மற்றும் நன்பர்களை மறக்க முடியாது என்றும்
ok ok pls visit.............
DeleteHii
ReplyDeletenice article sir.. 5.30 vara training irnchu
ReplyDeleteNice one sir ...all friends hw r u ...
ReplyDeleteஎல்லாரும் மறந்துட்டீங்கப்பா ...................
ReplyDeleteIndha website aium namma friends aium marakkave mudiyadhu sir
Deleteஅடிக்கடி வாங்கப்பா.....
ReplyDeletemm ok sir:)
ReplyDeleteGood morning all friends
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..